தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-தா


தா - குற்றம்
-அழிவு
 
தா அரு நாண் முதல் அணி -
 
குற்றமற்ற மங்கல நாண்.
 
அதனை முதன்மை கொண்ட
 
பிற அணிகள்
தாங்குதல் - சுமத்தல்
- பெறுதல்
தாடகை - இவள் தையலாள்
 
ஆம்(?)
தாடொடு (தாள் தொடு) தடக்கை-
 
பரதன்
- தருகை நீண்ட தசரதன்
 
- உத்தம புருஷ இலக்கணம்
 
என்பர்
 
- காந்தி அடிகள் இத்தகையர்
 
- ஆஜாநு பாகு என்பர்
 
தாணிலா - (தாள் நிலா) மலர்-
 
காம்பில் மலரா மலர் -
 
சொல் மலர் (வை.மு)
 
தாள் நிலாம் மலர் - நாள்
 
மலர் (தெ.ஞா)
 
தாதி - சேடி, ஏவலாட்டி
தாதிமார் - தாதியர் - பணிமகளிர்
 
- குற்றிளையார்
தாதி தூது தீது; தந்தை தூது
 
ஓதாது
 
தாதை சொல் கடந்து அரசாள்வது
 
தகாது
தாதை பணி தலை நின்றதனால்
 
பயன்
தாதை பணி என்னும் வானோர்
 
தவம்
தாதை உதவிய தரணி
தாம்பு - கயிறு, ஆரம், வடம்
தாமம் - அழகுக்கு அணியும்
 
மாலை
 
தாமரை - மகளிர் முகம் (உவ)
தாமரை - கண் (உவ)
தாமரைக் கண்ணன்
தாமரைச் சரண, செங்கண் (அம்
 
கண்) நாயகன் - இராமன் 2029
 
தாமரைச் செங்கணான் -
 
பரதன்
தாமரைச் சரணம் - பாதபங்கயம்
தாமரைச் செல்வி
தாமரைச்ேசெல்வி கோமகன்
 
பிரிய தவம் மேவினாள்
தாமரைச் செல்வி கோமகன்
 
பிரிய தவம் மேவினாள்
தாமரை சாளரத்தில் பூத்தன
- காலதர் பூத்த கடிகமழ்
 
கமலம்
 
தாமரை சீறிய கைகள்
சீறிய - உவம உருபு
 
தாமரை தாளுக்கு முன் அழகு
 
கெட்டன
தாமரை நயனத்தான்
தாமரை நோற்ற நோன்பினால்
 
உவமை சான்றது சீறடிக்கு
தாமரைப்பூ - கைகள்
 
தாமரைப் பொன்
கமல மேவு திரு
 
தாமரை மலர்தல் வருணனை
தாமரை மேலுறைவான்
- படைப்பு பல படைத்த
 
கஞ்சன்
 
தாமரை மலரில் முகிழ்த்த காவி
 
- முகத்தில் கண்
- முண்டகத்தின் மீது
 
முழுநீலம்
 
- குவளை மலர்ந்த தாமரை
 
- குவளைப் பூ கமல
 
வட்டத்திடை
 
- தாமரைப் போதில் தண்
 
நறுங் குவளை
 
தாமரையில் வேல் வண்டு
 
மயங்குதல்
தாமரை வாயிலிலும் அரமியத்தில்
 
மலர்தல்
தாய் தந்தையர்
தாய் தந்தையர் பணியைச் சிர
 
மேல் கொள்ளாதவன்
 
புலையன்; அவனினும் நாயே மேலானது
 
தாய் பசித்திருக்கத் தன் வயிறு
 
வளர்க்கும் பாவி
தாய்மை அன்பினால் தனங்
 
களிள் பால் சுரத்தல்
தாய், தந்தையர்க்கு புகழை
 
வளர்த்தல் தனயர் கடன்
தாய், தந்தையரைச் சலித்தல்
 
ஆகாது
தாயார் இராமனைத் தழுவி
 
கதறுதல்
தாயர் தவ்வையர்
தாயர் மூவர் -
தாயின் அணுமதியே துணை
தாயின் நல்லான்
தாயீர்
தாயும் கன்றும்
தாயுரைத்த சொல் கேட்டு
 
தழைக்கின்ற சிந்தை
தாயெனக் கருதாமை
தாயென வணங்குதல்
தாயெனும் பெயர் எனைத்
 
தடுக்காது
தாயே ‘தா’ என்றால் பேயும்
 
இரங்கும்
தாயைக் கண்ட கன்று
தாயை முன்னிய கன்று -
 
நகரத்து ஆடவர் (உவ)
தாயைக் கொல்லாமையால் பழி
 
எனக்கு மிகும்
தாயைக் கொன்றால் இராமன்
 
கோபிப்பான் எனக் கருதி
 
பரதன் கொல்லான்
தாயைக் குறைத்தவன்
 
பரசுராமன்
தார் - மாலை - அடையாளம்
- கிண்கிணி மாலை
- மார்பு அணிமாலை
- படை
-கிண்கிணி
- ஒழுங்கு
தாரகை
தாரணி - தரணி - பூமி
தாரணி தேர்
தாரம் - மனைவி
தாரை - ஊது கொம்பு
-நீர்த்தாரை
தாரை மாரி - சாரல் மாரி
 
(பா-ம்)
 
- மழைமேகம்
 
தாரொடும் புரவி
 
தாரொலி இல் தேர் - மேகலை
 
அணியாத (கிண்கிணி ஒலி
 
எழாத) தெரிவையர் இடை
தாலம் - தால் - நால் - நாக்கு
 
- தாலாட்டு
 
தாவர சங்கமம் - ஸ்தாவர,
 
ஜங்கமம் - பரதனைக் கண்டு
 
இரங்கின
தாவரம் - நிலை இயல் -
 
அசரம்
 
- சங்கமம் - இயங்கு இயல் - சரம்
 
தாவு - கேடு
 
தாவாது - கெடாது
 
தாவாது ஒளிரும் குடை
தாவி வரல்
 
தாவில் மன்னர்
தாவு வார்புனல் சரயு
தாழ் தடக்கை - பரதன்
தாழ்தல் - தொங்குதல்
- அவிழ்ந்து தொங்குதல்
தாழ்த்தல் - தாமதித்தல்
தாழ்தல் - விரும்புதல்
தாழ்வரை
தாழ்வு - குற்றம்; தாழ்விலர்
தாழை - தென்னை
-தாழை இளநீர் விழுக்குலை
 
தாழையின் குலைப்பதடி -
 
பரதன் (உவ)
தாள் வணங்கி
தாள் வளம் சுமந்த தாழை -
 
பருத்த அடி மரம்
தாள் - காம்பு
- பூவின் காம்பு
- பாதம்
- மலை அடி
- ஓர் அணிகலன்
 
தாள் பூண்டு வேண்டுதல் -
 
பாதம் பற்றி பரிவொடு
 
வேண்டல்
தாளம்
தாளில் வீழ்தல் - வணங்கல்
தாளில் அடைந்தவரைக் காட்டிக்
 
கொடுத்த பேதை
தாளுறு குரிசில்
தாளைச் சென்னியில் புனைதல்
தாளின் (காய்க்கும்) ஏலம்
தானம் - ஸ்தானம்
 
-இடம்
- மதநீர்
தான வகைகள்
 
- பொன், மாமணி, சாந்தம்,
 
கன்னியர் நிலம், அன்னம்,
 
ஆடை
தானவர் -
தானவர் வலிதப நிமிர்ந்த
 
தானையன்
தானை - ஆடை, துணி
தானையை மடக்கி நிற்றல் -
 
மரியாதை முறை
தானை - சேனை
தானை - தமிழ்த் தலைவனை
 
ஒத்தல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-01-2019 12:20:14(இந்திய நேரம்)