தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆதிச்சநல்லூர்

  • சுத்துக்கேணி்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்

    சுத்துக்கேணி ஒரு பெருங்கற்கால, இரும்புக்கால இடமாகும். இங்கு ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இந்தியாவிலுள்ள ஈமச்சின்ன இடங்களில் இது சிறப்பானதொன்றாகும்.

    அமைவிடம்

    இவ்வூர் புதுச்சேரி மாநிலத்திலுள்ள காட்டேரிகுப்பம் என்ற ஊருக்கு அருகே அமைந்துள்ளது.

    தொல்லியல் சின்னங்கள்

    இது கசால் என்பவரால் 1950இல் அகழாய்வு செய்யப்பட்டது. இங்கு தாழிகள், கல்வெட்டுகள், கற்பதுக்கைகள் மற்றும் மற்குவைகள் காணப்பட்டன. இங்குள்ள ஓர் ஈமச்சின்னத்தில் அரிய தங்கத்திலான அணிகலன்கள் கிடைத்துள்ளன. .

    சுத்துக்கேணி தங்க அணிகலன்கள
    நன்றி - விக்கிமீடியா காமன்ஸ

    இவை பல மதிப்புமிக்க அணிகலன்களாகும். பெருங்கற்கால மக்கள் ரோமானிய வணிகத்தொடர்பின் விளைவாக, இந்த அணிகலன்கள் செய்வதற்கான தங்கத்தைப் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அரிக்கமேடு, இப்பகுதியில் இருந்த புகழ்பெற்ற ரோமானிய வணிகத் தொடர்புள்ள நகரம்/ துறைமுகம் என்பதை நாம் இங்கு நினைவில் கொள்வது அவசியமாகும். இங்கு தங்க மணிகள், பூக்கள் மற்றும் மாலைகளில் (கழுத்தணி) பயன்படுத்தப்படும் (Spacer) இடைவெளியிடும் அணிகலனின் பகுதியும் கிடைத்துள்ளன. இவை ஒரு கழுத்தணியின் பகுதிகளாகும். இவை பாரிஸ் அருங்காட்சியகத்தில் உள்ளன. இவற்றில் சில பாண்டிச்சேரி அருங்காட்சியத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

    மேற்கோள் நூல்

    D.P.Agrawal 2007, The Indans Civilization, An Interdisciplinaly Perspective, New Delhi, Aryan Books.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:00:00(இந்திய நேரம்)