தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • அரசலாபுரம்

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    அமைவிடம் : விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம்.
    மொழி : தமிழ்
    எழுத்து : முந்தைய கால வட்டெழுத்து
    காலம் : பொ.ஆ. 5ஆம் நூற்றாண்டு

    முகையுருமேற்சே ரிகுயாடிக
    ருகியகோழி

    கல்வெட்டுப்பாடம்

    1. முகையுரு மேற்சேரி
    2. (கு) யாடிக் க
    3. ருகிய கோழி

    செய்தி:

    முகையுருவைச் சேர்ந்த மேற்சேரிக்காகச் சண்டையிட்டு வெற்றிப்பெற்ற பின் இக்கோழிக்கு உருவம் செதுக்கப்பெற்றுள்ளது (கருக்கிய - செதுக்கப்பட்ட).

    சிறப்பு:

    தொன்மைத் தமிழகத்தில் காளைச் சண்டையைப் போல் கோழிச் சண்டையும் நிகழ்ந்துள்ளதை விளக்கும் முதல் கல்வெட்டு.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:51:13(இந்திய நேரம்)