தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேர மன்னன் மாக்கோதைக் காசு

 • முதலாம் இராஜாதிராஜ சோழன் காசுகள்

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  உலோகம்: தங்கம், மாற்றுக் குறைந்த தங்கம்.
  காலம் : பொ.ஆ.1018-1054
  வடிவம் : வட்டம்

  முதலாம் இராஜாதிராஜசோழன் (பொ.ஆ.1018-1054)

  முதலாம் இராசேந்திரசோழன் (1012-1044) ஆட்சிப் பொறுப்பேற்றான். சயங்கொண்டசோழன், ஆகவமல்ல குலாந்தகன், கல்யாணபுரம் கொண்ட சோழன், வீரராசேந்திரவர்மன், விசயராசேந்திரன் ஆகியன இவனது சிறப்புப் பெயர்கள்.

  முதலாம் இராஜாதிராஜசோழன் காசுகள்.

  காசின் முன்புறம் நிற்கும் மனித உருவம், வளையம், பந்து, அதற்கு மேல் 4 வரியில் “ராஜாதிராஜ” எனும் நாகரி எழுத்துப்பொறிப்பு, பின்புறம் அமர்ந்த நிலையிலான மனித உருவம், கோடுகளாலான ஆசனம், வெண்கொற்றக்குடையின் கீழ் இரு விளக்குகளுக்கு நடுவே இடப்பக்கம் நோக்கி அமர்ந்த புலி, வெண்கொற்றகுடையின் கீழ் அமர்ந்த மனித உருவம் வலப்பக்கம் விளக்கு ஆகியவை காணப்படும். சில காசுகளில் காசின் முன்புறம் விளிம்பைச் சுற்றிலும் மலைநாடு கொண்ட சொளந் 35 என்ற தமிழ் கிரந்த எழுத்துப் பொறிப்பும், காசின் பின்புறம் நடுவில் புலி, இரு மீன்கள், வில் ஆகிய உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

   

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:52:52(இந்திய நேரம்)