தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆதிச்சநல்லூர்

  • எடக்கல்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    எடக்கல் கேரள மாநிலத்திலுள்ள தொல்பழங்கால இடமாகும். இங்குள்ள பாறைவிடத்தில் பாறையின் மீது கோட்டுருவமாக வரையப்பட்டுள்ள பாறை கலைச் சின்னங்கள் உலகப் புகழ்பெற்றவையாகும். இவற்றை ஃபாசெட் என்பவர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டறிந்தார்.

    அமைவிடம்

    இந்த இடம் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுல்தான்பத்தேரிக்கு அருகில் அம்பலவயல் கிராமத்திற்கு அருகே உள்ளது. இது ஒரு மலைப்பாங்கான இடமாகும். இங்குள்ள பாறையில் மனித உருவங்கள், சக்கரம் மற்றும் பலவிதமான குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. இவை இரும்புக் காலத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இங்குள்ள சில குறியீடுகள் சிந்துவெளி நாகரிக முத்திரையில் உள்ளவற்றை ஒத்துள்ளதாகக் கருதப்படுகின்றது. இப்பகுதியில் பல பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன.

    தமிழ் பிராமி கல்வெட்டுகள்

    எடக்கல்லில் சில தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன. இது சேrவம்சத்தினரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.

    “கடும்மிபுத சேர” “கோபூதி வீர”

    “ஒபனப வீர” “கோவாதான்”

    ஆகிய பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் இங்குள்ளன. இங்கு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டும் உள்ளது.

    மேற்கோள் நூல்

    Fawcett, F. 1901. Note on Rock enqravirgs Indian Antiquary 30, 409-421.

    Mahadevam, I 2003. Early Tamil Brahmi Epigraphy. Cre A, Chennai.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:08:45(இந்திய நேரம்)