தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முந்தைய காலப் பாண்டியர் காசுகள்

  • முந்தைய காலப் பாண்டியர் காசுகள்

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    காலம்:பொ.ஆ. 6 – 9 ஆம் நூற்றாண்டு

    சங்க காலத்தின் சிறப்புடன் 300 ஆண்டுகள் ஆட்சி புரிந்த சங்ககாலப் பாண்டியர்களது ஆட்சி அவ்வம்சத்தின் கடைசி மன்னன் உக்கிர பெருவழுதியுடன் முடிவடைந்தது. இடையில் களப்பிரர் ஆட்சி நடந்து (சுமார் மூன்று நூற்றாண்டுகள்) மீண்டும் பாண்டியர்கள் ஆட்சி ஏற்றதை வேள்விக்குடிச் செப்பேடு அவனீபசேகரன் கோளக

    “களப்பிரர் எனும் கலியரசர் கைக்கொண்டதனை,
    அகலநீக்கி அகலிடத்தைப் படுகடல் முளைத்த பருதி போல
    பாண்டியாதி ராஜன் கடுங்கோன் வெளிப்பட்டான்”
     
    மீன்
     
    அவனீசேகரன் கோள்க

    என்று கூறுகிறது. இதனால் பொ.ஆ. 6 ஆம் நூற்றாண்டில் கடுங்கோன் வழி பாண்டியர்கள் ஆளத்தொடங்கியுள்ளனர். ஏறத்தாழ பத்திற்கும் மேற்பட்ட அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர் என்பது தெளிவு. அவர்களுள் இரு அரசர்களின் பெயரில் மட்டுமே நாணயங்கள் கிடைத்துள்ளன. அவை, அவனீப சேகரன் கோளக என்று தமிழில் எழுத்துப் பொறிக்கப்பட்ட செம்பு, நாணயமும், ஸ்ரீ வரகுண என்று தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட தங்க நாணயமும் ஆகும். அவற்றுள் ஸ்ரீ வரகுண என்ற காசு ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபனான இரண்டாம் வரகுணனைச் சேர்ந்தது (பொ.ஆ. 815-862). அவனீப சேகரன் கோளக என்ற காசில் “கோளக” என்பது “குளிகை” என்ற சொல்லுடன் தொடர்புபடுத்தப் பெறுகிறது. இச்சொல்லாட்சி கல்வெட்டுக்களிலும் இலக்கியங்களிலும் பிந்தைய காலக்கட்டத்தில் (பொ.ஆ. 12 -13 ஆம் நூற்றாண்டு) வருவதால் சர்ச்சைக்குரியதாக உள்ளது.


புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:41:27(இந்திய நேரம்)