தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • அகர ஒரத்தூர்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    அகர ஒரத்தூர் ஒரு வரலாற்றுத் துவக்கக் கால ஊராகும். ஓரத்தூர் என்பது பழைய ஊராகும்.

    அமைவிடம்

    இவ்வூர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிக்கல் என்ற ஊருக்கு அருகில் உள்ளது.

    தொல்லியல் சான்றுகள்

    இவ்வூரை அடுத்துள்ள பெரிய ஒரத்தூரில் இரும்புக்கால மக்கள் இருந்ததற்கான வாழ்விடச் சான்றுகள் கிடைக்கின்றன. இங்கு கருப்பு-சிவப்பு மற்றும் கருப்பு வகைப் பானையோடுகள் கிடைக்கின்றன.

    ஈமச்சின்னங்கள்

    அகர ஒரத்தூரில் பெருங்கற்கால ஈமத்தாழிகள் பல காணப்படுகின்றன. இத்தாழிகளில் மனிதர்களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு கிடைத்த எலும்புக்கூடு மாந்தவியல் வல்லுநரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள தாழிகள் மண்ணில் சுமார் 90 செ.மீ ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. இங்கு மண் எடுப்பதற்காகத் தோண்டப்பட்ட குழியில் பல தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இத்தாழிகளில் கருப்பு–சிவப்பு, சிவப்பு மற்றும் கருப்புப் பானை வகைகள் காணப்படுகின்றன. இங்கு ஒரு சில இரும்புக் கருவிகள் கிடைத்துள்ளன. தமிழகத்தின் கோயம்புத்தூர் திண்டுக்கல், ஈரோடு பகுதிகளில் காணப்படுவது போல் இங்கு கார்னீலியன் எனும் உயர்வகை செங்கல் மணிகள் காணப்படாதது வியப்பிற்குரியதாகும்.

    மேற்கோள் நூல்

    Rajan.K, V.P.Yatheeskumar, S.Selvakumar, 2001, eatahgen of Archaeological Sites in Tamil Nadu, Thanjavur, Heritage India Trust.

    Veena Mushrif, V.Selvakumar and S.Gaurishankar, 2011. Human Skeletal Remains From the Iron Age urnburial site of Aara Orathur. Man and Envionment 37 (1) 51- 56.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:11:43(இந்திய நேரம்)