அஃகேனம் - ஆய்தம் 3
அகக்கரணம் - அகக்கருவி 43
அகத்தியன் - தமிழ்க்குப் பரமாசாரியர்; 'அகத்தியம்' என்னும் பெயரால் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்க்கும் இலக்கணம் செய்தவர் 1
அகப்புறம் 89, 107, 117, 281
அகம் 63, 89, 117, 281
அகருமம் 68
அகலிலா - நீங்குதலில்லாத 141
அகலுதியேல் - நீங்குவாயானால் 243
அகாரண மிகைமொழி 267
அக்கள்வன் மகன் - அக்கள்வனாகிய மகன் 134
அங்காரன் - ஓரரசன்போலும்; 'வசைப் பட்டுக்கண்டவங்காரன்' என்றதை நோக்குக. 195
அங்கராகம் - உடம்பின் செந்நிறம் 185
அங்கியற்பொருள் 100
அகன்றலை ஊர் - பரந்த இடத்தை உடைய ஊர் 153
அங்கு நோக்கிப் படை எழுதல் 108
அங்குலியம் - மோதிரம் 187
அசலம்-அசையாப் பொருள் 41
அசுர மணம் 282
அசோக தருவின் போது கொண்டு செருவேநின்று - அசோக மரத்தின் மலரைக் கொண்டு போர் செய்தலையே எண்ணி நின்று 186
அச்சம் 257
அஞ்சாச் சிறப்பு 115
அஞ்சனக்கண் - மை உண் கண், 'மைபோன்ற கரிய கண்' என்றலுமாம் 54
அடர்ச்சிய - (அடைச்சிய என்றும் பாடம்) கூந்தலில் அடைவித்த 134
அடலழுங்கு அழல் செவ்வேல் - பகை அரசர்களுடைய வலிமையைக் கெடுத்தற்குக் காரணமானதும், பகைவர்களைக் கோபித்தலையுடையதும், போருக்குரிய செம்மையினை உடையதுமாகிய வேல். 147
அடல்திகழ் - வன்மை விளங்கும் 187
அடல் தேர் - வலிமையினை உடைய தேர் 246
அடு 67, 82
அடும்பயில் 150
அடை பொதுவாய்ப் பொருள் வேறுபட மொழிதல் 250
அடையும் பொருளும் அயல்பட மொழிதல் 250
அடை விரவிப் பொருள் வேறுபட மொழிதல் 250
அடைவு 213, 214
அடைவே 37
அட்ட - (பகைவரைக்) கொன்ற 134
அணங்கின் - தெய்வப்பெண் போன்ற இம்மங்கையின் 193
அணங்கு - தெய்வப்பெண் 222
அணங்கு உலாவு வாளி - துன்பம் அமைந்த அம்பு 193
அணி 70
அணிதங்கு - அழகு பொருந்திய 184
அணிந்த ஆரம் - அணிந்த முத்துமாலை ('அணிந்த வாரம' எனக்கொண்டு, அதில் வாரம் என்பதற்கு அன்பு என்று பொருள் கூறுதலுமாம்.) 193
அண்ணம் - மேல் வாயும் கீழ் வாயும் 6
அண்ணிய - சார்ந்த 26
அண்ணல் - பெருமையை உடையவன் 235
அதிக வசனம் - மிகை மொழி 132
அதிசக்கு வரி 185
அதிசயதி 185
அதிசய உவமை 223
அதிசயம் 251
அதிதிருதி 186
அதிபலம் 121
அதியாடி 186
அதியுத்தம் 183
அத்திகிரி - காஞ்சீபுரம், அந்தச் சக்கரம் 163
அந்தோ - இரக்கக் குறிப்பிடைச் சொல் 159
அநியமச்சிலேடை 260, 261
அநியமவுவமை 220, 224
அநிருதை 118
அநுமானம் 121
அந்தம் 59, 101
அந்தரத்து - ஆகாயத்தில் 234
அந்தி - இரவு 235
அந்நிய உவமை 231
அபூத உவமை 220, 226
அமர் - போரில் 134
அமலன் - குற்றம் அற்றவன் 32
அமுதசாகரனார் 166
அம்பலத்தாடி 70
அம்புசம் 62
அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா 139, 143
அம்போதரங்கம்-கலிப்பாவின் உறுப்புகள் ஆறனுள் ஒன்று. 139
அயம் ஆனா-அதிட்டம் கெடாத 184
அயலாதாரம் 41, 45
அயர் - சோர்வு (முதனிலைத் தொழிற்பெயர்) 140
அயர்த்தல்-மறத்தல் 250
அயல்-வேறு 237, 252
அயில்-வேல் 185
அயுத்தம் 252
அரங்கம் 65
அரங்கன் 42
அரங்கு - சபை 125, 238
அரண் 123
அரதனம் 66
அரவம் 110
அரவிந்தம் - தாமரை 224
அரவு - பாம்பு 253
அரன் 65
அராகம் - கலிப்பாவின் உறுப்புக்கள் ஆறனுள் ஒன்று 131, 289
அரி - சிங்கம் 171
அரிசில எந்தி - சில செவ்வரிகளை ஏந்தி 185
அரியான் 63
அருங்கல உயர்வு 232
அருண கிரணமே போல் - அருணனுடைய செந்நிறக் கதிர்களை ஒப்ப 185
அருணன்-சூரியனுடைய சாரதி 200
அருத்தாந்த நியாசம்-பிற பொருள் வைப்பு 210
அரும்பாலை 281
அருள்பாராவதம்-(அருள்பருமை ஆவதம்) அருளாகிய பெரிய மேகம். (ஆவர்த்தம் என்பது ஏழுமேகங்களில் ஒன்று;் அஃது இங்குப் பொதுவாய் மேகம் என்னும் பொருள் தந்து நின்றது. 142
அரை இருள்-நடு இரவு 142
அர்ப்பாயம் 119
அலகிட்டு - வண்ணம் அறுத்து 167
அலங்காரம் - ஆடை அணிகளாற் சிங்காரித்தல் 191
அலங்காரங்கள் - அணிகள் 198
அலங்குசினை - அசைகின்ற கிளைகள் 142
அலங்குதார் - அசைகின்ற மாலை 147
அலவன்-நண்டு 100
அலவன்-தோட்டுவரம்பூடு ஆடும்- நண்டுகள் (உழவர்களாற் களைந்தெறி யப்பட்ட பூவிதழ்களை உடைய (வயல்) வரம்புகளில் விளையாடும் 129
அவதிக்காரகம்-ஐந்தாம் வேற்றுமை. (ஒன்றினின்று ஒன்று நீங்குவது; நீக்கப் பொருள்.) 27, 40
அவநுதி 213, 258
அவயவி உருவகம் 233, 235
அவலம் 135, 257
அவலோகிதன் - ஒரு பௌத்த பெரியார் 1
அவரவர் ஆறு - அவர் அவர் முற்பிறப்பிற் செய்த வினையின் வழி 172
அவர் அறிவர் 84
அவர்கள் அறிவர்கள் 84
அவர்கள் நிற்பர்கள் 84
அவர் நிற்பர் 84
அவள் அறியும் 84
அவன் அறியும் 84
அவனி மேல் அகரியாய் - பூமியின்கண் காணுதற்கு அரிய அழகை உடையவளே 187
அவன் என்செய்க 83
அவாவின் நிலை 118
அவிநயனார் 32, 88, 167
அவிரோதச் சிலேடை 260, 262
அவிழ் - சோறு 70
அவைக்குட்டம் - சபையாகிய கடல் (குட்டம் - ஆழம், அது பண்பாகு பெயராய்க் கடலை உணர்த்தியது.) 173
அவையிற்றை 109
அவையின் அமைதி 280
அவ்வவ்-அந்த அந்த அவ்வியபாவம்-(அவ்வியயீபாவம்) முன்னும் பின்னும் மொழி அடுத்து வரும் இடைச்சொல் தொகை 49
அவ்விய வுருவகம் 233, 234
அழலை - தீயின் செந்நிறம், (பொருளாகு பெயர்) 231
அழற்கலி மழை - வெப்பத்தைப் பொருத்து ஒழுகும் மழை 187
அழிதொகை 59
அழியாத்தொகை 59
அழிவுபாட்டபாவம் 252, 253
அளபு- அளபெடை 3
அளநிலவு - நெருக்கமாகிய நிலவு 186
அளபெடை அனுகரணம் அலகு பெறாமைக்கு உதாரணம் ('உப்போஒ வென வுரைத்து') 155
அளப்பான் 89
அளவடி- நாற்சீர் அடி; (இது நேர் அடி எனவுங் கூறப்படும்.) 124
அளவை 89
அளி- வண்டு 184
அறநாட்டுப்பெண்டிர் (பறநாட்டுப் பெண்டிர் எனவும் பாடம்) 133
அறநெறி - தருமத்தின் வழி 131
அறன் அலது - தீவினை (கொடுமை) 138
அறி 85
அறிக்கை 69
அறிதல் 70
அறிந்தால் 76
அறியத் தகுவான் 85
அறியப்படா நின்றாள் 85
அறியப்படா நின்றான் 85
அறியப்படு 85
அறியப்படுவாள் 85
அறியப்படுவான் 85
அறியப்பட்டாள் 85
அறியப்பட்டான் 86
அறியில் 76
அறியுஞ்சாத்தன் 74
அறிவல் 83
அறிவன் 83
அறிவு 69, 70
அறுபுள்ளி 100
அறுவகைத் தொழில் 118
அறுவாய் - வெட்டுவாய் 221
அற்புதக் குறிப்பு 121
அற்புதவுவமை 220, 224
அற்று - அத்தன்மைத்து 185
அனவரதமும் - எப்பொழுதும் 192
அனாதரத் தடைமொழி 242
அனுசயத் தடைமொழி 242, 245
அனுட்டுப்பு 184
அனுபம - அனுபமனே! 192
அனுபமனன் - சோழ அரசர்களில் ஒருவன் 219
அனுமானம் 272
அன்பிலர்துறத்தல் - காதலர் அன்பிலராய்ப் (பொருள் கருதிப்) பிரிந்து செல்லுதல் 138
அன்புறுத்தல் 118
அன்மொழிப்பொருட்சிறப்புத் தொகை 58
அன்றிய மும்மை விகாரம் -- பொருந்திய மூன்று (புணர்ச்சி) விகாரங்கள்; (அவை; தோன்றல், திரிதல், கெடுதல் என்பன.) 8
அன்னோ--இரக்கக் குறிப்பிடைச் சொல் 32