தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • தைலமலை

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்


    தைலமலை ஒரு புதிய கற்கால, பெருங்கற்கால வாழ்விடமாகும்.

    தைலமலையில் புதிய கற்காலத்திலும், பெருங்கற்காலம்/இரும்புக்காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன.

    அமைவிடம்

    தைலமலை தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள அரூர் வட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர் மலைப்பாங்கான சூழ்நிலையில் அமைந்துள்ளது.

    தொல்லியல் சான்றுகள்

    இங்கு பி.நரசிம்மையா செய்த அகழாய்வுகளில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளும், பானை வகைகளும் கிடைத்துள்ளன. பெருங்கற்கால ஈமச்சின்னங்களான கல்வட்டங்கள் இவ்வூரில் காணப்படுகின்றன. இங்கு கருப்பு - சிவப்பு மற்றும் சிவப்புப் பானை வகைகளின் ஓடுகளும் கிடைத்துள்ளன.

    மேற்கோள் நூல்

    தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி). 2005 தருமபுரி மாவட்டத் தொல்லியல் கையேடு. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:05:17(இந்திய நேரம்)