முகப்பு |
தோழி |
1. குறிஞ்சி |
செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த |
||
செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை, |
||
கழல் தொடி, சேஎய் குன்றம் |
||
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே. | உரை | |
தோழி கையுறை மறுத்தது. - திப்புத்தோளார் |
9. நெய்தல் |
யாய் ஆகியளே மாஅயோளே- |
||
மடை மாண் செப்பில் தமிய வைகிய |
||
பெய்யாப் பூவின் மெய் சாயினளே; |
||
பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல் |
||
இன மீன் இருங் கழி ஓதம் மல்குதொறும் |
||
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் |
||
தண்ணம் துறைவன் கொடுமை |
||
நம் முன் நாணிக் கரப்பாடும்மே. | உரை | |
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - கயமனார் |
10. மருதம் |
யாய் ஆகியளே விழவு முதலாட்டி; |
||
பயறு போல் இணர பைந் தாது படீஇயர் |
||
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக் |
||
காஞ்சி ஊரன் கொடுமை |
||
கரந்தனள் ஆகலின், நாணிய வருமே. | உரை | |
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - ஓரம்போகியர் |
16. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர் |
||
பொன் புனை பகழி செப்பம் கொண்மார், |
||
உகிர் நுதி புரட்டும் ஓசை போல, |
||
செங் காற் பல்லி தன் துணை பயிரும் |
||
அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே? | உரை | |
பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு, தோழி கூறியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
18. குறிஞ்சி |
வேரல் வேலி வேர் கோட் பலவின் |
||
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி! |
||
யார் அஃது அறிந்திசினோரே?-சாரல் |
||
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள் |
||
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே! | உரை | |
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது.-கபிலர் |
22. பாலை |
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய, |
||
யாரோ பிரிகிற்பவரே?-சாரல் |
||
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து |
||
வேனில் அம் சினை கமழும் |
||
தேம் ஊர் ஒண்ணுதல்!-நின்னொடும், செலவே. | உரை | |
செலவுக்குறிப்பறிந்து ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.- சேரமான் எந்தை |
23. குறிஞ்சி |
அகவன்மகளே! அகவன்மகளே! |
||
மனவுக் கோப்பு அன்ன நல் நெடுந் கூந்தல் |
||
அகவன்மகளே! பாடுக பாட்டே; |
||
இன்னும், பாடுக, பாட்டே-அவர் |
||
நல் நெடுங் குன்றம் பாடிய பாட்டே. | உரை | |
கட்டுக்காணிய நின்றவிடத்து, தோழி அறத்தோடு நின்றது. - ஒளவையார் |
26. குறிஞ்சி |
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை |
||
மேக்கு எழு பெருஞ் சினை இருந்த தோகை |
||
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாடன் |
||
தகாஅன் போலத் தான் தீது மொழியினும், |
||
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே- |
||
தேக் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத்துவர் வாய் |
||
வரை ஆடு வன் பறழ்த் தந்தைக் |
||
கடுவனும் அறியும், அக் கொடியோனையே. | உரை | |
நற்றாயும் செவிலித் தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, 'இஃது எற்றினான்ஆயிற்று?' என்று கட்டுவிச்சியை வினவிக் கட்டுக் காண்கின்ற காலத்து,'தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெ |
34. மருதம் |
ஒறுப்ப ஓவலர், மறுப்பத் தேறலர், |
||
தமியர் உறங்கும் கௌவை இன்றாய், |
||
இனியது, கேட்டு இன்புறுக இவ் ஊரே!- |
||
முனாஅது, யானையங்குருகின் கானல்அம் பெருந்தோடு |
||
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம் |
||
குட்டுவன் மரந்தை அன்ன எம் |
||
குழை விளங்கு ஆய் நுதற் கிழவனும் அவனே. | உரை | |
வரைவு மலிந்தமை ஊர்மேல் வைத்துத் தோழி கிழத்திக்குச் சொல்லியது.- கொல்லிக் கண்ணன் |
37. பாலை |
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்; |
||
பிடி பசி களைஇய பெருங் கை வேழம் |
||
மென் சினை யாஅம் பொளிக்கும் |
||
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே. | உரை | |
தோழி, 'கடிது வருவர்' என்று, ஆற்றுவித்தது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
42. குறிஞ்சி |
காமம் ஒழிவதுஆயினும்-யாமத்துக் |
||
கருவி மா மழை வீழ்ந்தென, அருவி |
||
விடரகத்து இயம்பும் நாட!- எம் |
||
தொடர்பும் தேயுமோ, நின்வயினானே? | உரை | |
இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்ப்பாட்டான் மறுத்தது - கபிலர் |
45. மருதம் |
காலை எழுந்து, கடுந் தேர் பண்ணி, |
||
வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற |
||
மல்லல் ஊரன், 'எல்லினன் பெரிது' என, |
||
மறுவரும் சிறுவன் தாயே; |
||
தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே. | உரை | |
தலைமகற்குப் பாங்காயினார் வாயில் வேண்டியவழி, தோழி வாயில் நேர்ந்தது.- ஆலங்குடி வங்கனார் |
47. குறிஞ்சி |
கருங் கால் வேங்கை வீ உகு துறுகல் |
||
இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை |
||
எல்லி வருநர் களவிற்கு |
||
நல்லை அல்லை-நெடு வெண்ணிலவே! | உரை | |
இரா வந்து ஒழுகுங்காலை, முன்னிலைப் புறமொழியாக நிலவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது. - நெடுவெண்ணிலவினா |
48. பாலை |
'தாதின் செய்த தண் பனிப் பாவை |
||
காலை வருந்தும் கையாறு ஓம்பு' என, |
||
ஓரை ஆயம் கூறக் கேட்டும், |
||
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் |
||
நன்னுதல் பசலை நீங்க, அன்ன |
||
நசை ஆகு பண்பின் ஒரு சொல் |
||
இசையாதுகொல்லோ, காதலர் தமக்கே? | உரை | |
பகற்குறிக்கண் காணும் பொழுதினும் காணப்பொழுது பெரிதாகலின், வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு, தோழி சொல்லியது. - பூங்கணுத்திரையார் |
51. நெய்தல் |
கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மா மலர் |
||
நூல் அறு முத்தின் காலொடு பாறித் |
||
துறைதொறும் பரக்கும் தூ மணற் சேர்ப்பனை |
||
யானும் காதலென்; யாயும் நனி வெய்யள்; |
||
எந்தையும் கொடீஇயர்வேண்டும்; |
||
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே. | உரை | |
வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவு மலிவுகூறியது - குன்றியனார் |
52. குறிஞ்சி |
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில் |
||
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே, |
||
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல், |
||
நிரந்து இலங்கு வெண் பல், மடந்தை! |
||
பரிந்தனென் அல்லெனோ, இறைஇறை யானே? | உரை | |
வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்றமை காரணத்தால் இது விளைந்தது என்பது படக் கூறியது. - பனம்பாரனார் |
53. மருதம் |
எம் அணங்கினவே-மகிழ்ந! முன்றில் |
||
நனை முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல், |
||
வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும் |
||
செந் நெல் வான் பொரி சிதறி அன்ன, |
||
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை, |
||
நேர் இறை முன்கை பற்றி, |
||
சூரரமகளிரோடு உற்ற சூளே. | உரை | |
வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன் |
55. நெய்தல் |
மாக் கழி மணி பூக் கூம்ப, தூத் திரைப் |
||
பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇ, |
||
கையற வந்த தைவரல் ஊதையொடு |
||
இன்னா உறையுட்டு ஆகும் |
||
சில் நாட்டு அம்ம-இச் சிறு நல் ஊரே. | உரை | |
வரைவொடு புகுதானேல் இவள் இறந்துபடும்' எனத் தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. - நெய்தற் கார்க்கியர் |
59. பாலை |
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் |
||
அதலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக் |
||
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் |
||
தவ்வென மறப்பரோ-மற்றே; முயலவும், |
||
சுரம் பல விலங்கிய அரும் பொருள் |
||
நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே. | உரை | |
பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மோசிகீரனார் |
61. மருதம் |
தச்சன் செய்த சிறு மா வையம், |
||
ஊர்ந்து இன்புறாஅர்ஆயினும், கையின் |
||
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல, |
||
உற்று இன்புறேஎம்ஆயினும், நற்றோர்ப் |
||
பொய்கை ஊரன் கேண்மை |
||
செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே. | உரை |
தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது. - தும்பிசேர்கீரன் |
66. முல்லை |
மடவமன்ற, தடவு நிலைக் கொன்றை- |
||
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய |
||
பருவம் வாராஅளவை, நெரிதரக் |
||
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த, |
||
வம்ப மாரியைக் கார் என மதித்தே. | உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறீஇயது - கோவர்த்தனார் |
69. குறிஞ்சி |
கருங் கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென, |
||
கைம்மை உய்யாக் காமர் மந்தி |
||
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி, |
||
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும் |
||
சாரல் நாட! நடு நாள் |
||
வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே! | உரை | |
தோழி இரவுக்குறி மறுத்தது. - கடுந்தோட் கரவீரன் |
73. குறிஞ்சி |
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ; |
||
அழியல் வாழி-தோழி!-நன்னன் |
||
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய |
||
ஒன்றுமொழிக் கோசர் போல, |
||
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே. | உரை | |
பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது - பரணர் |
74. குறிஞ்சி |
விட்ட குதிரை விசைப்பின் அன்ன, |
||
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன் |
||
யாம் தற் படர்ந்தமை அறியான், தானும் |
||
வேனில் ஆனேறு போலச் |
||
சாயினன் என்ப-நம் மாண் நலம் நயந்தே. | உரை | |
தோழி தலைமகன் குறை மறாதவாற்றால் கூறியது. - விட்ட குதிரையார் |
81. குறிஞ்சி |
இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி, |
||
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறைப் |
||
புது நலன் இழந்த புலம்புமார் உடையள்; |
||
உதுக் காண் தெய்ய; உள்ளல் வேண்டும்- |
||
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக் |
||
கடலும் கானலும் தோன்றும் |
||
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே. | உரை | |
தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது. -வடம வண்ணக்கன் பேரிசாத்தன் |
83. குறிஞ்சி |
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் |
||
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ, அன்னை- |
||
தம் இல் தமது உண்டன்ன சினைதொறும் |
||
தீம் பழம் தூங்கும் பலவின் |
||
ஓங்கு மலை நாடனை, 'வரும்' என்றோளே! | உரை | |
தலைமகன் வரைந்து எய்துதல் உணர்த்திய செவிலியைத் தோழி வாழ்த்தியது. - வெண்பூதன் |
85. மருதம் |
யாரினும் இனியன்; பேர் அன்பினனே- |
||
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் |
||
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர், |
||
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின் |
||
நாறா வெண் பூ கொழுதும் |
||
யாணர் ஊரன் பாணன் வாயே. | உரை | |
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி, வாயில் மறுத்தது. - வடம வண்ணக்கன் தாமோதரன் |
88. குறிஞ்சி |
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன், |
||
சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித் |
||
தொல் முரண் சொல்லும் துன் அருஞ் சாரல், |
||
நடு நாள் வருதலும் வரூஉம்; |
||
வடு நாணலமே-தோழி!-நாமே. | உரை | |
இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது. -மதுரைக் கதக்கண்ணன் |
89. மருதம் |
பா அடி உரல பகுவாய் வள்ளை |
||
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப; |
||
அழிவது எவன்கொல், இப் பேதை ஊர்க்கே?- |
||
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக் |
||
கருங் கட் தெய்வம் குடவரை எழுதிய |
||
நல் இயல் பாவை அன்ன இம் |
||
மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே. | உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது;தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி, வாயில் மறுத்ததூஉம் ஆம். - பரணர் |
90. குறிஞ்சி |
எற்றோ வாழி?-தோழி!-முற்றுபு |
||
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய |
||
மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க் |
||
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி, |
||
வரை இழி அருவி உண்துறைத் தரூஉம் |
||
குன்ற நாடன் கேண்மை |
||
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே. | உரை | |
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத்தோழி கூறியது. - மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் |
109. நெய்தல் |
முட் கால் இறவின் முடங்கு புறப் பெருங் கிளை |
||
புணரி இகுதிரை தரூஉம் துறைவன் |
||
புணரிய இருந்த ஞான்றும், |
||
இன்னது மன்னோ, நல் நுதற் கவினே! | உரை | |
தலைவன் சிறைப்புறமாக, தலைவி வேறுபாடுகண்ட புறத்தார் அலர் கூறுகின்றமை தோன்ற, தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது. - நம்பி குட்டுவன் |
111. குறிஞ்சி |
மென் தோள் நெகிழ்த்த செல்லல், வேலன், |
||
'வென்றி நெடு வேள்' என்னும்; அன்னையும், |
||
அது என உணரும்ஆயின், ஆயிடைக் |
||
கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன |
||
கேழ் இருந் துறுகல் கெழு மலை நாடன் |
||
வல்லே வருக-தோழி!-நம் |
||
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே! | உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் வேறுபாடு கண்டு வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமை தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது. - தீன்மதிநாகன். |
113. மருதம் |
ஊர்க்கும் அணித்தே, பொய்கை; பொய்கைக்குச் |
||
சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே: |
||
இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும் |
||
துன்னல் போகின்றால், பொழிலே; யாம் எம் |
||
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்; |
||
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே. | உரை | |
பகற்குறி நேர்ந்த தலைமகற்குக் குறிப்பினால் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது.- மாதீர்த்தன் |
114. நெய்தல் |
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி, |
||
நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!- |
||
செல்கம்; செல வியங்கொண்மோ-அல்கலும், |
||
ஆரல் அருந்த வயிற்ற |
||
நாரை மிதிக்கும், என் மகள் நுதலே, | உரை | |
இடத்துய்த்து நீங்கும் தோழி தலைமகற்குக் கூறியது. - பொன்னாகன் |
115. குறிஞ்சி |
பெரு நன்று ஆற்றின், பேணாரும் உளரே? |
||
ஒரு நன்று உடையள் ஆயினும், புரி மாண்டு, |
||
புலவி தீர அளிமதி-இலை கவர்பு, |
||
ஆடு அமை ஒழுகிய தண் நறுஞ் சாரல், |
||
மென்நடை மரையா துஞ்சும் |
||
நன் மலை நாட!-நின் அலது இலளே. | உரை | |
உடன்போக்கு ஒருப்படுத்து மீளும் தோழி தலைமகற்குக் கூறியது. - கபிலர் |
117. நெய்தல் |
மாரி ஆம்பல் அன்ன கொக்கின் |
||
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு |
||
கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர் |
||
கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன் |
||
வாராது அமையினும் அமைக! |
||
சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே. | உரை | |
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது. - குன்றியனார் |
123. நெய்தல் |
இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல், |
||
நிலவுக் குவித்தன்ன வெண் மணல் ஒரு சிறை, |
||
கருங் கோட்டுப் புன்னைப் பூம் பொழில் புலம்ப, |
||
இன்னும் வாரார்; வரூஉம், |
||
பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே, | உரை | |
பகற்குறியிடத்து வந்த தலைமகனைக் காணாத தோழி, அவன் சிறைப்புறத்தானாதல் அறிந்து, தலைமகட்குச் சொல்லியது. - ஐயூர் முடவன் |
124. பாலை |
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலை, |
||
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங் காடு |
||
இன்னா என்றிர்ஆயின், |
||
இனியவோ-பெரும!-தமியோர்க்கு மனையே? | உரை | |
புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
127. மருதம் |
குருகு கொளக் குளித்த கெண்டை அயலது |
||
உரு கெழு தாமரை வால் முகை வெரூஉம் |
||
கழனிஅம் படப்பை காஞ்சி ஊர! |
||
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக, |
||
உள்ள பாணர் எல்லாம் |
||
கள்வர் போல்வர், நீ அகன்றிசினோர்க்கே. | உரை | |
பாணன் வாயிலாகப் புக்கவழித் தலைமகற்குத் தோழி சொல்லியது. - ஓரம்போகியார் |
130. பாலை |
நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்; |
||
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்; |
||
நாட்டின்நாட்டின் ஊரின்ஊரின் |
||
குடிமுறை குடிமுறை தேரின், |
||
கெடுநரும் உளரோ?-நம் காதலோரே. | உரை | |
பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; 'நீ அவர் பிரிந்தார் என்று ஆற்றாயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூது விட்டுக்கொணர்வேன்;நின் ஆற்றாமை நீங்குக!' என |
138. குறிஞ்சி |
கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே- |
||
எம் இல் அயலது ஏழில் உம்பர், |
||
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த |
||
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே. | உரை | |
குறி பிழைத்த தலைமகன் பிற்றை ஞான்று இரவுக்குறி வந்துழி, தோழி சிறைப்புறமாகக் கூறியது; இரவுக்குறி நேர்ந்ததூஉம் ஆம். - கொல்லன் அழிசி |
139. மருதம் |
மனை உறை கோழி குறுங் கால் பேடை, |
||
வேலி வெருகினம் மாலை உற்றென, |
||
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய |
||
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு |
||
இன்னாது இசைக்கும் அம்பலொடு |
||
வாரல், வாழியர்!-ஐய!-எம் தெருவே. | உரை | |
வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - ஒக்கூர் மாசாத்தியார். |
143. குறிஞ்சி |
அழியல்-ஆயிழை!-அன்பு பெரிது உடையன்; |
||
பழியும் அஞ்சும், பய மலை நாடன்; |
||
நில்லாமையே நிலையிற்று ஆகலின், |
||
நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின் |
||
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத் |
||
தங்குதற்கு உரியது அன்று, நின் |
||
அம் கலுழ் மேனிப் பாஅய பசப்பே. | உரை | |
வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்துத் தலைமகட்குத் தோழி கூறியது.- மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன். |
146. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி!-நம் ஊர்ப் |
||
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?- |
||
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர், |
||
'நன்றுநன்று' என்னும் மாக்களொடு |
||
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே. | உரை | |
தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, 'வரைவு மறுப்பவோ?' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார். |
159. குறிஞ்சி |
'தழை அணி அல்குல் தாங்கல் செல்லா |
||
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக, |
||
அம் மெல் ஆகம் நிறைய வீங்கிக் |
||
கொம்மை வரி முலை செப்புடன் எதிரின; |
||
யாங்கு ஆகுவள்கொல் பூங்குழை?' என்னும் |
||
அவல நெஞ்சமொடு உசாவாக் |
||
கவலை மாக்கட்டு-இப் பேதை ஊரே. | உரை | |
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தது; உயிர் செல வேற்று வரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தன். |
166. நெய்தல் |
தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை |
||
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும், |
||
ஊரோ நன்றுமன், மரந்தை; |
||
ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே. | உரை | |
காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது. - கூடலூர் கிழார் |
177. நெய்தல் |
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி, |
||
துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே; |
||
மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை |
||
அன்றிலும் பையென நரலும்; இன்று அவர் |
||
வருவர்கொல் வாழி-தோழி!-நாம் நகப் |
||
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித் |
||
தணப்பு அருங் காமம் தண்டியோரே? | உரை | |
கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது. - உலோச்சன் |
178. மருதம் |
அயிரை பரந்த அம் தண் பழனத்து |
||
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால் |
||
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள் |
||
இடை முலைக் கிடந்தும், நடுங்கல் ஆனீர்; |
||
தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு |
||
அரியம் ஆகிய காலைப் |
||
பெரிய நோன்றனிர்; நோகோ யானே. | உரை | |
கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு, முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றினை நினைந்து, அழிந்து கூறியது. - நெதும்பல்லியத்தை |
179. குறிஞ்சி |
கல்லென் கானத்துக் கடமா ஆட்டி, |
||
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன; |
||
செல்லல்-ஐஇய!-உது எம் ஊரே; |
||
ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த |
||
குவையுடைப் பசுங் கழை தின்ற கய வாய்ப் |
||
பேதை யானை சுவைத்த |
||
கூழை மூங்கிற் குவட்டிடையதுவே. | உரை | |
பகல் வருவானை இரவுக்குறி நேர்ந்தாள் போன்று வரைவு கடாயது. - குட்டுவன் கண்ணன் |
196. மருதம் |
வேம்பின் பைங் காய் என் தோழி தரினே, |
||
'தேம் பூங் கட்டி' என்றனிர்; இனியே, |
||
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர் |
||
தைஇத் திங்கள் தண்ணிய தரினும், |
||
'வெய்ய உவர்க்கும்' என்றனிர்- |
||
ஐய!-அற்றால் அன்பின் பாலே. | உரை | |
வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது. - மிளைக் கந்தன். |
198. குறிஞ்சி |
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில் |
||
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை |
||
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு, |
||
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல் |
||
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர் |
||
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து |
||
ஆரம் நாறும் மார்பினை, |
||
வாரற்கதில்ல; வருகுவள் யாயே. | உரை | |
தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது. - கபிலர் |
210. முல்லை |
திண் தேர் நள்ளி கானத்து அண்டர் |
||
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி |
||
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு |
||
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி |
||
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு |
||
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே. | உரை | |
பிரிந்து வந்த தலைமகன், 'நன்கு ஆற்றுவித்தாய்!' என்றாற்குத் தோழி உரைத்தது - காக்கை பாடினியார் நச்செள்ளையார். |
211. பாலை |
அம் சில் ஓதி ஆய் வளை நெகிழ |
||
நொந்தும், நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் |
||
எஞ்சினம் வாழி-தோழி!-எஞ்சாது |
||
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ் சினை |
||
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி, |
||
ஆராது பெயரும் தும்பி |
||
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே. | உரை | |
'இடைச்சுரத்துக் கவலுவன கண்டு, "நம்மை ஆற்றார்" என நினைந்து மீள்வர்கொல்?'எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் |
212. நெய்தல் |
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந் தேர் |
||
தெண் கடல் அடை கரைத் தெளிர்மணி ஒலிப்ப, |
||
காண வந்து, நாணப் பெயரும்; |
||
அளிதோ தானே, காமம்; |
||
விளிவதுமன்ற; நோகோ யானே. | உரை | |
குறை நேர்ந்த தோழி குறை நயப்பக் கூறியது. - நெய்தற் கார்க்கியன் |
213. பாலை |
நசை நன்கு உடையர்-தோழி!-ஞெரேரெனக் |
||
கவைத் தலை முது கலை காலின் ஒற்றிப் |
||
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந் ததரல் |
||
ஒழியின் உண்டு, அழிவு இல் நெஞ்சின் |
||
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி, |
||
நின்று வெயில் கழிக்கும் என்ப-நம் |
||
இன் துயில் முனிநர் சென்ற ஆறே. | உரை | |
'நம்பெருமான் நம்பொருட்டு இடைநின்று மீள்வான்' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது. - கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன் |
214. குறிஞ்சி |
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய |
||
பிறங்கு குரல் இறடி காக்கும், புறம் தாழ் |
||
அம் சில் ஓதி, அசை இயல், கொடிச்சி |
||
திருந்து இழை அல்குற்குப் பெருந் தழை உதவிச் |
||
செயலை முழுமுதல் ஒழிய, அயலது |
||
அரலை மாலை சூட்டி, |
||
ஏமுற்றன்று-இவ் அழுங்கல் ஊரே. | உரை | |
தோழி, வெறியாட்டு எடுத்துக் கொண்ட இடத்து, அறத்தொடு நின்றது. - கூடலூர் கிழார் |
215. பாலை |
படரும் பைபயப் பெயரும்; சுடரும் |
||
என்றூழ் மா மலை மறையும்; இன்று அவர் |
||
வருவர்கொல், வாழி-தோழி!-நீர் இல் |
||
வறுங் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை |
||
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக் |
||
கொடு வரி இரும் புலி காக்கும் |
||
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே. | உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |
217. குறிஞ்சி |
தினை கிளி கடிதலின், பகலும் ஒல்லும்; |
||
இரவு நீ வருதலின், ஊறும் அஞ்சுவல்; |
||
யாங்குச் செய்வாம், எம் இடும்பை நோய்க்கு?' என |
||
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து, |
||
ஓங்கு மலைநாடன் உயிர்த்தோன்மன்ற; |
||
ஐதேய் கம்ம யானே; |
||
கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே. | உரை | |
உடன்போக்கு நயப்பத் தோழி தலைமகட்குக் கூறியது. - தங்கால் முடக்கொல்லனார் |
225. குறிஞ்சி |
கன்று தன் பய முலை மாந்த, முன்றில் |
||
தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட! |
||
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் |
||
வீறு பெற்று மறந்த மன்னன் போல, |
||
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க் |
||
கலி மயிற் கலாவத்தன்ன இவள் |
||
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே. | உரை | |
வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது. - கபிலர் |
227. நெய்தல் |
பூண் வனைந்தன்ன பொலஞ் சூட்டு நேமி |
||
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த |
||
கூழை நெய்தலும் உடைத்து, இவண்- |
||
தேரோன் போகிய கானலானே. | உரை | |
சிறைப்புறம். - ஓத ஞானி |
230. நெய்தல் |
அம்ம வாழி, தோழி! கொண்கன்- |
||
தான் அது துணிகுவனல்லன்; யான் என் |
||
பேதைமையால் பெருந்தகை கெழுமி, |
||
நோதகச் செய்தது ஒன்று உடையேன்கொல்லோ?- |
||
வயச் சுறா வழங்கு நீர் அத்தம் |
||
தவச் சில் நாளினன் வரவு அறியானே. | உரை | |
வலிதாகக் குறிக் குறை நயப்பித்தது. - அறிவுடை நம்பி |
232. பாலை |
உள்ளார்கொல்லோ?-தோழி!-உள்ளியும், |
||
வாய்ப் புணர்வு இன்மையின் வாரார்கொல்லோ?- |
||
மரற்புகா அருந்திய மா எருத்து இரலை, |
||
உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய |
||
யாஅ வரி நிழல், துஞ்சும் |
||
மா இருஞ் சோலை மலை இறந்தோரே. | உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - ஊண்பித்தை |
236. நெய்தல் |
விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ |
||
நொந்தனை ஆயின், தந்தனை சென்மோ!- |
||
குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை |
||
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை |
||
வம்ப நாரை சேக்கும் |
||
தண் கடற் சேர்ப்ப!-நீ உண்ட என் நலனே. | உரை | |
வரைவிடை வைத்துப் பிரிவான். 'இவள் வேறு படாமை ஆற்றுவி' என்றாற்குத் தோழி நகையாடி உரைத்தது. - நரிவெரூஉத்தலையார். |
238. மருதம் |
பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை |
||
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி, |
||
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் |
||
தொண்டி அன்ன என் நலம் தந்து, |
||
கொண்டனை சென்மோ-மகிழ்ந!-நின் சூளே. | உரை | |
தலைமகன் பரத்தையின் மறுத்தந்து, வாயில் வேண்டித் தோழியிடைச் சென்று, தெளிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது. - குன்றியன் |
247. குறிஞ்சி |
எழில் மிக உடையது; ஈங்கு அணிப்படூஉம்; |
||
திறவோர் செய்வினை அறவது ஆகும்; |
||
கிளையுடை மாந்தர்க்குப் புணையுமார் இவ், என |
||
ஆங்கு அறிந்திசினே-தோழி!-வேங்கை |
||
வீயா மென் சினை வீ உக, யானை |
||
ஆர் துயில் இயம்பும் நாடன் |
||
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே. | உரை | |
கடிநகர்த் தெளிவு விலங்கினமை அறிய, தோழி கூறியது; வரைவு உடன்பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉம் ஆம். - சேந்தம்பூதன். |
248. நெய்தல் |
அது வரல் அன்மையோ அரிதே; அவன் மார்பு |
||
உறுக என்ற நாளே குறுகி, |
||
ஈங்கு ஆகின்றே-தோழி!-கானல் |
||
ஆடு அரை புதையக் கோடை இட்ட |
||
அடும்பு இவர் மணற் கோடு ஊர, நெடும் பனை |
||
குறிய ஆகும் துறைவனைப் |
||
பெரிய கூறி யாய் அறிந்தனளே. | உரை | |
வரைவு நீட்டித்தவழி, ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி ஆற்றுவித்தது. - உலோச்சன் |
251. முல்லை |
மடவ வாழி-மஞ்ஞை மா இனம் |
||
கால மாரி பெய்தென, அதன் எதிர் |
||
ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன; |
||
கார் அன்று-இகுளை!-தீர்க, நின் படரே! |
||
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர், |
||
புது நீர் கொளீஇய, உகுத்தரும் |
||
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே. | உரை | |
பிரிவிடைத் தோழி. 'பருவம் அன்று; பட்டது வம்பு' என்று வற்புறுத்தியது.- இடைக் காடன். |
253.பாலை |
கேளார் ஆகுவர்-தோழி!-கேட்பின், |
||
விழுமிது கழிவதுஆயினும், நெகிழ்நூல் |
||
பூச் சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின் |
||
நாள் துயர் கெடப் பின் நீடலர்மாதோ- |
||
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல், |
||
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை |
||
ஆறு செல் மாக்கள் சேக்கும் |
||
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. | உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பூங்கண்ணன் |
255. பாலை |
பொத்து இல் காழ அத்த யாஅத்துப் |
||
பொரி அரை முழுமுதல் உருவ குத்தி, |
||
மறம் கெழு தடக் கையின் வாங்கி, உயங்கு நடைச் |
||
சிறு கட் பெரு நிரை உறு பசி தீர்க்கும் |
||
தட மருப்பு யானை கண்டனர்-தோழி!- |
||
தம் கடன் இறீஇயர் எண்ணி, இடம்தொறும் |
||
காமர் பொருட்பிணிப் போகிய |
||
நாம் வெங் காதலர் சென்ற ஆறே. | உரை | |
'இடைநின்று மீள்வர்' எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.- கடுகு பெருந் தேவன் |
258. மருதம் |
வாரல் எம் சேரி; தாரல் நின் தாரே; |
||
அலராகின்றால்-பெரும!-காவிரிப் |
||
பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த |
||
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை, |
||
அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை |
||
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன், |
||
அழிசி ஆர்க்காடு அன்ன இவள் |
||
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே. | உரை | |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது; வாயில் நேர்ந்ததூஉம். ஆம். - பரணர் |
259. குறிஞ்சி |
மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து, |
||
அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள் |
||
முகை அவிழ்ந்து, ஆனா நாறும் நறு நுதல், |
||
பல் இதழ் மழைக் கண், மாஅயோயே! |
||
ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும், |
||
நீ அளந்து அறிவை நின் புரைமை; வாய்போல் |
||
பொய்ம் மொழி கூறல்-அஃது எவனோ? |
||
நெஞ்சம் நன்றே, நின் வயினானே. | உரை | |
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி அறத்தொடு நின்று, 'யானே பரி கரிப்பல்'என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது. - பரணர். |
260. பாலை |
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும் |
||
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே; |
||
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்; |
||
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார் |
||
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை |
||
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து, |
||
கன்று இல் ஓர் ஆ விலங்கிய |
||
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே. | உரை | |
அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- கல்லாடனார். |
262. பாலை |
ஊஉர் அலர் எழ, சேரி கல்லென, |
||
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை |
||
தானே இருக்க, தன் மனை; யானே, |
||
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க |
||
உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு, |
||
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன், |
||
கரும்பு நடு பாத்தி அன்ன, |
||
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே. | உரை | |
உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
263. குறிஞ்சி |
மறிக் குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇ, |
||
செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்க, |
||
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா |
||
வேற்றுப் பெருந் தெய்வம் பல உடன் வாழ்த்தி, |
||
'பேஎய்க் கொளீஇயள்' இவள் எனப்படுதல் |
||
நோதக்கன்றே-தோழி!-மால் வரை |
||
மழை விளையாடும் நாடனைப் |
||
பிழையேம் ஆகிய நாம் இதற்படவே. | உரை | |
'அன்னை வெறி எடுக்கக் கருதாநின்றாள்; இனி யாம் இதற்கு என்கொலோ செயற்பாலது?'எனத் தோழி தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகக் கூறியது. - பெருஞ்சாத்தன் |
265. குறிஞ்சி |
காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது, |
||
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும் |
||
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட |
||
கடன் அறி மாக்கள் போல, இடன் விட்டு, |
||
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் |
||
நன்னர் நெஞ்சத்தன்-தோழி!-நின் நிலை |
||
யான் தனக்கு உரைத்தனென் ஆக, |
||
தான் நாணினன், இஃது ஆகாவாறே. | உரை | |
வரையாது பிரிந்த இடத்து, 'அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தான்' எனத் தோழி தலைமகட்குக் கூறியது. - கருவூர்க் கதப்பிள்ளை |
268. நெய்தல் |
'சேறிரோ?' எனச் செப்பலும் ஆற்றாம்; |
||
'வருவிரோ? என வினவலும் வினவாம்; |
||
யாங்குச் செய்வாம்கொல்?-தோழி!-பாம்பின் |
||
பையுடை இருந் தலை துமிக்கும் ஏற்றொடு |
||
நடு நாள் என்னார், வந்து, |
||
நெடு மென் பணைத் தோள் அடைந்திசினோரே. | உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.- கருவூர்ச் சேரமான் சாத்தன் |
275. முல்லை |
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக் |
||
கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!- |
||
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப் |
||
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ? |
||
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு |
||
வல் வில் இளையர் பக்கம் போற்ற, |
||
ஈர் மணற் காட்டாறு வரூஉம் |
||
தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே. | உரை | |
பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி |
277. பாலை |
ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை, |
||
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது |
||
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி, |
||
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் |
||
சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே- |
||
'மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை, |
||
எக் கால் வருவது?' என்றி; |
||
அக் கால் வருவர், எம் காதலோரே. | உரை | |
தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியது. - ஓரிற் பிச்சையார் |
282. பாலை |
செவ்வி கொள் வரகின் செஞ் சுவற் கலித்த |
||
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை |
||
நவ்வி நாள்மறி கவ்விக் கடன் கழிக்கும் |
||
கார் எதிர் தண் புனம் காணின், கைவளை, |
||
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த |
||
வெண் கூதாளத்து அம் தூம்பு புது மலர் |
||
ஆர் கழல்பு உகுவ போல, |
||
சோர்குவஅல்ல என்பர்கொல்-நமரே? | உரை | |
வினவயிற் பிரிந்த இடத்துத் தோழி கிழத்திக்கு உரைத்தது. - நாகம் போத்தன் |
287. முல்லை |
அம்ம வாழி-தோழி-காதலர் |
||
இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ- |
||
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ |
||
ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக் |
||
கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு, |
||
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி, |
||
செழும் பல் குன்றம் நோக்கி, |
||
பெருங் கலி வானம் ஏர்தரும் பொழுதே? | உரை | |
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, 'நம்மைத் துறந்து வாரார்' என்று கவன்றாட்கு,பருவங் காட்டி, தோழி, 'வருவர்' எனச் சொல்லியது, - கச்சிப்பேட்டு நன்னாகையார். |
292.குறிஞ்சி |
மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை |
||
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு |
||
ஒன்பதிற்று-ஒன்பது களிற்றொடு, அவள் நிறை |
||
பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான், |
||
பெண் கொலை புரிந்த நன்னன் போல, |
||
வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!- |
||
ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென, |
||
பகை முக ஊரின், துஞ்சலோ இலளே. | உரை | |
தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது. - பரணர் |
294. நெய்தல் |
கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும், |
||
தொடலை ஆயமொடு தழூஉஅணி அயர்ந்தும், |
||
நொதுமலர் போலக் கதுமென வந்து, |
||
முயங்கினன் செலினே, அலர்ந்தன்று மன்னே; |
||
துத்திப் பாந்தள் பைத்து அகல் அல்குல் |
||
திருந்துஇழைத் துயல்வுக் கோட்டு அசைத்த பசுங் குழைத் |
||
தழையினும், உழையின் போகான்; |
||
தான் தந்தனன், யாய் காத்து ஓம்பல்லே, | உரை | |
பகற்குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.- அஞ்சில் ஆந்தை |
295. நெய்தல் |
உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும், |
||
தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி, |
||
விழவொடு வருதி, நீயே; இஃதோ |
||
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை |
||
பெரு நலக் குறுமகள் வந்தென, |
||
இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே. | உரை | |
வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது. - தூங்கலோரி |
297. குறிஞ்சி |
'அவ் விளிம்பு உரீஇய கொடுஞ் சிலை மறவர் |
||
வை வார் வாளி விறற் பகை பேணார், |
||
மாறு நின்று எதிர்ந்த ஆறுசெல் வம்பலர் |
||
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும் |
||
கல் உயர் நனந் தலை, நல்ல கூறி, |
||
புணர்ந்து உடன் போதல் பொருள்' என, |
||
உணர்ந்தேன்மன்ற, அவர் உணரா ஊங்கே. | உரை | |
தோழி வரைவு மலிந்தது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணன். |
298. குறிஞ்சி |
சேரி சேர மெல்ல வந்துவந்து, |
||
அரிது வாய்விட்டு இனிய கூறி, |
||
வைகல்தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன் |
||
பைதல் நோக்கம் நினையாய்-தோழி!- |
||
இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை |
||
வெண் கடைச் சிறுகோல் அகவன்மகளிர் |
||
மடப் பிடிப் பரிசில் மானப் |
||
பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும் புறநிலையே. | உரை | |
கிழத்திக்குத் தோழி குறை மறாமல் கூறியது. - பரணர் |
303. நெய்தல் |
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு |
||
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல் |
||
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ! |
||
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப் |
||
பசந்தனள்மன் என் தோழி-என்னொடும் |
||
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல் |
||
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே. | உரை | |
செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. - அம்மூவன் |
308. குறிஞ்சி |
சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய |
||
அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து, |
||
மயங்குதுயர் உற்ற மையல் வேழம் |
||
உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, |
||
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் |
||
மா மலைநாடன் கேண்மை |
||
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே. | உரை | |
வரைவிடைக் கிழத்தியை வன் சொல் சொல்லி வற்புறுத்தியது. - பெருந்தோட் குறுஞ்சாத்தன் |
309. மருதம் |
கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார், |
||
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட, |
||
நீடிய வரம்பின் வாடிய விடினும், |
||
'கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்' என்னாது' |
||
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் |
||
நின் ஊர் நெய்தல் அனையேம்-பெரும!- |
||
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும், |
||
நின் இன்று அமைதல் வல்லாமாறே. | உரை | |
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது.- உறையூர்ச் சல்லியன் குமாரன் |
317. குறிஞ்சி |
புரி மட மரையான் கரு நரை நல் ஏறு |
||
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது |
||
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து, |
||
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன் |
||
நம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக |
||
வட புல வாடைக்கு அழி மழை |
||
தென் புலம் படரும் தண் பனி நாளே? | உரை | |
பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மதுரைக் கண்டரதத்தன் |
321. குறிஞ்சி |
மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன், |
||
சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன், |
||
நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்- |
||
மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை; |
||
மன்ற மரையா இரிய, ஏறு அட்டு, |
||
செங் கண் இரும் புலி குழுமும்; அதனால், |
||
மறைத்தற் காலையோ அன்றே; |
||
திறப்பல் வாழி-வேண்டு, அன்னை!-நம் கதவே. | உரை | |
தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தோடு நிற்பேன் என்றது. |
324. நெய்தல |
கொடுந் தாள் முதலைக் கோள் வல் ஏற்றை |
||
வழி வழக்கு அறுக்கும் கானல்அம் பெருந் துறை, |
||
இன மீன் இருங் கழி நீந்தி, நீ நின் |
||
நயன் உடைமையின் வருதி; இவள் தன் |
||
மடன் உடைமையின் உவக்கும்; யான் அது, |
||
கவை மக நஞ்சு உண்டாஅங்கு, |
||
அஞ்சுவல்-பெரும!-என் நெஞ்சத்தானே. | உரை | |
செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரா வாராவரைவல்' என்றாற்கு, தோழி அது மறுத்து,வரைவு கடாயது. - கவைமகன் |
328. நெய்தல் |
சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி |
||
அலவன் சிறு மனை சிதைய, புணரி |
||
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன் |
||
நல்கிய நாள் தவச் சிலவே; அலரே, |
||
வில் கெழு தானை விச்சியர் பெருமகன் |
||
வேந்தரொடு பொருத ஞான்றை, பாணர் |
||
புலி நோக்கு உறழ் நிலை கண்ட |
||
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே. | உரை | |
வரைவிடை வேறுபடும் கிழத்தியை, 'அவர் வரையும் நாள் அணித்து' எனவும்,'அலர் அஞ்சல்' எனவும் கூறியது. - பரணர் |
331. பாலை |
நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை, |
||
ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று, |
||
கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் |
||
கடுங்கண் யானைக் கானம் நீந்தி, |
||
இறப்பர்கொல் வாழி-தோழி!-நறுவடிப் |
||
பைங் கால் மாஅத்து அம் தளிர் அன்ன |
||
நல் மா மேனி பசப்ப, |
||
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே. | உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- வாடாப் பிரமந்தன் |
332. குறிஞ்சி |
வந்த வாடைச் சில் பெயற் கடைநாள், |
||
கூறின் எவனோ-தோழி!-நாறு உயிர் |
||
மடப் பிடி தழீஇத் தடக் கை யானை |
||
குன்றகச் சிறுகுடி இழிதரும் |
||
மன்றம் நண்ணிய மலைகிழவோற்கே? | உரை | |
வரையாது வந்தொழுகாநின்ற காலத்து, கிழவன் கேட்பக் கிழத்திக்குத் தோழி கூறியது.- மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன் |
333. குறிஞ்சி |
குறும் படைப் பகழிக் கொடு விற் கானவன் |
||
புனம் உண்டு கடிந்த பைங் கண் யானை |
||
நறுந் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு |
||
குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன் |
||
பணிக் குறை வருத்தம் வீட, |
||
துணியின் எவனோ-தோழி!-நம் மறையே? | உரை | |
'அறத்தோடு நிற்பல்' எனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது. - உழுந்தினைம் புலவன் |
335. குறிஞ்சி |
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர் |
||
இருங் கல் வியல் அறைச் செந் தினை பரப்பிச் |
||
சுனை பாய் சோர்வு இடை நோக்கி, சினை இழிந்து, |
||
பைங் கண் மந்தி பார்ப்பொடு கவரும் |
||
வெற்பு அயல் நண்ணியதுவே-வார் கோல் |
||
வல் விற் கானவர் தங்கைப் |
||
பெருந் தோட் கொடிச்சி இருந்த ஊரே. | உரை | |
இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது. - இருந்தையூர்க் கொற்றன் புலவன் |
336. குறிஞ்சி |
செறுவர்க்கு உவகை ஆக, தெறுவர, |
||
ஈங்கனம் வருபவோ?-தேம் பாய் துறைவ!- |
||
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக் |
||
கடு மா நெடுந் தேர் நேமி போகிய |
||
இருங் கழி நெய்தல் போல, |
||
வருந்தினள், அளியள்-நீ பிரிந்திசினோளே, | உரை | |
தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லியது மறுத்தது. - குன்றியன் |
338. குறிஞ்சி |
திரிமருப்பு இரலை அண்ணல் நல் ஏறு |
||
அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ, |
||
வீ ததை வியல் அரில் துஞ்சி, பொழுது செல, |
||
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை, |
||
பின் பனிக் கடைநாள், தண் பனி அற்சிரம் |
||
வந்தன்று, பெருவிறற் தேரே-பணைத் தோள் |
||
விளங்கு நகர் அடங்கிய கற்பின் |
||
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே. | உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பெருங்குன்றூர் கிழார் |
339. குறிஞ்சி |
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை |
||
உறை அறு மையின் போகி, சாரல் |
||
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன் |
||
மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல் |
||
இனிதுமன் வாழி-தோழி!-மா இதழ்க் |
||
குவளை உண்கண் கலுழப் |
||
பசலை ஆகா ஊங்கலங்கடையே. | உரை | |
வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ் சொல்லி வற்புறீஇயது. - பேயார் |
342. குறிஞ்சி |
கலை கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம் |
||
காவல் மறந்த கானவன், ஞாங்கர், |
||
கடியுடை மரம்தொறும் படு வலை மாட்டும் |
||
குன்ற நாட! தகுமோ-பைஞ் சுனைக் |
||
குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த, |
||
நயந்தோர் புன்கண் தீர்க்கும் |
||
பயம் தலைப்படாஅப் பண்பினை எனினே? | உரை | |
செறிப்பு அறிவுறுக்கப்பட்டான் வரைவின்கண் செல்லாது, பின்னும் வரவு வேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி, வரைவு கடாயது.- காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார் |
343. பாலை |
நினையாய் வாழி-தோழி!-நனை கவுள் |
||
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென- |
||
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை- |
||
வெண் கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக் |
||
கோடை ஒற்றிய கருங் கால் வேங்கை |
||
வாடு பூஞ் சினையின், கிடக்கும் |
||
உயர் வரை நாடனொடு பெயருமாறே. | உரை | |
தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது. - ஈழத்துப் பூதன் தேவன் |
345. நெய்தல் |
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந் தேர் |
||
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇத் |
||
தங்கினிர்ஆயின், தவறோ-தகைய |
||
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல- |
||
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங் கழி |
||
இழுமென ஒலிக்கும் ஆங்கண் |
||
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே? | உரை | |
பகல் வந்து ஒழுகுவானைத் தோழி 'இரா வா' என்றது. - அண்டர் மகன் குறுவழுதி |
346. குறிஞ்சி |
நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங் களிறு, |
||
குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப, |
||
மன்றம் போழும் நாடன்-தோழி!- |
||
சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும், |
||
தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும், |
||
காலை வந்து, மாலைப் பொழுதில் |
||
நல் அகம் நயந்து, தான் உயங்கிச் |
||
சொல்லவும் ஆகாது அஃகியோனே. | உரை | |
தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது. - வாயில் இளங்கண்ணன் |
348. பாலை |
தாமே செல்பஆயின், கானத்துப் |
||
புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த |
||
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய், |
||
இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர் எழில் |
||
பூண் அக வன் முலை நனைத்தலும் |
||
காணார்கொல்லோ-மாணிழை!-நமரே? | உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது. - மாவளத்தன் |
350. பாலை |
அம்ம வாழி-தோழி!-முன் நின்று, |
||
'பனிக் கடுங்குரையம்; செல்லாதீம்' எனச் |
||
சொல்லினம்ஆயின், செல்வர்கொல்லோ- |
||
ஆற்று அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை |
||
நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ, |
||
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும் |
||
மலையுடைக் கானம் நீந்தி, |
||
நிலையாப் பொருட் பிணிப் பிரிந்திசினோரே? | உரை | |
பிரிவு நேர்ந்த தலைமகள், அவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது. - ஆலந்தூர் கிழார். |
351. நெய்தல் |
வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள் |
||
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த |
||
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென |
||
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு |
||
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப் |
||
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி |
||
இன் நகை ஆயத்தாரோடு |
||
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே? | உரை | |
தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, 'நமர் அவர்க்கு வரைவு நேரார்கொல்லோ?'என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது. - அம்மூவன் |
353. குறிஞ்சி |
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக, |
||
கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே, |
||
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே; |
||
நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு, இரவில், |
||
பஞ்சி வெண் திரி செஞ் சுடர் நல் இல் |
||
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ, |
||
அன்னை முயங்கத் துயில் இன்னாதே. | உரை | |
பகற்குறி வந்தொழுகும் தலைமகன் வெளிப்பாடஞ்சி இரவுக்குறி நயந்தானது குறிப்பறிந்த தோழி, இரவின்கண் அன்னையது கவல் அறிந்து, பின்னும் 'பகற்குறியே நன்று, அவ் இரவுக்குறியின்', என்று, ப |
354. மருதம் |
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்; |
||
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்; |
||
தணந்தனைஆயின், எம் இல் உய்த்துக் கொடுமோ- |
||
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க் |
||
கடும் பாம்பு வழங்கும் தெருவில் |
||
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே? | உரை | |
பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- கயத்தூர் கிழான் |
355. குறிஞ்சி |
பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே; |
||
நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே; |
||
எல்லை சேறலின், இருள் பெரிது பட்டன்று; |
||
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் |
||
யாங்கு வந்தனையோ?-ஓங்கல் வெற்ப!- |
||
வேங்கை கமழும் எம் சிறுகுடி |
||
யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே. | உரை | |
இரவுக்குறி நேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது. - கபிலர் |
357. குறிஞ்சி |
முனி படர் உழந்த பாடு இல் உண்கண் |
||
பனி கால் போழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள், |
||
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு, |
||
நல்ல என்னும் சொல்லை மன்னிய- |
||
ஏனல்அம் சிறு தினை காக்கும் சேணோன் |
||
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை |
||
மீன் படு சுடர் ஒளி வெரூஉம் |
||
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே. | உரை | |
தோழி கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது. - கபிலர் |
358. மருதம் |
வீங்குஇழை நெகிழ, விம்மி, ஈங்கே |
|
எறிகண் பேதுறல்; 'ஆய்கோடு இட்டுச் |
|
சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க |
|
வருவேம்' என்ற பருவம் உதுக்காண்: |
|
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப் |
|
பல் ஆன் கோவலர் கண்ணிச் |
|
align="right">உரை |
|
தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - கொற்றன் |
359. மருதம் |
கண்டிசின்-பாண!-பண்பு உடைத்து அம்ம: |
||
மாலை விரிந்த பசு வெண் நிலவின் |
||
குறுங் காற் கட்டில் நறும் பூஞ் சேக்கை, |
||
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ, |
||
புதல்வற் தழீஇயினன் விறலவன்; |
||
புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே. | உரை | |
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிப் பெறாது, தானே புக்குக் கூடியது கண்டு தோழி, பாணற்குச் சொல்லியது. - பேயன். |
363. மருதம் |
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு, |
||
செங் காற் பதவின் வார் குரல் கறிக்கும் |
||
மடக் கண் மரையா நோக்கி, வெய்துற்று, |
||
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும் |
||
இன்னா அருஞ் சுரம் இறத்தல் |
||
இனிதோ-பெரும!-இன் துணைப் பிரிந்தே? | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது. - செல்லூர்க் கொற்றன் |
365. குறிஞ்சி |
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும் |
||
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே- |
||
துன் அரு நெடு வரைத் ததும்பி அருவி |
||
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும் |
||
மருங்கில் கொண்ட பலவின் |
||
பெருங் கல் நாட! நீ நயந்தோள் கண்ணே. | உரை | |
'யான் வரையுந்துணையும் ஆற்றவல்லளோ?' என வினவிய கிழவற்குத் தோழி சொல்லியது.- மதுரை நல்வெள்ளி |
366. குறிஞ்சி |
பால் வரைந்து அமைத்தல் அல்லது, அவர்வயின் |
||
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ?- |
||
வேறு யான் கூறவும் அமையாள், அதன் தலைப் |
||
பைங் கண் மாச் சுனைப் பல் பிணி அவிழ்ந்த |
||
வள் இதழ் நீலம் நோக்கி, உள் அகைபு, |
||
ஒழுகு கண்ணள் ஆகி, |
||
பழுது அன்று அம்ம, இவ் ஆயிழை துணிவே. | உரை | |
காவல் மிகுதிக்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு, இவ் வேறுபாடு எற்றினான் ஆயது?' என்று செவிலி வினாவ, தோழி கூறியது. - பேரிசாத்தன் |
367. மருதம் |
கொடியோர் நல்கார்ஆயினும், யாழ நின் |
||
தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர், |
||
உவக்காண்-தோழி!-அவ் வந்திசினே- |
||
தொய்யல் மா மழை தொடங்கலின், அவர் நாட்டுப் |
||
பூசல் ஆயம் புகன்று இழி அருவி |
||
மண்ணுறு மணியின் தோன்றும் |
||
தண் நறுந் துறுகல் ஓங்கிய மலையே. | உரை | |
வரைவு உணர்த்திய தோழி தலைமகட்குக் கழியுவகை மீதூராமை உணர்த்தியது;வரைவு நீட்டித்த இடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றும் வகையான் ஆற்றுவித்ததூஉம் ஆம். - மதுரை மருதன் இளநாகன் |
369. பாலை |
அத்த வாகை அமலை வால் நெற்று, |
||
அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக் |
||
கோடை தூக்கும் கானம் |
||
செல்வாம்-தோழி!-நல்கினர் நமரே. | உரை | |
தோழி கிழத்திக்கு உடன் போக்கு உணர்த்தியது. - குடவாயில் கீரத்தனார் |
372. குறிஞ்சி |
பனைத் தலைக்-கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய, |
||
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பைக் |
||
கணம் கொள் சிமைய உணங்கும் கானல், |
||
ஆழி தலைவீசிய அயிர்ச் சேற்று அருவிக் |
||
கூழை பெய் எக்கர்க் குழீஇய பதுக்கை |
||
புலர் பதம் கொள்ளா அளவை, |
||
அலர் எழுந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. | உரை | |
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்ப, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - விற்றூற்று மூதெயினனார் |
373. குறிஞ்சி |
நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும், |
||
இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும், |
||
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக் |
||
கேடு எவன் உடைத்தோ-தோழி!-நீடு மயிர்க் |
||
கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை |
||
புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி |
||
காந்தள்அம் சிறுகுடிக் கமழும் |
||
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? | உரை | |
அலர் மிக்கவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- மதுரைக் கொல்லன் புல்லன் |
374. குறிஞ்சி |
எந்தையும் யாயும் உணரக் காட்டி |
||
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின், |
||
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப, |
||
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே- |
||
முடங்கல் இறைய தூங்கணம்குரீஇ, |
||
நீடு இரும் பெண்ணைத் தொடுத்த |
||
கூடினும் மயங்கிய மையல் ஊரே. | உரை | |
அறத்தோடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது. - உறையூர்ப் பல்காயனார் |
375. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி!-இன்று அவர் |
||
வாரார் ஆயினோ நன்றே-சாரல் |
||
சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து |
||
இரவு அரிவாரின், தொண்டகச் சிறு பறை |
||
பானாள் யாமத்தும் கறங்கும். |
||
யாமம் காவலர் அவியாமாறே. | உரை | |
இரவுக்குறிக்கண், சிறைப்புறமாகத் தோழி தலைமகற்குச் சொல்லுவாளாய், இரு பொழுதும் மறுத்து வரைவு கடாயது. |
379. பாலை |
இன்று யாண்டையனோ-தோழி!-குன்றத்துப் |
||
பழங் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு, |
||
கண் அகன் தூ மணி, பெறூஉம் நாடன், |
||
'அறிவு காழ்க்கொள்ளும் அளவை, செறிதொடி! |
||
எம்மில் வருகுவை நீ' எனப் |
||
பொம்மல் ஓதி நீவியோனே? | உரை | |
நொதுமலர் வரைவுழித் தோழி அறத்தோடு நின்றது. |
380. பாலை |
விசும்பு கண் புதையப் பாஅய், வேந்தர் |
||
வென்று எறி முரசின் நன் பல முழங்கி, |
||
பெயல் ஆனாதே, வானம்; காதலர் |
||
நனி சேய் நாட்டர்; நம் உன்னலரே; |
||
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-ஈங்கைய |
||
வண்ணத் துய்மலர் உதிர |
||
முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே! | உரை | |
பனிப் பருவம் குறித்துப் பிரிந்தான் தலைமகன்; பிரிய, பருவ வரவின்கண் வேறுபடுவாளாயினும், 'கதுமென ஆற்றுவிப்பது அரிது' என்னும் கருத்தினளாய்,கூதிர்ப்பருவத்து, தலைமகள் கேட்பத் தனது ஆற்ற |
381. நெய்தல் |
தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய் |
||
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது, |
||
பசலை ஆகி, விளிவதுகொல்லோ- |
||
வெண் குருகு நரலும் தண் கமழ் கானல், |
||
பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி, |
||
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு |
||
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே? | உரை | |
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கலுறும் தோழி தலைமகனைத் இயற்பழித்தது. |
382. முல்லை |
தண் துளிக்கு ஏற்ற பைங் |
||
கொடி முல்லை |
||
முகை தலைதிறந்த நாற்றம் புதல்மிசைப் |
||
பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல, |
||
வம்புப் பெய்யுமால் மழையே; வம்பு அன்று, |
||
கார் இது பருவம் ஆயின், |
||
வாராரோ, நம் காதலோரே? | உரை | |
பருவ வரவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று; வம்பு' என்று வற்புறீஇயது. - குறுங்கீரன் |
383. பாலை |
நீ உடம்படுதலின், யான் தர, வந்து, |
||
குறி நின்றனனே, குன்ற நாடன்; |
||
'இன்றை அளவைச் சென்றைக்க என்றி; |
||
கையும் காலும் ஓய்வன ஒடுங்கத் |
||
தீ உறு தளிரின் நடுங்கி, |
||
யாவதும், இலை, யான் செயற்கு உரியதுவே. | உரை | |
உடன்போக்கு நேர்வித்து வந்த தோழி, நாணால் வருந்தும் தலைமகளை, நாணுக் கெடச் சொல்லியது. - படுமரத்து மோசி கீரன் |
384. மருதம் |
உழுந்துடை கழுந்தின் கரும்புடைப் பணைத் தோள், |
||
நெடும் பல் கூந்தல், குறுந்தொடி, மகளிர் |
||
நலன் உண்டு துறத்தி ஆயின், |
||
மிக நன்று அம்ம-மகிழ்ந!-நின் சூளே. | உரை | |
'நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளூறவு நன்றாயிருந்தது!' என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது. - ஓரம்போகியார் |
388. குறிஞ்சி |
நீர் கால்யாத்த நிரை இதழ்க் குவளை |
||
கோடை ஒற்றினும் வாடாதாகும்; |
||
கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ |
||
உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன |
||
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின், |
||
யானை கைம்மடித்து உயவும் |
||
கானமும் இனிய ஆம், நும்மொடு வரினே. | உரை | |
தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை உணர்ந்த தலைமகன், சுரத்து வெம்மையும்,தலைமகள் மென்மையும் குறித்து, செலவு அழுங்கலுறுவானைத் தோழி அழுங்காமற் கூறியது. - ஒளவையார் |
389. குறிஞ்சி |
நெய் கனி குறும்பூழ் காயம் ஆக |
||
ஆர்பதம் பெறுக-தோழி! அத்தை- |
||
பெருங் கல் நாடன் வரைந்தென, அவன் எதிர் |
||
'நன்றோ மகனே?' என்றனென்; |
||
'நன்றே போலும்' என்று உரைத்தோனே. | உரை | |
தலைமகன் குற்றேவல் மகனால் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- வேட்ட கண்ணன் |
392. குறிஞ்சி |
அம்ம வாழியோ-மணிச் சிறைத் தும்பி!- |
||
நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு |
||
அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின், |
||
கடவை மிடைந்த துடவைஅம் சிறு தினைத் |
||
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை |
||
நிரை செலல் நுண் தோல் போலப் |
||
பிரசம் தூங்கு மலைகிழவோற்கே! | உரை | |
வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - தும்பிசேர் கீரனார் |
393. மருதம் |
மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன் |
||
முயங்கிய நாள் தவச் சிலவே அலரே, |
||
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் |
||
பசும் பூட் பாண்டியன் வினை வல் அதிகன் |
||
களிறொடு பட்ட ஞான்றை, |
||
ஒளிறு வாட் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே | உரை | |
தலைமகன் சிறைப்புறமாக, தோழி அலர் மலிவு உரைத்தது, வரைவு கடாயது.- பரணர் |
394. குறிஞ்சி |
முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி |
||
நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற |
||
குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி, |
||
முன் நாள் இனியது ஆகி, பின் நாள் |
||
அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு, |
||
பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே. | உரை | |
வரைவிடை ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது. - குறியிறையார் |
397. நெய்தல் |
நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ |
||
நெய்தல் மா மலர்ப் பெய்த போல |
||
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப! |
||
தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு, |
||
'அன்னாய்!' என்னும் குழவி போல, |
||
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும், |
||
நின் வரைப்பினள் என் தோழி; |
||
தன் உறு விழுமம் களைஞரோ இலளே. | உரை | |
வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது. - அம்மூவன் |