முகப்பு |
பாலை |
2. பாலை |
அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து, |
||
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு, |
||
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த |
||
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய, |
||
5 |
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, |
|
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே; |
||
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று |
||
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம், |
||
காலொடு பட்ட மாரி |
||
10 |
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே! | உரை |
உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது.-பெரும்பதுமனார்
|
3. பாலை |
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப் |
||
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல், |
||
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து, |
||
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் |
||
5 |
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச் |
|
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை |
||
உள்ளினென் அல்லெனோ, யானே-உள்ளிய |
||
வினை முடித்தன்ன இனியோள் |
||
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே? | உரை | |
முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.-இளங்கீரனார்
|
7. பாலை |
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க, |
||
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப, |
||
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக் |
||
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப, |
||
5 |
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் |
|
இன்னே பெய்ய மின்னுமால்-தோழி! |
||
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை |
||
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும் |
||
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே. | உரை | |
பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டியிடைக் கழிந்து பொருள்வயிற்பிரிய,ஆற்றாளாய தலைவிக்குத்தோழிசொல்லியது.-நல்வெள்ளியார்
|
9. பாலை |
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள் |
||
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு, |
||
அலமரல் வருத்தம் தீர, யாழ நின் |
||
நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின், |
||
5 |
பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி |
|
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி, |
||
நிழல் காண்தோறும் நெடிய வைகி, |
||
மணல் காண்தோறும் வண்டல் தைஇ, |
||
வருந்தாது ஏகுமதி-வால் எயிற்றோயே! |
||
10 |
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் |
|
நறுந் தண் பொழில, கானம்; |
||
குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே. | உரை | |
உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
10. பாலை |
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும், |
||
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த |
||
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும், |
||
நீத்தல் ஓம்புமதி-பூக் கேழ் ஊர! |
||
5 |
இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் |
|
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர், |
||
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன் |
||
பழையன் வேல் வாய்த்தன்ன நின் |
||
பிழையா நல் மொழி தேறிய இவட்கே. | உரை | |
உடன்போக்கும் தோழி கையடுத்தது.
|
12. பாலை |
விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப் |
||
பாசம் தின்ற தேய் கால் மத்தம் |
||
நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும் |
||
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால் |
||
5 |
அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் |
|
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள், |
||
'இவை காண்தோறும் நோவர்மாதோ; |
||
அளியரோ அளியர் என் ஆயத்தோர்!' என |
||
நும்மொடு வரவு தான் அயரவும், |
||
10 |
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே. | உரை |
தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது.- கயமனார்
|
14. பாலை |
தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய, |
||
நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்; |
||
நட்டனர், வாழி!-தோழி!-குட்டுவன் |
||
அகப்பா அழிய நூறி, செம்பியன் |
||
5 |
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது |
|
அலர் எழச் சென்றனர் ஆயினும்-மலர் கவிழ்ந்து |
||
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல், |
||
இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென, |
||
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல் |
||
10 |
நெடு வரை விடரகத்து இயம்பும் |
|
கடு மான் புல்லிய காடு இறந்தோரே. | உரை | |
இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.- மாமூலனார்
|
16. பாலை |
புணரின் புணராது பொருளே; பொருள்வயிற் |
||
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச் |
||
செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்கு |
||
உரியை-வாழி, என் நெஞ்சே!-பொருளே, |
||
5 |
வாடாப் பூவின் பொய்கை நாப்பண் |
|
ஓடு மீன் வழியின் கெடுவ; யானே, |
||
விழுநீர் வியலகம் தூணிஆக |
||
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும், |
||
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண் |
||
10 |
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்; |
|
எனைய ஆகுக! வாழிய பொருளே! | உரை | |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவு அழுங்கியது.-சிறைக்குடி ஆந்தையார்
|
18. பாலை |
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல |
||
வருவர் வாழி-தோழி!-மூவன் |
||
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின், |
||
கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல் |
||
5 |
தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை, |
|
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர் |
||
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப, |
||
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத் |
||
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன, |
||
10 |
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே. | உரை |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பொய்கையார்
|
24. பாலை |
'பார் பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு |
||
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின், |
||
ஆட்டு ஒழி பந்தின், கோட்டு மூக்கு இறுபு, |
||
கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம் |
||
5 |
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச் |
|
சேறும், நாம்' எனச் சொல்ல-சேயிழை!- |
||
'நன்று' எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே; |
||
செயல்படு மனத்தர் செய்பொருட்கு |
||
அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே. | உரை | |
பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது. -கணக்காயனார்
|
28. பாலை |
என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும், |
||
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும். |
||
அன்னை போல இனிய கூறியும், |
||
கள்வர் போலக் கொடியன்மாதோ- |
||
5 |
மணி என இழிதரும் அருவி, பொன் என |
|
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து, |
||
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில் |
||
ஓடு மழை கிழிக்கும் சென்னி, |
||
கோடு உயர் பிறங்கல், மலைகிழவோனே! | உரை | |
பிரிவின்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது; குறை நயப்பும் ஆம்.-முதுகூற்றனார்
|
29. பாலை |
நின்ற வேனில் உலந்த காந்தள் |
||
அழல் அவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது, |
||
ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென, |
||
மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய, |
||
5 |
புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறி |
|
யாங்கு வல்லுநள்கொல்தானே-யான், 'தன் |
||
வனைந்து ஏந்து இள முலை நோவகொல்!' என |
||
நினைந்து, கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன் |
||
பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ, |
||
10 |
வெய்ய உயிர்க்கும் சாயல், |
|
மை ஈர் ஓதி, பெரு மடத்தகையே? | உரை | |
மகள்போக்கிய தாய்சொல்லியது.- பூதனார்
|
33. பாலை |
'படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை, |
||
முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை, |
||
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து, |
||
கல்லுடைப் படுவில் கலுழி தந்து, |
||
5 |
நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில், |
|
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை, |
||
இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல் |
||
வல்லுவம்கொல்லோ, மெல்லியல்! நாம்?' என |
||
10 |
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி, |
|
நல் அக வன முலைக் கரை சேர்பு |
||
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே. | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது.- இளவேட்டனார்
|
37. பாலை |
பிணங்கு அரில் வாடிய பழ விறல்நனந் தலை, |
||
உணங்குஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி |
||
பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று |
||
இவளொடும் செலினோ நன்றே; குவளை |
||
5 |
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ, |
|
கலை ஒழி பிணையின் கலங்கி, மாறி |
||
அன்பிலிர் அகறிர் ஆயின், என் பரம் |
||
ஆகுவது அன்று, இவள் அவலம்-நாகத்து |
||
அணங்குடை அருந் தலை உடலி, வலன் ஏர்பு, |
||
10 |
ஆர்கலி நல் ஏறு திரிதரும் |
|
கார் செய் மாலை வரூஉம் போழ்தே. | உரை | |
வரைவிடை வைத்துப்பிரிவின்கண் தோழி சொல்லியது.-பேரி சாத்தனார்
|
41. பாலை |
பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்த |
||
வெண் புறக் களரி விடு நீறு ஆடி, |
||
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப் |
||
பாஅர் மலி சிறு கூவலின் தணியும் |
||
5 |
நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ- |
|
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு, |
||
கிளர் இழை அரிவை! நெய் துழந்து அட்ட |
||
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி, |
||
சிறு நுண் பல் வியர் பொறித்த |
||
10 |
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே. | உரை |
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல்கூறி வற்புறுத்தியது.-இளந்தேவனார்
|
43. பாலை |
துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின் |
||
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன், |
||
ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி |
||
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு |
||
5 |
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் |
|
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே |
||
மெய்ம் மலி உவகை ஆகின்று; இவட்கே, |
||
அஞ்சல் என்ற இறை கைவிட்டென, |
||
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின், |
||
10 |
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில் |
|
ஓர் எயின் மன்னன் போல, |
||
அழிவு வந்தன்றால், ஒழிதல் கேட்டே. | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவனைச் செலவு அழுங்குவித்தது.-எயினந்தையார்
|
46. பாலை |
வைகல்தோறும் இன்பமும் இளமையும் |
||
எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து; |
||
காணீர் என்றலோ அரிதே; அது நனி |
||
பேணீர் ஆகுவிர்-ஐய! என் தோழி |
||
5 |
பூண் அணி ஆகம் புலம்ப, பாணர் |
|
அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி, |
||
பறை அறை கடிப்பின், அறை அறையாத் துயல்வர, |
||
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து, |
||
எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து, |
||
10 |
நன் வாய் அல்லா வாழ்க்கை |
|
மன்னாப் பொருட் பிணிப் பிரிதும் யாம் எனவே. | உரை | |
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது.
|
48. பாலை |
அன்றை அனைய ஆகி, இன்றும், எம் |
||
கண் உளபோலச் சுழலும்மாதோ- |
||
புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ |
||
வைகுறு மீனின் நினையத் தோன்றி, |
||
5 |
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை, |
|
கிடின்என இடிக்கும் கோல் தொடி மறவர் |
||
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது |
||
அமரிடை உறுதர, நீக்கி, நீர் |
||
எமரிடை உறுதர ஒளித்த காடே. | உரை | |
பிரிவு உணர்த்திய தலைவற்குத் தோழி சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
52. பாலை |
மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித் |
||
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் |
||
மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள் |
||
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி, |
||
5 |
வீங்கு உவர்க் கவவின் நீங்கல்செல்லேம்; |
|
நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும் |
||
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே; |
||
அன்பு இலை; வாழி, என் நெஞ்சே! வெம் போர் |
||
மழவர் பெரு மகன் மா வள் ஓரி |
||
10 |
கை வளம் இயைவது ஆயினும், |
|
ஐது ஏகு அம்ம, இயைந்து செய் பொருளே. | உரை | |
தலைமகன் செலவு அழுங்கியது.-பாலத்தனார்
|
56. பாலை |
குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ |
||
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய, |
||
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை, |
||
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச் |
||
5 |
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா, |
|
ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்கொல்லோ |
||
அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து, |
||
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி, |
||
'ஏதிலாட்டி இவள்' எனப் |
||
10 |
போயின்று கொல்லோ, நோய் தலைமணந்தே | உரை |
வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைவி சொல்லியது.-பெருவழுதி
|
62. பாலை |
வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை |
||
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன |
||
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து, |
||
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து, |
||
5 |
உள்ளினென் அல்லெனோ யானே-'முள் எயிற்று, |
|
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல், |
||
எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள், |
||
உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப |
||
உலவை ஆகிய மரத்த |
||
10 |
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது' எனவே? | உரை |
முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது.-இளங்கீரனார்
|
66. பாலை |
மிளகு பெய்தனைய சுவைய புன் காய் |
||
உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட |
||
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன் |
||
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி, |
||
5 |
புன் புறா உயவும் வெந் துகள் இயவின், |
|
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும், |
||
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல்லோ- |
||
கோதை மயங்கினும், குறுந் தொடி நெகிழினும், |
||
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும், |
||
10 |
மாண் நலம் கையறக் கலுழும் என் |
|
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே? | உரை | |
மனை மருட்சி.-இனிசந்த நாகனார்
|
71. பாலை |
மன்னாப் பொருட் பிணி முன்னி, 'இன்னதை |
||
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து' எனப் |
||
பல் மாண் இரத்திர்ஆயின், 'சென்ம்' என, |
||
விடுநள் ஆதலும் உரியள்; விடினே, |
||
5 |
கண்ணும் நுதலும் நீவி, முன் நின்று, |
|
பிரிதல் வல்லிரோ-ஐய! செல்வர் |
||
வகை அமர் நல் இல் அக இறை உறையும் |
||
வண்ணப் புறவின் செங் காற் சேவல் |
||
வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல் |
||
10 |
நும் இலள் புலம்பக் கேட்டொறும் |
|
பொம்மல் ஓதி பெரு விதுப்புறவே? | உரை | |
தலைவனைத் தோழி செலவு அழுங்குவித்தது.-வண்ணப்புறக் கந்தரத்தனார்
|
73. பாலை |
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன |
||
மாணா விரல வல் வாய்ப் பேஎய் |
||
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய, |
||
மன்றம் போழும் புன்கண் மாலை, |
||
5 |
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச் |
|
செல்ப என்ப தாமே-செவ் அரி |
||
மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச் |
||
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும் |
||
பூக் கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என் |
||
10 |
நுதற் கவின் அழிக்கும் பசலையும், |
|
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே. | உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது.-மூலங்கீரனார்
|
76. பாலை |
வருமழை கரந்த வால் நிற விசும்பின் |
||
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு |
||
ஆல நீழல் அசைவு நீக்கி, |
||
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ, |
||
5 |
வருந்தாது ஏகுமதி-வால் இழைக் குறுமகள்!- |
|
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை |
||
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் |
||
கானல் வார் மணல் மரீஇ, |
||
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே! | உரை | |
புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடைச் சுரத்துத் தலைவிக்கு உரைத்தது.-அம்மூவனார்
|
'சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ, |
||
கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர் |
||
மணல் ஆடு கழங்கின், அறை மிசைத் தாஅம் |
||
ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப் |
||
5 |
பிரிந்தோர் வந்து, நப்புணரப் புணர்ந்தோர் |
|
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?' |
||
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்; |
||
செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று- |
||
அம்ம! வாழி, தோழி!- |
||
10 |
யாதனின் தவிர்க்குவம், காதலர் செலவே? | உரை |
பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.-கண்ணகனார்
|
84. பாலை |
கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும், |
||
திதலை அல்குலும் பல பாராட்டி, |
||
நெருநலும் இவணர் மன்னே! இன்றே, |
||
பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர் |
||
5 |
மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம், |
|
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற |
||
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன |
||
உவர் எழு களரி ஓமை அம் காட்டு, |
||
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ் சுரம் |
||
10 |
ஏகுவர் என்ப, தாமே-தம்வயின் |
|
இரந்தோர் மாற்றல் ஆற்றா |
||
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே. | உரை | |
பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது.
|
86. பாலை |
அறவர், வாழி-தோழி! மறவர் |
||
வேல் என விரிந்த கதுப்பின் தோல |
||
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் |
||
கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக் |
||
5 |
கை வல் வினைவன் தையுபு சொரிந்த |
|
சுரிதக உருவின ஆகிப் பெரிய |
||
கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை |
||
நல் தளிர் நயவர நுடங்கும் |
||
முற்றா வேனில் முன்னி வந்தோரே! | உரை | |
குறித்த பருவத்தின்வினைமுடித்து வந்தமை கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.-நக்கீரர்
|
92. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி!-துணையொடு |
||
வேனில் ஓதி பாடு நடை வழலை |
||
வரி மரல் நுகும்பின் வாடி, அவண |
||
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன் |
||
5 |
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் |
|
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர், |
||
புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர, |
||
வில் கடிந்து ஊட்டின பெயரும் |
||
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே! | உரை | |
பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.
|
103. பாலை |
ஒன்று தெரிந்து உரைத்திசின்-நெஞ்சே! புன் கால் |
||
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று, |
||
கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின் |
||
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து, |
||
5 |
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் |
|
பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய் |
||
மாயா வேட்டம் போகிய கணவன் |
||
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் |
||
விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே; |
||
10 |
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும், |
|
மீள்வாம் எனினும், நீ துணிந்ததுவே. | உரை | |
பொருள்வயிற்பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக்கழறியது.-மருதன் இள நாகனார்
|
105. பாலை |
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து |
||
ஒளிர் சினை அதிர வீசி, விளிபட |
||
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில், |
||
கடு நடை யானை கன்றொடு வருந்த, |
||
5 |
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் |
|
அருஞ் சுரக் கவலைய என்னாய்; நெடுஞ் சேண் |
||
பட்டனை, வாழிய-நெஞ்சே!-குட்டுவன் |
||
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை |
||
வண்டு படு வான் போது கமழும் |
||
10 |
அம் சில் ஓதி அரும் படர் உறவே. | உரை |
இடைச் சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது.-முடத்திருமாறன்
|
107. பாலை |
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்ப் |
||
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக் |
||
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை, |
||
செல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம் |
||
5 |
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும், |
|
புல் இலை ஓமைய, புலி வழங்கு அத்தம் |
||
சென்ற காதலர்வழி வழிப்பட்ட |
||
நெஞ்சே நல்வினைப்பாற்றே; ஈண்டு ஒழிந்து, |
||
ஆனாக் கௌவை மலைந்த |
||
10 |
யானே, தோழி! நோய்ப்பாலேனே. | உரை |
பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது
|
109. பாலை |
'ஒன்றுதும்' என்ற தொன்று படு நட்பின் |
||
காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று, |
||
'அன்னவோ, இந் நன்னுதல் நிலை?' என, |
||
வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி |
||
5 |
உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென |
|
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில், |
||
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து, |
||
உச்சிக் கட்டிய கூழை ஆவின் |
||
நிலை என, ஒருவேன் ஆகி |
||
10 |
உலமர, கழியும், இப் பகல் மடி பொழுதே! | உரை |
பிரிவிடை ஆற்றாளாய தலைமளது நிலைகண்ட தோழிக்குத் தலைமகள்சொல்லியது.-மீளிப் பெரும்பதுமனார்
|
110. பாலை |
பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால் |
||
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி, |
||
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல், |
||
'உண்' என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர் |
||
5 |
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று, |
|
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர் |
||
பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி, |
||
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி |
||
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்? |
||
10 |
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென, |
|
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள், |
||
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல, |
||
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே! | உரை | |
மனைமருட்சி; மகள்நிலை உரைத்ததூஉம் ஆம்.-போதனார்
|
113. பாலை |
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப் |
||
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய் |
||
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம் |
||
பெருங் காடு இறந்தும், எய்த வந்தனவால்- |
||
5 |
'அருஞ் செயல் பொருட் பிணி முன்னி, யாமே |
|
சேறும், மடந்தை!' என்றலின், தான் தன் |
||
நெய்தல் உண்கண் பைதல் கூர, |
||
பின் இருங் கூந்தலின் மறையினள், பெரிது அழிந்து, |
||
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் |
||
10 |
இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும் |
|
ஆம்பல்அம் குழலின் ஏங்கி, |
||
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே! | உரை | |
இடைச் சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது.-இளங்கீரனார்
|
115. முல்லை |
மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க |
||
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர், |
||
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள்; 'இன் நீர்த் |
||
தடங் கடல் வாயில் உண்டு, சில் நீர்' என, |
||
5 |
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி |
|
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ, |
||
கார் எதிர்ந்தன்றால், காலை; காதலர் |
||
தவச் சேய் நாட்டர்ஆயினும், மிகப் பேர் |
||
அன்பினர்-வாழி, தோழி!-நன் புகழ் |
||
10 |
உலப்பு இன்று பெறினும் தவிரலர்; |
|
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே? | உரை | |
பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது.
|
118. பாலை |
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத் |
||
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில், |
||
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில் |
||
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும், |
||
5 |
'அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர்' என, |
|
இணர் உறுபு, உடைவதன்தலையும் புணர்வினை |
||
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய |
||
துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி |
||
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி, |
||
10 |
புது மலர் தெருவுதொறு நுவலும் |
|
நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே! | உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
126. பாலை |
பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க் |
||
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி |
||
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் |
||
ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கி, |
||
5 |
துனைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம் |
|
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம், |
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின், |
|
இளமையின் சிறந்த வளமையும் இல்லை; |
||
இளமை கழிந்த பின்றை, வளமை |
||
10 |
காமம் தருதலும் இன்றே; அதனால், |
|
நில்லாப் பொருட் பிணிச் சேறி; |
||
வல்லே-நெஞ்சம்!-வாய்க்க நின் வினையே! | உரை | |
பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது.
|
137. பாலை |
தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல், |
||
தட மென் பணைத் தோள், மட நல்லோள்வயின் |
||
பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று |
||
எய்தினை, வாழிய-நெஞ்சே!-செவ் வரை |
||
5 |
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை, |
|
கயந் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர், |
||
பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை |
||
அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல்' ஆகும் |
||
குன்ற வைப்பின் கானம் |
||
10 |
சென்று, சேண் அகறல் வல்லிய நீயே! | உரை |
தலைவன் செலவு அழுங்கியது.-பெருங்கண்ணனார்
|
141. பாலை |
இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள், கய வாய், |
||
மாரி யானையின் மருங்குல் தீண்டி, |
||
பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை, |
||
நீடிய சடையோடு ஆடா மேனிக் |
||
5 |
குன்று உறை தவசியர் போல, பல உடன் |
|
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும் |
||
அருஞ் சுரம் எளியமன், நினக்கே; பருந்து பட, |
||
பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை |
||
ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி |
||
10 |
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த |
|
அரிசில் அம் தண் அறல் அன்ன, இவள் |
||
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே. | உரை | |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது.-சல்லியங்குமரனார்
|
143. பாலை |
ஐதே கம்ம யானே; ஒய்யென, |
||
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து, |
||
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும், |
||
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும், |
||
5 |
கிள்ளையும், 'கிளை' எனக் கூஉம்; இளையோள் |
|
வழு இலள் அம்ம, தானே; குழீஇ, |
||
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர் |
||
இன்னா இன் உரை கேட்ட சில் நாள் |
||
அறியேன் போல உயிரேன்; |
||
10 |
'நறிய நாறும் நின் கதுப்பு' என்றேனே. | உரை |
மனை மருட்சி.-கண்ணகாரன் கொற்றனார்
|
148. பாலை |
வண்ணம் நோக்கியும், மென் மொழி கூறியும், |
||
'நீ அவண் வருதல் ஆற்றாய்' எனத் தாம் |
||
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர், இன்றே, |
||
நெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை, |
||
5 |
செங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி, |
|
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது, |
||
கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின் |
||
இன் புனிற்று இடும்பை தீர, சினம் சிறந்து, |
||
செங் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை |
||
10 |
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் |
|
அருஞ் சுரம் இறப்ப என்ப; |
||
வருந்தேன்-தோழி!-வாய்க்க, அவர் செலவே! | உரை | |
பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது.-கள்ளம்பாளனார்
|
153. பாலை |
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி, |
||
மண் திணி ஞாலம் விளங்க, கம்மியர் |
||
செம்பு சொரி பானையின் மின்னி, எவ் வாயும் |
||
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி |
||
5 |
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு, |
|
நெஞ்சம் அவர்வயின் சென்றென, ஈண்டு ஒழிந்து, |
||
உண்டல் அளித்து என் உடம்பே-விறல் போர் |
||
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி, |
||
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் |
||
10 |
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே. | உரை |
பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது.-தனிமகனார்
|
157. பாலை |
இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப் |
||
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து, |
||
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப |
||
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில், |
||
5 |
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும், |
|
நம்வயின் நினையும் நெஞ்சமொடு, கைம்மிகக் |
||
கேட்டொறும் கலுழுமால் பெரிதே-காட்ட |
||
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை |
||
அம் பூந் தாது உக்கன்ன |
||
10 |
நுண் பல் தித்தி மாஅயோளே. | உரை |
பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது.-இள வேட்டனார்
|
162. பாலை |
'மனை உறை புறவின் செங் காற் பேடைக் |
||
காமர் துணையொடு சேவல் சேர, |
||
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத் |
||
தனியே இருத்தல் ஆற்றேன்' என்று, நின் |
||
5 |
பனி வார் உண்கண் பைதல கலுழ, |
|
'நும்மொடு வருவல்' என்றி; எம்மொடு- |
||
பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர் |
||
யாயொடு நனி மிக மடவை!-முனாஅது |
||
வேனில் இற்றித் தோயா நெடு வீழ், |
||
10 |
வழி நார் ஊசலின், கோடை தூக்குதொறும், |
|
துஞ்சு பிடி வருடும் அத்தம் |
||
வல்லை ஆகுதல் ஒல்லுமோ, நினக்கே? | உரை | |
'உடன் போதுவல்' என்ற தலைவிக்குத் தலைவன் சொற்றது.
|
164. பாலை |
'உறை துறந்திருந்த புறவில், தனாது |
||
செங் கதிர்ச் செல்வன் தெறுதலின், மண் பக, |
||
உலகு மிக வருந்தி உயாவுறுகாலைச் |
||
சென்றனர் ஆயினும், நன்று செய்தனர்' எனச் |
||
5 |
சொல்லின் தெளிப்பவும், தெளிதல் செல்லாய்- |
|
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர் |
||
வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென, |
||
வெங் கடற்று அடை முதல் படு முடை தழீஇ, |
||
உறு பசிக் குறு நரி குறுகல் செல்லாது |
||
10 |
மாறு புறக்கொடுக்கும் அத்தம், |
|
ஊறு இலராகுதல் உள்ளாமாறே. | உரை | |
பொருள் முடித்து வந்தான் என்பது, வாயில்கள்வாய்க் கேட்ட தோழி தலைவிக்குஉரைத்தது.
|
166. பாலை |
பொன்னும் மணியும் போலும், யாழ நின் |
||
நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்; |
||
போதும் பணையும் போலும், யாழ நின் |
||
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்: |
||
5 |
இவை காண்தோறும் அகம் மலிந்து, யானும் |
|
அறம் நிலைபெற்றோர் அனையேன்; அதன்தலை, |
||
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்; |
||
வினையும் வேறு புலத்து இலெனே; நினையின், |
||
யாதனின் பிரிகோ?-மடந்தை!- |
||
10 |
காதல் தானும் கடலினும் பெரிதே! | உரை |
செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.
|
171. பாலை |
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை |
||
வேனிற் குன்றத்து வெவ் வரைக் கவாஅன் |
||
நிலம் செல, செல்லாக் கயந் தலைக் குழவி |
||
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய |
||
5 |
ஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன் |
|
பன் மலை அருஞ் சுரம் இறப்பின், நம் விட்டு, |
||
யாங்கு வல்லுந மற்றே-ஞாங்க |
||
வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக் |
||
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள், |
||
10 |
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ, |
|
மார்பு உறப் படுத்தல் மரீஇய கண்ணே? | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்கு உரைத்தது.
|
174. பாலை |
'கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன |
||
ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக் |
||
கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின், |
||
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச் |
||
5 |
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி, |
|
பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து |
||
உயங்கினை, மடந்தை!' என்றி-தோழி!- |
||
அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே; |
||
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி |
||
10 |
மல்லல் மார்பு மடுத்தனன் |
|
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே? | உரை | |
வினை முற்றி வந்து எய்திய காலத்து, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது.
|
177. பாலை |
பரந்து படு கூர் எரி கானம் நைப்ப, |
||
மரம் தீயுற்ற மகிழ் தலைஅம் காட்டு |
||
ஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் மற்றவர்; |
||
குறிப்பின் கண்டிசின் யானே; நெறிப் பட, |
||
5 |
வேலும் இலங்கு இலை துடைப்ப; பலகையும் |
|
பீலி சூட்டி மணி அணிபவ்வே; |
||
பண்டினும் நனி பல அளிப்ப; இனியே |
||
வந்தன்று போலும்-தோழி!-நொந்து நொந்து, |
||
10 |
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே. | உரை |
செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.
|
179. பாலை |
இல் எழு வயலை ஈற்று ஆ தின்றென, |
||
பந்து நிலத்து எறிந்து, பாவை நீக்கி, |
||
அவ் வயிறு அலைத்த என் செய் வினைக் குறுமகள் |
||
மான் அமர்ப்பன்ன மையல் நோக்கமொடு, |
||
5 |
யானும் தாயும் மடுப்ப, தேனொடு |
|
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி, |
||
நெருநலும் அனையள்மன்னே; இன்றே, |
||
மை அணற் காளை பொய் புகலாக, |
||
அருஞ் சுரம் இறந்தனள் என்ப-தன் |
||
10 |
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே. | உரை |
மனை மருட்சி
|
184. பாலை |
ஒரு மகள் உடையேன் மன்னே; அவளும் |
||
செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு |
||
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்; |
||
'இனியே, தாங்கு நின் அவலம்' என்றிர்; அது மற்று |
||
5 |
யாங்ஙனம் ஒல்லுமோ? அறிவுடையீரே! |
|
உள்ளின் உள்ளம் வேமே-உண்கண் |
||
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என் |
||
அணி இயற் குறுமகள் ஆடிய |
||
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே. | உரை | |
மனை மருட்சி
|
186. பாலை |
கல் ஊற்று ஈண்டல கயன் அற, வாங்கி, |
||
இரும் பிணர்த் தடக் கை நீட்டி, நீர் நொண்டு, |
||
பெருங் கை யானை பிடி எதிர் ஓடும் |
||
கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை, |
||
5 |
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து, |
|
பாண் யாழ் கடைய, வாங்கி, பாங்கர் |
||
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில- |
||
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு |
||
காமர் பொருட் பிணி போகிய |
||
10 |
நாம் வெங் காதலர் சென்ற ஆறே. | உரை |
பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது.
|
189. பாலை |
தம் அலது இல்லா நம் நயந்து அருளி |
||
இன்னும் வாரார்; ஆயினும், சென்னியர், |
||
தெறல் அருங் கடவுள் முன்னர், சீறியாழ் |
||
நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின் |
||
5 |
கங்கை வங்கம் போகுவர்கொல்லோ- |
|
எவ் வினை செய்வர்கொல் தாமே?-வெவ் வினைக் |
||
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய |
||
கானப் புறவின் சேவல் வாய் நூல் |
||
சிலம்பி அம் சினை வெரூஉம், |
||
10 |
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே? | உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
|
193. பாலை |
அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத் |
||
துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ, |
||
நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ, ஆனாய், |
||
இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை! |
||
5 |
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே; |
|
பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் |
||
அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக, |
||
யாரும் இல் ஒரு சிறை இருந்து, |
||
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே! | உரை | |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் சொல்லியது.
|
197. பாலை |
'தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலே |
||
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே; |
||
கண்ணும் தண் பனி வைகின; அன்னோ! |
||
தெளிந்தனம் மன்ற; தேயர் என் உயிர்' என, |
||
5 |
ஆழல், வாழி-தோழி!-நீ; நின் |
|
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு, |
||
வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய, |
||
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல் |
||
பொலந் தொடி போல மின்னி, கணங் கொள் |
||
10 |
இன் இசை முரசின் இரங்கி, மன்னர் |
|
எயில் ஊர் பல் தோல் போலச் |
||
செல் மழை தவழும், அவர் நல் மலை நாட்டே. | உரை | |
வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.-நக்கீரர்
|
198. பாலை |
சேயின் வரூஉம் மதவலி! யா உயர்ந்து |
||
ஓமை நீடிய கான் இடை அத்தம், |
||
முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள் |
||
கண்பட, நீர் ஆழ்ந்தன்றே; தந்தை |
||
5 |
தன் ஊர் இடவயின் தொழுவேன்; நுண் பல் |
|
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை, |
||
வார்ந்து இலங்கு வால் எயிற்று, பொலிந்த தாஅர், |
||
சில் வளை, பல் கூந்தலளே, அவளே; |
||
மை அணல் எருத்தின் முன்பின் தடக் கை |
||
10 |
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த் |
|
தந்தைதன் ஊர் இதுவே; |
||
ஈன்றேன் யானே; பொலிக, நும் பெயரே! | உரை | |
பின் சென்ற செவிலி இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.-கயமனார்
|
202. பாலை |
புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு |
||
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து, |
||
வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடு |
||
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம், |
||
5 |
தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப் |
|
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும் |
||
மா மலை விடரகம் கவைஇ, காண்வர, |
||
கண்டிசின்-வாழியோ, குறுமகள்!-நுந்தை, |
||
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் |
||
10 |
செல் சுடர் நெடுங் கொடி போல, |
|
பல் பூங் கோங்கம் அணிந்த காடே. | உரை | |
உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது.-பாலை பாடிய பெருங் கடுங்கோ
|
205. பாலை |
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, |
||
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப் |
||
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி |
||
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும் |
||
5 |
துன் அருங் கானம் என்னாய், நீயே |
|
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய, |
||
ஆள்வினைக்கு அகறிஆயின், இன்றொடு |
||
போயின்றுகொல்லோ தானே-படப்பைக் |
||
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் |
||
10 |
நீர் மலி கதழ் பெயல் தலைஇய |
|
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே! | உரை | |
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது. தோழி செலவு அழுங்கச் சொல்லியதூஉம் ஆம்.-இளநாகனார்
|
208. பாலை |
விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி, |
||
அறல் போல் தெள் மணி இடை முலை நனைப்ப, |
||
விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து, |
||
எவன் இனைபு வாடுதி?-சுடர் நுதற் குறுமகள்!- |
||
5 |
செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும், |
|
நோன்மார் அல்லர், நோயே; மற்று அவர் |
||
கொன்னும் நம்புங் குரையர் தாமே; |
||
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்; |
||
பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள் |
||
10 |
முடியாதுஆயினும் வருவர்; அதன்தலை, |
|
இன் துணைப் பிரிந்தோர் நாடித் |
||
தருவது போலும், இப் பெரு மழைக் குரலே? | உரை | |
செலவுற்றாரது குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்ப,தோழி சொல்லியது.-நொச்சி நியமங் கிழார்
|
212. பாலை |
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ, |
||
நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தெள் விளி |
||
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும் |
||
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண் |
||
5 |
கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர் |
|
நெடும் பெருங் குன்றம் நீந்தி, நம் வயின் |
||
வந்தனர்; வாழி-தோழி!-கையதை |
||
செம் பொன் கழல்தொடி நோக்கி, மா மகன் |
||
கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும், |
||
10 |
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே. | உரை |
பொருள் முடித்துத் தலைமகனோடு வந்த வாயில்கள்வாய் வரவு கேட்ட தோழி தலை மகட்குச் சொல்லியது.-குடவாயிற் கீரத்தனார்
|
224. பாலை |
அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை, |
||
'பின்பனி அமையம் வரும்' என, முன்பனிக் |
||
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே; |
||
'புணர்ந்தீர் புணர்மினோ' என்ன, இணர்மிசைச் |
||
5 |
செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும் |
|
இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின் |
||
'பிரியலம்' என்று, தெளித்தோர் தேஎத்து, |
||
இனி எவன் மொழிகோ, யானே-கயன் அறக் |
||
கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி |
||
10 |
வில் மூசு கவலை விலங்கிய |
|
வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே? | உரை | |
தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் பெயர்த்தும் சொல் கடாவப்பட்டு,'அறிவிலாதேம் என்னை சொல்லியும், பிரியார் ஆகாரோ?' என்று சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
226. பாலை |
மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்; |
||
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப் |
||
பொன்னும் கொள்ளார், மன்னர்-நன்னுதல்!- |
||
5 |
தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து, |
|
என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய, |
||
சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும் |
||
இன்ன நிலைமைத்து என்ப; |
||
என்னோரும் அறிப, இவ் உலகத்தானே. | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.-கணி புன்குன்றனார்
|
229. பாலை |
'சேறும், சேறும்' என்றலின், பல புலந்து, |
||
'சென்மின்' என்றல் யான் அஞ்சுவலே; |
||
'செல்லாதீம்' எனச் செப்பின், பல்லோர் |
||
நிறத்து எறி புன் சொலின்திறத்து அஞ்சுவலே; |
||
5 |
அதனால், சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு, |
|
அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து, |
||
இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி, |
||
உழையீராகவும் பனிப்போள் தமியே |
||
குழைவான், கண்ணிடத்து ஈண்டித் தண்ணென, |
||
10 |
ஆடிய இள மழைப் பின்றை, |
|
வாடையும் கண்டிரோ, வந்து நின்றதுவே? | உரை | |
தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை ஆற்றுவித்துச் செல்ல உடன்பட்டது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்.
|
237. பாலை |
நனி மிகப் பசந்து, தோளும் சாஅய், |
||
பனி மலி கண்ணும் பண்டு போலா; |
||
இன் உயிர் அன்ன பிரிவு அருங் காதலர் |
||
நீத்து நீடினர் என்னும் புலவி |
||
5 |
உட்கொண்டு ஊடின்றும் இலையோ?-மடந்தை!- |
|
உவக்காண் தோன்றுவ, ஓங்கி-வியப்புடை |
||
இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன் |
||
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல, |
||
உலகம் உவப்ப, ஓது அரும் |
||
10 |
வேறு பல் உருவின், ஏர்தரும் மழையே! | உரை |
தோழி உரை மாறுபட்டது.-காரிக்கண்ணனார்
|
240. பாலை |
ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே- |
||
வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள் |
||
கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி, |
||
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம் |
||
5 |
துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும், |
|
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில், |
||
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி, |
||
ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல் |
||
யானை இன நிரை வௌவும் |
||
10 |
கானம் திண்ணிய மலை போன்றிசினே. | உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது; நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.-நப்பாலத்தனார்
|
241. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி!-கொடுஞ் சிறைப் |
||
புள் அடி பொறித்த வரியுடைத் தலைய |
||
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற, |
||
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின், |
||
5 |
வேழ வெண் பூ விரிவன பலவுடன், |
|
வேந்து வீசு கவரியின், பூம் புதல் அணிய, |
||
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு |
||
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய, |
||
எல்லை போகிய பொழுதின் எல் உற, |
||
10 |
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து, |
|
பல் இதழ் உண்கண் கலுழ, |
||
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே? | உரை | |
தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.-மதுரைப் பெருமருதனார்
|
243. பாலை |
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய |
||
துறுகல் அயல தூ மணல் அடைகரை, |
||
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப் |
||
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில், |
||
5 |
'கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு |
|
அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!' என, |
||
கையறத் துறப்போர்க் கழறுவ போல, |
||
மெய் உற இருந்து மேவர நுவல, |
||
இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற் |
||
10 |
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின், |
|
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே? | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.-காமக்கணிப் பசலையார்
|
246. பாலை |
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்; |
||
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்; |
||
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை, |
||
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்; |
||
5 |
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, |
|
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர், |
||
வருவர் வாழி-தோழி!-புறவின் |
||
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ, |
||
இன் இசை வானம் இரங்கும்; அவர், |
||
10 |
'வருதும்' என்ற பருவமோ இதுவே? | உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-காப்பியஞ் சேந்தனார்
|
252. பாலை |
'உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி, |
||
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம், |
||
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின அல்லது, |
||
அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்' என, |
||
5 |
வலியா நெஞ்சம் வலிப்ப, சூழ்ந்த |
|
வினை இடை விலங்கல போலும்-புனை சுவர்ப் |
||
பாவை அன்ன பழிதீர் காட்சி, |
||
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல், மை கூர்ந்து |
||
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், |
||
10 |
முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய் |
|
நல் நாப் புரையும் சீறடி, |
||
பொம்மல் ஓதி, புனைஇழை குணனே! | உரை | |
'பொருள்வயிற் பிரியும்' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.-அம்மெய்யன் நாகனார்
|
256. பாலை |
நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி, |
||
அல்கு பெரு நலத்து, அமர்த்த கண்ணை; |
||
காடே, நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த, |
||
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே; |
||
5 |
இந் நிலை தவிர்ந்தனம் செலவே: வைந் நுதிக் |
|
களவுடன் கமழ, பிடவுத் தளை அவிழ, |
||
கார் பெயல் செய்த காமர் காலை, |
||
மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை |
||
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த |
||
10 |
கண் கவர் வரி நிழல் வதியும் |
|
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே. | உரை | |
'பொருள்வயிற் பிரிந்தான்' என்று ஆற்றாளாகிய தலைமகளைத் தலைமகன் ஆற்றியது. -பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
262. பாலை |
தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர், |
||
ஆடு மயிற் பீலியின் வாடையொடு துயல்வர, |
||
உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து, |
||
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய், |
||
5 |
துனி கூர் மனத்தள், முனி படர் உழக்கும் |
|
பணைத் தோள், அரும்பிய சுணங்கின், கணைக் கால், |
||
குவளை நாறும் கூந்தல், தேமொழி |
||
இவளின் தீர்ந்தும், ஆள்வினை வலிப்ப, |
||
'பிரிவல்' நெஞ்சு, என்னும்ஆயின், |
||
10 |
அரிது மன்றம்ம, இன்மையது இளிவே. | உரை |
தலைமகள் ஆற்றாக் குறிப்பு அறிந்து, பிரிவிடை விலக்கியது.-பெருந்தலைச் சாத்தனார்
|
264. பாலை |
பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு, |
||
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை, |
||
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும் |
||
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின் |
||
5 |
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர |
|
ஏகுதி-மடந்தை!-எல்லின்று பொழுதே: |
||
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த |
||
ஆ பூண் தெண் மணி இயம்பும், |
||
ஈகாண் தோன்றும், எம் சிறு நல் ஊரே. | உரை | |
உடன் போகாநின்ற தலைமகன், தலைமகளை வற்புறீஇயது; உடன்போய் மறுத்தரா நின்றான் ஊர்காட்டி, வற்புறீஇயதும் ஆம்.-ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்
|
269. பாலை |
குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப் |
||
பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன், |
||
மாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய, |
||
அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச் |
||
5 |
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி |
|
திருமுகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும், |
||
பெரும! வள்ளியின் பிணிக்கும் என்னார், |
||
சிறு பல் குன்றம் இறப்போர்; |
||
அறிவார் யார், அவர் முன்னியவ்வே? | உரை | |
தோழி வாயில் மறுத்தது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்.- எயினந்தை மகன் இளங்கீரனார்.
|
271. பாலை |
இரும் புனிற்று எருமைப் பெருஞ் செவிக் குழவி |
||
பைந் தாது எருவின் வைகு துயில் மடியும் |
||
செழுந் தண் மனையோடு எம் இவண் ஒழிய, |
||
செல் பெருங் காளை பொய்ம் மருண்டு, சேய் நாட்டுச் |
||
5 |
சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர் |
|
வீழ் கடைத் திரள் காய் ஒருங்குடன் தின்று, |
||
வீ சுனைச் சிறு நீர் குடியினள், கழிந்த |
||
குவளை உண்கண் என் மகள் ஓரன்ன, |
||
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம், |
||
10 |
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு, |
|
மா இருந் தாழி கவிப்ப, |
||
தா இன்று கழிக, எற் கொள்ளாக் கூற்றே. | உரை | |
மனை மருண்டு சொல்லியது.
|
274. பாலை |
நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ, |
||
படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து, |
||
உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள் |
||
பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம் |
||
5 |
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம், |
|
'எம்மொடு வருதியோ, பொம்மல் ஓதி?' எனக் |
||
கூறின்றும் உடையரோ மற்றே-வேறுபட்டு |
||
இரும் புலி வழங்கும் சோலை, |
||
பெருங் கல் வைப்பின் சுரன் இறந்தோரே? | உரை | |
தோழி பருவம் மாறுபட்டது.-காவன் முல்லைப் பூதனார்
|
277. பாலை |
கொடியை; வாழி-தும்பி!- இந் நோய் |
||
படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென; |
||
மெய்யே கருமை அன்றியும், செவ்வன் |
||
அறிவும் கரிதோ-அறனிலோய்!-நினக்கே? |
||
5 |
மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை |
|
நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய |
||
தாறு படு பீரம் ஊதி, வேறுபட |
||
நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்: |
||
சிறு குறும் பறவைக்கு ஓடி, விரைவுடன் |
||
10 |
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பு இலர், |
|
வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு |
||
என் நிலை உரையாய், சென்று, அவண் வரவே. | உரை | |
பட்ட பின்றை வரையாது, கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய,ஆற்றளாகிய தலைமகள் தும்பிக்குச் சொல்லியது.-தும்பி சேர் கீரனார்
|
279. பாலை |
வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத் |
||
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ, |
||
வைகு பனி உழந்த வாவல், சினைதொறும், |
||
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப, |
||
5 |
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு |
|
பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப, |
||
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை |
||
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து, |
||
அதர் உழந்து அசையினகொல்லோ-ததர்வாய்ச் |
||
10 |
சிலம்பு கழீஇய செல்வம் |
|
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே? | உரை | |
மகட் போக்கிய தாய் சொல்லியது.-கயமனார்
|
281. பாலை |
மாசு இல் மரத்த பலி உண் காக்கை |
||
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி, |
||
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் |
||
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும் |
||
5 |
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் |
|
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப, |
||
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள், |
||
தாம் நம் உழையராகவும், நாம் நம் |
||
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி, |
||
10 |
துஞ்சாம் ஆகலும் அறிவோர் |
|
அன்பிலர்-தோழி!-நம் காதலோரே. | உரை | |
வன்பொறை எதிர் அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம்.- கழார்க் கீரன் எயிற்றியார்
|
284. பாலை |
'புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின் |
||
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண், |
||
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்', நெஞ்சம், |
||
'செல்லல் தீர்கம்; செல்வாம்' என்னும்: |
||
5 |
'செய்வினை முடியாது எவ்வம் செய்தல் |
|
எய்யாமையோடு இளிவு தலைத்தரும்' என, |
||
உறுதி தூக்காத் தூங்கி, அறிவே, |
||
'சிறிது நனி விரையல்' என்னும்: ஆயிடை, |
||
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய |
||
10 |
தேய்புரிப் பழங் கயிறு போல, |
|
வீவதுகொல் என் வருந்திய உடம்பே? | உரை | |
பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.- தேய்புரிப் பழங்கயிற்றினார்
|
286. பாலை |
'ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன, |
||
அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி |
||
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம் |
||
சென்றோர்மன்ற; செலீஇயர் என் உயிர்' என, |
||
5 |
புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்து |
|
இனைதல் ஆன்றிசின்-ஆயிழை!-நினையின் |
||
நட்டோர் ஆக்கம் வேண்டியும், ஒட்டிய |
||
நின் தோள் அணி பெற வரற்கும் |
||
அன்றோ-தோழி!-அவர் சென்ற திறமே? | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-துறைக்குறுமாவிற் பாலங் கொற்றனார்
|
293. பாலை |
மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி, |
||
பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன் |
||
இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து, |
||
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப் |
||
5 |
பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல், |
|
பெரு விதுப்புறுகமாதோ-எம் இற் |
||
பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ, |
||
கொண்டு உடன் போக வலித்த |
||
வன்கண் காளையை ஈன்ற தாயே. | உரை | |
தாய் மனை மருண்டு சொல்லியது; அவரிடத்தாரைக் கண்டு சொல்லியதூஉம் ஆம்.- கயமனார்
|
296. பாலை |
என் ஆவதுகொல்? தோழி!-மன்னர் |
||
வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த |
||
பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்ப, |
||
புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர் |
||
5 |
ஏ கல் மீமிசை மேதக மலரும், |
|
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும், |
||
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச் |
||
செல்ப என்ப, காதலர்: |
||
ஒழிதும் என்ப நாம், வருந்து படர் உழந்தே. | உரை | |
தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் சொல்லியது.- குதிரைத் தறியனார்
|
298. பாலை |
வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி, |
||
செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் |
||
மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட |
||
எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும் |
||
5 |
அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப் |
|
பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று-இவள் |
||
கரும்புடைப் பணைத் தோள் நோக்கியும், ஒரு திறம் |
||
பற்றாய்-வாழி, எம் நெஞ்சே!-நல் தார்ப் |
||
பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண், |
||
10 |
ஒருமை செப்பிய அருமை, வான் முகை |
|
இரும் போது கமழும் கூந்தல், |
||
பெரு மலை தழீஇயும், நோக்கு இயையுமோமற்றே? | உரை | |
தோழியால் பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி ஆற்றாதாய நெஞ்சினை நெருங் கிச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது.- விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
|
302. பாலை |
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த |
||
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக் |
||
காடு கவின் பூத்தஆயினும், நன்றும் |
||
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல் |
||
5 |
நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ |
|
தாஅம் தேரலர்கொல்லோ-சேய் நாட்டு, |
||
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு |
||
வெளிறு இல் காழ வேலம் நீடிய |
||
பழங்கண் முது நெறி மறைக்கும், |
||
10 |
வழங்கு அருங் கானம் இறந்திசினோரே? | உரை |
பருவம் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
|
305. பாலை |
வரி அணி பந்தும், வாடிய வயலையும், |
||
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், |
||
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற, |
||
தமியே கண்ட தண்டலையும் தெறுவர, |
||
5 |
நோய் ஆகின்றே-மகளை!-நின் தோழி, |
|
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை |
||
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி, |
||
உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி, |
||
இலங்கு இலை வெள் வேல் விடலையை |
||
10 |
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே. | உரை |
நற்றாய், தோழிக்குச் சொல்லியது; மனை மருட்சியும் ஆம்.-கயமனார்
|
308. பாலை |
செல விரைவுற்ற அரவம் போற்றி, |
||
மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை- |
||
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள், |
||
வேண்டாமையின் மென்மெல வந்து, |
||
5 |
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி, |
|
வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப் |
||
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து, |
||
ஆகம் அடைதந்தோளே: அது கண்டு, |
||
ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம் |
||
10 |
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம் |
|
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே. | உரை | |
நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி ஆற்றானாய், நெஞ்சினைச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எயினந்தை மகன் இளங்கீரனார்
|
312. பாலை |
நோகோ யானே, நோம் என் நெஞ்சே- |
||
'பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட, |
||
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு, |
||
பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள, |
||
5 |
மாரி நின்ற, மையல் அற்சிரம்- |
|
யாம் தன் உழையம் ஆகவும், தானே, |
||
எதிர்த்த தித்தி முற்றா முலையள், |
||
கோடைத் திங்களும் பனிப்போள்- |
||
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?' எனவே. | உரை | |
பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது.-கழார்க் கீரன் எயிற்றியார்
|
314. பாலை |
'முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்; |
||
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை; |
||
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி |
||
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில், |
||
5 |
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் |
|
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக் |
||
கழிவதாக, கங்குல்' என்று |
||
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய- |
||
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி |
||
10 |
அலங்கல்அம் பாவை ஏறி, புலம்பு கொள் |
|
புன் புறா வீழ் பெடைப் பயிரும் |
||
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே! | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.- முப்பேர் நாகனார்
|
316. முல்லை |
மடவது அம்ம, மணி நிற எழிலி- |
||
'மலரின் மௌவல் நலம் வரக் காட்டி, |
||
கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின் |
||
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்' என, |
||
5 |
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் |
|
நல் நுதல் நீவிச் சென்றோர், தம் நசை |
||
வாய்த்து வரல் வாரா அளவை, அத்தக் |
||
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து, |
||
தளி தரு தண் கார் தலைஇ, |
||
10 |
விளி இசைத்தன்றால், வியல் இடத்தானே. | உரை |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-இடைக்காடனார்
|
318. பாலை |
நினைத்தலும் நினைதிரோ-ஐய! அன்று நாம் |
||
பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த |
||
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக, |
||
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி, |
||
5 |
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை |
|
பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர் |
||
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து, |
||
என்றூழ் விடர் அகம் சிலம்ப, |
||
புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே? | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது.- பாலை பாடிய பெருங் கடுங்கோ
|
329. பாலை |
வரையா நயவினர் நிரையம் பேணார், |
||
கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன் |
||
இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது, |
||
புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறு |
||
5 |
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி |
|
செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர் |
||
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும், |
||
அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து |
||
அல்கலர் வாழி-தோழி!-உதுக் காண்: |
||
10 |
இரு விசும்பு அதிர மின்னி, |
|
கருவி மா மழை கடல் முகந்தனவே! | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தது.-மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
|
333. பாலை |
மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென, |
||
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப் |
||
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின், |
||
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் |
||
5 |
சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து, |
|
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி, |
||
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து, |
||
திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்; |
||
நீங்குகமாதோ நின் அவலம்-ஓங்குமிசை, |
||
10 |
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி |
|
நயவரு குரல பல்லி, |
||
நள்ளென் யாமத்து, உள்ளுதொறும் படுமே. | உரை | |
பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்
|
343. பாலை |
முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி |
||
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த் |
||
தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும் |
||
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து, |
||
5 |
உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை |
|
புன்கண் அந்திக் கிளைவயின் செறிய, |
||
படையொடு வந்த பையுள் மாலை |
||
இல்லைகொல் வாழி-தோழி!-நத்துறந்து |
||
அரும் பொருட் கூட்டம் வேண்டிப் |
||
10 |
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே? | உரை |
தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச் சொல்லியது.-கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
|
346. பாலை |
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி, |
||
தண் கார் தலைஇய நிலம் தணி காலை, |
||
அரசு பகை நுவலும் அரு முனை இயவின், |
||
அழிந்த வேலி அம் குடிச் சீறூர் |
||
5 |
ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட, |
|
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை, |
||
இன்று, நக்கனைமன் போலா-என்றும் |
||
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் |
||
பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக் |
||
10 |
கடி பதம் கமழும் கூந்தல் |
|
மட மா அரிவை தட மென் தோளே? | உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-எயினந்தை மகன் இளங்கீரனார்
|
352. பாலை |
இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய |
||
அன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன் |
||
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை, |
||
அழல் போல் செவிய சேவல் ஆட்டி, |
||
5 |
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி |
|
பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று, |
||
தேர் திகழ் வறும் புலம் துழைஇ, நீர் நயந்து, |
||
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ |
||
அருஞ் சுரக் கவலை வருதலின், வருந்திய |
||
10 |
நமக்கும் அரிய ஆயின: அமைத் தோள் |
|
மாண்புடைக் குறுமகள் நீங்கி, |
||
யாங்கு வந்தனள்கொல்? அளியள் தானே! | உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துக்கண் ஆற்றானாய்த் தன்னுள்ளே சொல்லியது.-மதுரைப் பள்ளிமருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
|
362. பாலை |
வினை அமை பாவையின் இயலி, நுந்தை |
||
மனை வரை இறந்து வந்தனை; ஆயின், |
||
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி |
||
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த |
||
5 |
கடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும், |
|
நீ விளையாடுக சிறிதே; யானே, |
||
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை |
||
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி, |
||
அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்; |
||
10 |
நுமர் வரின், மறைகுவென்-மாஅயோளே! | உரை |
உடன்போகாநின்ற தலைமகன், தலைமகட்குச் சொல்லியது.-மதுரை மருதன் இள நாகனார்
|
366. பாலை |
அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் |
||
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் |
||
திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள் |
||
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ, |
||
5 |
கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி |
|
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த |
||
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின் |
||
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி, |
||
முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை |
||
10 |
மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும் |
|
வட புல வாடைக்குப் பிரிவோர் |
||
மடவர் வாழி, இவ் உலகத்தானே! | உரை | |
உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.-மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
|
387. பாலை |
நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும், |
||
அம்ம! நாளும் தொல் நலம் சிதைய, |
||
ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக் |
||
கல்லா மழவர் வில்லிடை விலங்கிய |
||
5 |
துன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர் |
|
வருவர் வாழி-தோழி!-செரு இறந்து |
||
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த |
||
வேல் கெழு தானைச் செழியன் பாசறை |
||
உறை கழி வாளின் மின்னி, உதுக்காண், |
||
10 |
நெடும் பெருங் குன்றம் முற்றி, |
|
கடும் பெயல் பொழியும், கலி கெழு வானே. | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறீஇயது.- பொதும்பில் கிழார் மகனார்
|
391. பாலை |
ஆழல், மடந்தை! அழுங்குவர் செலவே- |
||
புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் |
||
பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின் |
||
மலர் தலைக் காரான் அகற்றிய தண் நடை |
||
5 |
ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும், |
|
பொன் படு, கொண்கான நன்னன் நல் நாட்டு |
||
ஏழிற்குன்றம் பெறினும், பொருள்வயின் |
||
யாரோ பிரிகிற்பவரே-குவளை |
||
நீர் வார் நிகர் மலர் அன்ன, நின் |
||
10 |
பேர் அமர் மழைக் கண் தெண் பனி கொளவே? | உரை |
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; வரைவு உணர்த்தியதூஉம் ஆம்.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
397. பாலை |
தோளும் அழியும், நாளும் சென்றென; |
||
நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக் |
||
அறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே; |
||
5 |
நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று; |
|
யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ |
||
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், 'சாவின் |
||
பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின், |
||
மறக்குவேன்கொல், என் காதலன்' எனவே. | உரை | |
பிரிவிடை ஆற்றாளாகி நின்ற தலைமகளை வற்புறாநின்ற தோழிக்கு 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது.-அம்மூவனார்
|