தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • கூர் முனைக் கருவிகள்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    கூர் முனைக் கருவிகள் ஆங்கிலத்தில் "points" எனப்படும். இவை கல்லால் செய்யப்பட்ட கருவிகள் ஆகும். கற்களை உடைத்து கூரிய முனையுடன், இக்கருவிகள் உருவாக்கப்படுகின்றன. இவை மேலைப் பழங்கற்காலத்திலும், பின்னர் (இடைக் கற்காலத்திலும்) நுண்கற்காலத்திலும் செய்யப்பட்டன.

    மேலைப் பழங்கற்காலக் கூர்முனைக் கருவிகள் அளவில் பெரியதாகவும், நுண்கற்காலத்தில், இவை அளவில் மிகச் சிறியதாகவும் காணப்பட்டன.

    இவை கம்புகளில் வைத்துக் கட்டப்பட்டு ஈட்டிகள் போலவும், அம்பு முனைகள் போலவும் பயன்படுத்தப்பட்டன. இக்கருவிகள் வில்-அம்பு தொழில் நுட்பத்துடன் தொடர்புடையவை. இவை வேட்டையாடுவதற்கு மிகவும் பயனுள்ளவையாகும்.

    இவை சில நேரங்களில், இலை வடிவத்திலும் காணப்படும். சில கூர்முனைகள் அடியில் (கீழ்ப் பகுதி) ஒரு கம்பில் (குச்சியில்) வைத்துக் கட்டப்படுவதற்கு ஏற்றாற் போல் ஒரு நீட்சி உடைய பகுதியைப் (tang) பெற்றிருக்கும். இவ்வாறு கட்டப்பெற்றால் இவற்றை அம்புகளைப் போலப் பயன்படுத்தலாம்.

    இவை தமிழகத்தில் உள்ள தொல்பழங்கால இடங்களில் கிடைத்துள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:07:15(இந்திய நேரம்)