தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சேர மன்னன் மாக்கோதைக் காசு

  • பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் காசுகள்

     

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    உலோகம்:வெண்கலம் அல்லது அதிக அளவு தகரம் கலந்த வெண்கலம்
    எடை் :0.520 - 2.750 கிராம் (தோராயமாக)
    வடிவம் : வட்டம்
    காலம் :பொ.ஆ. 590-630

    முதலாம் மகேந்திரவர்மன் (பொ.ஆ.590-630)

    இவன் சிம்மவிஷ்ணுவின் மகன் ஆவான். இவன் காலத்தில் பல்லவப் பேரரசு வடக்கே கிருஷ்ணையாற்றிலிருந்து தெற்கே காவிரியாறு வரை பரவியிருந்தது. இவனுக்குச் சுமார் 150 விருதுப் பெயர்கள் இருந்துள்ளன. பல்லவர் காசுகளில் முதலாம் மகேந்திரவர்மன் காலந்தொட்டே எழுத்துப்பொறிப்புக் காசுகள் கிடைக்கின்றன.

    காளை உருவம்
    மற்றும் ஸகலபாஜன
    எனும் பல்லவ கிரந்த
    எழுத்துப் பொறிப்பு
    சக்கரம்

    முதலாம் மகேந்திரவர்மன் காசுகள்

    இவன் வெளியிட்டுள்ள காசுகளில் பல்லவ கிரந்த எழுத்துக்களில் தனது விருதுப் பெயர்களைப் பொறித்துள்ளான். வம்பு, இலக்ஷித, பகாப்பிடுகு, உடுதி, தண்டிகலா, திவிர, சுரும்பு, சுழி, மமய, தர்ப்பவிஸ, உகா, ஸகலபாஜன, மஹாமேக, லலிதாங்குர, நஹிகாமுத்ரஹ, எரு, சரப, விதி ஆகிய விருதுப்பெயர்கள் பொறித்த காசுகளை இவன் வெளியிட்டுள்ளான்

    எழுத்துப்பொறிப்புக் காசுகளின் பின்புறம் அலங்கரிக்கப்பெற்ற வட்டத்திற்குள் பல்லவர் குலச்சின்னமான திமிளுடன் கூடிய காளை உருவமே பெரும்பாலும் இடம்பெறுகின்றது. மேலும் சக்கரம், ஸ்வஸ்திகா, சங்கு, இருபுறமும் விளக்கு, பூச்சாடி, அலங்கரிக்கப்பெற்ற வட்டத்திற்குள் பூச்சாடி, ஒரு குடை, இரு குடை, புலி, மீன், ஸ்ரீவத்சம், சாமரம் போன்ற சின்னங்களும் இடம்பெறுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:54:13(இந்திய நேரம்)