மா - குதிரை 2321- வா மா(ன்) 2321
மரம் 2078
வண்டு 2133 (கள் கவர் மா)
மாக்கனி - மாம்பழம் 2078
மாகதர் - பாடல் - தேன் கலந்து  
செவியில் வார்த்தல்(உவ) 2117
மாகதர் பாடல் - உடற்கு - உயிர் (உவ) 2117
மா கந்தம் - பெரு நறுமணம் 1929
மாகம் - மேல் உலகம் 1515
மாகம் - மணி வேதிகை (உவ) 1852
மாகம் - மணி - புருடராகம் 1852
மாசு அடைந்த மெய் 2331
மாசுணம் -மலைப்பாம்பு 2080
'பேரா, பெரு மூச்சு ஏறி மாசுனம் '  
மாசுனம் அச்சத்தால்  
தம் மணி சிந்தல்;  
மாசுணம் வேழத்தை மேகம்  
(மழை)  
எனக் கருதி விட்டிடல்  
மாடங்கள் - மங்கல வன்ளை நீத்தல்  
- கண் குழித்து அழுதல்  
(இராமன் பிரிவு பொறாது)  
போலுதல் 1800
மாடங்கள் - திரு நீங்கிய தாமரை  
போலுதல் 1802
மாடு - பக்கம், அருகு 1400
‘புரைவலன் துயில மாடே’  
மாண்ட - மாட்சிமைப்பட்ட 1612 2030
‘மாண்ட என் மனைவியோடு’  
‘மாண் தக்கோனே’  
மாணமற்கு 1647
மாணா உரையாள் 1644
மாணிக்கம் - மணிக்கல் பாறை  
-மற்றொரு  
பருதி 2060 2065
மாணிக்கம் -கதிர் செறிந்தது,  
மாணிக்கச் செவ்வொளி  
படர் மலைச்சிகரம் -சிவன்;  
அருவி  
கங்கை 2052
மாணிக்கம் பேர்கிலாது, திரியாப்  
பரிதி போலும் 2060
மாணிக்கப் பாறையில் முத்து  
- செக்கரிலி தாரகை 2072
மாணை - கொடி 2034
மாத்துயர் 1418
மாதங்கம் வரு கலம் - மேருவுடன்  
கூடிய பார் 2169
மாதர் - மூதின் மகளிர் 1560
- வேறுள மகளிர்  
சிறு வயது மகளிர்; மாதர் - ஒசி  
பூங்கொடி (உவ) 1699
மாதர் - கோசலை ஒத்தல் 1560
மாதர் அணிகளின் ஒளி தேவர்  
கண்களை மறைத்தல் 1569
மாதர் - மயிற்குலம் 1545
மாதர் பாதம் தீண்டுதலால்  
ஓடங்களும் உயிர்பெற்றன போலும் 2362
மாதரைக் தஞ்சு (பற்றுக்கோடு)  
எனக் கொள்ளல் உள்ளல் ஆகாது 1511
மாத(ரா)ர் போகம் நுகர்தல் 2387
மாத(ரா)ர் மக்களை மறத்தல் 1801
மாத(ரா)ர் வருணனை 1562 1564
மாத(ரா)ர் கைகளால் கண்களை  
மோததுதல், மார்பில் அடித்துக்  
கொள்ளவும் செய்வர் 1772
காந்தள் கொண்டு கமலம்  
புடைப்பர்  
மாதவக் கிழவன் 1570
மாதவத்து ஓங்கலை 2377
மாதவப் பள்ளி 1936
மாதவம் 1380
மாதவம் தொடங்கி நோன்பு  
இழைத்தவரும்  
துயரம் துறந்தவர் அல்லர் 1380
மாதவர் 1628
மாதவர்க்குக்கடுவன் வழிகாட்டுதல் 2075
மாதவர்க்கு துயரம் சூழ்ந்தவன் 2199
மாதவன் 1357 1371
மாதவிச் சூழல்  
- பல்லவ சயனம் 1852
லதாக்ரஹம், கொடிமனை 2068
மாதுலன் - மாமனார் 1480
மாதுயர் (நீ துயர்) 1460
மாந்தர் 1697 1916
மாந்தர் தயரதன் ஒத்தார் 1560
மாந்தளிர் மேனி 2003
மாந்துதல் - பருகல் 1559 1935
மாநரகம் 1950
மாநிலச்சுமை உறும் சிறை 1374
மாநிலத்து அறிஞர் 2243
மா நிலம் தாங்கு என்ற சொல்  
வஞ்சமோ நஞ்சமோ? 1614
மா பூதம் 1313
மாமணி - சிந்தாமணி  
- தெய்வமணி 2383
மாமழையே அணையான் 1644
மாமியர் - மாமியார் இருவர் 1820
- அத்தையர்மூவர் 1878
- பொன் அனார் மூவர் 2466
மாமியர், மருகியைத் தழுவித்  
துயர் உறல் 2466
மாயக் கைகேயி 1676
மாயம் நீங்கிய சிந்தனை 2094
மாயன் நெடுமையால் அன்று  
அளந்த உலகு 2370
மாயனைத் தன் வயிற்றல்  
அடக்கும் தவம் 1406
உலகு ஒடுக்கும் திரு  
வயிற்றிற்கு ஒரு குழவி -அக்  
குழவியைத்  
‘திரு உறப் பயந்தவள்  
தீது அறியாக் கோசலை  
மயாப் பழியாள் - கைகேயி 1747
மாயா வன்பழி 2177
மாயை 2056
மார்பகம் சேர்த்தல் -அணைத்தல் 1371
மார்பு அரிதின் பெற்ற செய்யாள்  
மார்பு அலங்கலின் கெண்ட,  
வண்டு உல 1367
மார்பு கல் (உவ) 1958
மார்பின் மென்தோல் முனிவன் 1671
மாரன் - மன்மதன் - கருவேன் 1548
மாருதம் - காற்று - மாவாதம்  
சண்ட மாருதம் (பயல்)  
மந்த மாருதம் (தென்றல் ) 2013
வாச மாருதம் -  
பொங்கரில் நுழைந்நு  
மால் - மயக்கம் 1407
- பெருமை  
மால்வரைத் கொடுமுடி  
-அகிற்புகையோடு அளாய  
ஆகுதிப் புகை 2063
பல்வகைப் புகை - சிலம்பு  
மால்வரைத்தோள் 2035
மாலை - வரிசை; தன்மை 1464 1724 2009 2047,
- ஆரம் 1458 1459
-மாலை நேரம் 2088
மாலைர வருணனை 2083 - 2087
மா அலர் 2005
மாவகிர் - கண் (உவ) 1851 2075
மா வலி தான் அனையான் 1661
மாவலி அவுணர் 2251
மா வாதம் - பெருங்காற்று 1700
மா வாதம் மராமரம்  
சாய்க்கும்-  
இராமன் வனவாசம்  
அரசரை வருத்தும் (உவ) 1700
மாவியல் (மா இயல்) உதயம்  
- அவதாரம் 2083
மாவியல் (மா இயல்) தானை 1840
மாழ்கல் - மாழ்குதல் - வருந்தல் மி. 235
மாழை - மாவடு - கண் (உவ)  
மாவடுப் பிளப்பு  
உண்கண் 2135 1908
- ஒண் க(ண்)ணி 1486
மாளிகை - மி. 207
- மலை (உவ) 1361 1804
மாளிகை துகில் கொடி 2049
- மூங்கிலில் அசையும் அரவுரி 2049
மாளிகை (நாறு ) அகில்புகை  
இழத்தல் 1799 2126
மாளிகை வீதி 1361
மாளுதல் (மாள் - பகுதி ) 1499
மாற்றம் 1457 1742 2161 2339
மாற்றலன் 2215
மாற்றவள் 1479
மாற்றவளுக்கு  
ஆள் படுதல் - இழிவு 1460
மாற்றாள் 1656
மாற்றுதல் - ஆற்றதல் (பா-ம்) 1633
மாறில் (மாறு இல் ) மண்டிலம் 2060
மாறி வந்து பிறத்தல் 2393
மாறி வந்து பிறந்தன மாட்சியர் 2393
மாறும் மீண்டும், மற்றும் 1390
மாறு கொள்ளுதல் 2118
மான்- புரவி  
மான் தேர் - 1892
பால் புரை புரவி நால்குடன்  
பூட்டிய தேர்  
மான் கன்றுகள் புலியின்  
முலை உண்ணல் 2039
மான் மறிக் கரத்தான் - 1630
மான், விழி, கண்டு சீதையைத்  
தன் இனம் எனக் கருதல்  
மான்று (மால் - பகுதி) மயங்கி 2389
மானம் - சீறும் தன்மை - வன்மை 1921
-விமானம் 1899 2081 2226
-பெருமை 2352 2440 2456
மான மந்திரத்தவர் 2456
மானமாந்தர் 2245 2461
மானவ! 1393
மானவ (அ)ரவு - 1921
மானவன் - மனு மரவினன், 10608 1856 1972
மானும் - ஒத்திருக்கும் 2001
மானை எடுக்கும் யானை  
- கைகேயி தழீஇ எடுக்கும்  
தயரதன் (உவ) 1497

அகரவரிசை