தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • ஆவூர்

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  ஆவூர் ஒரு வரலாற்றுச் சிறப்பு பெற்ற ஊராகும். இவ்வூரில் பல தொல்லியல் மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் காணப்படுகின்றன. இங்கு இரும்புக் காலத்திலிருந்து இன்று வரை மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்துள்ளனர்.

  அமைவிடம்

  இது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் வட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் உள்ளது.

  பெருங்கற்கால வாழ்விடம்

  இவ்வூரில் பெருங்கற்காலம்/ இரும்புக் காலத்தைச் சேர்ந்த வாழ்விடம் உள்ளது. மேலும் பெருங்கற்கால மக்களின் ஈமத்தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  கோவில்

  ஆவூரில் பசுபதீஸ்வரம் என்ற சிவன் கோவில் உள்ளது. இதில் பல சோழர் காலக் கல்வெட்டுக்களும், சிற்பங்களும் உள்ளன. இது ஒரு மாடக் கோவிலாகும். அதாவது தரைத்தளம் மண்ணால் நிரப்பப்பட்டு, கோவில் முதல் தளத்தில் உள்ளது. சங்கப் பாடல்களை எழுதிய ஆவூர் மூலங்கிழார், இவ்வூரைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:56:34(இந்திய நேரம்)