தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஆதிச்சநல்லூர்

  • இரும்புக்காலம்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    இரும்புக்காலம் என்பது மக்கள் இரும்பை முதன்முதலாகப் பயன்படுத்திய காலத்திலிருந்து தொடங்கியது. இந்தியாவில் இரும்புக்காலம், சுமார் பொ.ஆ. 1500 ஆண்டளவில் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. தென்னிந்தியாவிலும் இதே கால கட்டத்தில் தான் இரும்புக்காலம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில், இரும்புக்காலம் சுமார் பொ.ஆ.மு. 1000இல் தொடங்கியிருக்கலாம் அல்லது அதற்கு முன்னரே தொடங்கியிருக்கக்கூடும். ஆதிச்சநல்லூர் பானையோடுகளின் மீது அண்மையில் செய்யப்பட்ட வெப்ப/ஒளி உமிழ் காலக்கணிப்பு வழியாக, இங்கு இரும்புக்காலம் சுமார் பொ.ஆ. 1500இல் தொடங்கியது என்ற கருத்து நிலவுகின்றது. இது கூடுதல் ஆய்வு வழி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

    இரும்புக்காலத்தில் இறந்தவர்களுக்கு ஈமச் சின்னங்கள் உருவாக்கப்பட்டன. இத்தகைய ஈமச்சின்னங்கள் பெருங்கற்படைச் சின்னங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆனால் பெருங்கற்படைச் சின்னங்கள், இரும்புக் காலத்திற்குப் பிறகு வரலாற்றுத் துவக்கக் காலத்திலும் எழுப்பப்பட்டன.

    இரும்புக்கால ஈமச்சின்னங்கள் வரலாற்றுத் துவக்கக் கால ஈமச் சின்னங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றன. கொடுமணல் ஒரு வரலாற்றுத் துவக்கக்கால ஈமச்சின்ன இடமாகும். வரலாற்றுத் துவக்கக் கால ஈமச்சின்னங்களில் ரோமானிய அல்லது பிற இந்தியக் காசுகளும், இரசட் கலவை பூசப்பட்டு ஓவியம் தீட்டப்பட்ட பானை வகைகளும் காணப்படுகின்றன.

    மேற்கோள் நூல்

    LeshinkL.S, 1974. South Indian Megalithic Burials, The Pandukal Complex, Wiesbaden.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:09:05(இந்திய நேரம்)