தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழகத்தில் கிரேக்கர் காசுகள்

  • தமிழகத்தில் கிரேக்கர் காசுகள்

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    தமிழகத்து நறுமணப் பொருட்களின் சுவையையும் ஏனைய ஏற்றுமதிப் பண்டங்களின் பெருமையையும் கிரேக்கர்களின் மூலமே ரோமாபுரி மக்கள் அறிந்து கொண்டனர். தமிழகத்தின் அயல்நாட்டு வணிகம் பொ.ஆ.மு. 7ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. கிரேக்கர்கள் தமிழகத்துடன் பொ.ஆ.மு. 5 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதற்கொண்டு வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வணிகர்கள் மூலம் பல தமிழ்ச் சொற்கள் கிரேக்க மொழியில் நுழைந்து இடம்பெற்றுள்ளன. “அரிசி”, “இன்ஜிவேர்”, போன்ற சொற்கள் “அரிஸா”, “ஜின்ஜிபேராஸ்” என்று அழைக்கப் பெற்றன. ரோமானியர்கள் தமிழகத்திற்கு வருவதற்கு வழிக்காட்டியாகத் திகழ்ந்த கிரேக்கர்கள் ரோமானியர்களுக்கு முன்னரே பொ.ஆ.மு.300 ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாட்டுடன் கடல்வழி வணிகத்தின் ஈடுபட்டுள்ளதற்கு இவர்களது காசுகளே சான்று பகர்கின்றன. இன்றைய கிரேக்க நாட்டு காசுகளும் கிரேக்க நாட்டின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள திரேஸ், பாரசீக வளைகுடாவின் வட பகுதியிலுள்ள ஈராக் பகுதியிலுள்ள பண்டைய செலுசிட், கிரேக்க நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கீரிட். மத்திய பகுதியில் அமைந்துள்ள தெஸ்ஸாலி, பண்டைய ஃபோனிசியா (இன்றைய சிரியா), யூத நாடு இப்பகுதிகளின் காசுகளும், தமிழ்நாட்டில் கரூர் ஆற்றுப்பகுதியில் கிடைத்துள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:41:56(இந்திய நேரம்)