தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆதிச்சநல்லூர்

  • மாங்குடி

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    மாங்குடி ஓர் இடைக்கற்கால, பெருங்கற்கால, சங்ககால வாழ்விடமாகும்.

    அமைவிடம்

    மாங்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கேரவில் வட்டத்தில் திருநெல்வேலியிலிருந்து 56 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

    அகழாய்வுகள்

    மாங்குடியில் தமிழக அரசுத் தொல்லியல் துறை அகழாய்வு செய்துள்ளது. இங்கு இடைக்கற்கால மற்றும் பெருங்கற்காலச் சான்றுகள் கிடைத்துள்ளன. இவ்விரண்டு காலங்களின் சான்றுகளும். அடுத்தடுத்த மண்ணடுக்குகளில் கிடைப்பது சிறப்பானதாகும். வரலாற்றுத் துவக்கக்காலச் சான்றுகளும், மணிகளும் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பாறிப்புள்ள பானை ஓடுகளும் இங்கு கிடைத்துள்ளன.

    இங்கு “குரும்மாங்கள ஆதன் (யி) யானை (பொ)” என்ற எழுத்துப்பொறிப்புள்ள பானை ஓடு ஒன்று கிடைத்துள்ளது.

    தொல் தாவரவியல் ஆய்வுகள்

    இங்கு அகழாய்வு செய்யப்பட்ட மண்ணிலிருந்து அக்கால மக்கள் பயன்படுத்திய தாவரங்கள் குறித்த தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. பல்கலைக்கழகக் கல்லூரி, லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் டோரியன் ஃபூலர் பழங்காலத் தாவரங்களின் சான்றுளை இங்கு சேகரிக்கப்பட்ட மண்ணிலிருந்து கண்டுபிடித்துள்ளார்.

    சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் மாங்குடி மருதனார் இவ்வூரைச் சேர்ந்தவர் எனக் கருதப்படுகின்றது.

    மேற்கோள் நூல்

    Ashok Vardhan Shetty, 2003. Excavations at Mangudi. Chennai. Dept. of Archaeology, Tamil Nadu.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:01:00(இந்திய நேரம்)