தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • பெருங்களூர்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    பெருங்களூரில் தொல்பழங்காலத்திலிருந்து தொடர்ந்து மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் இருந்தன. மேலும் இங்கு ஒரு கோவில் உள்ளது.

    அமைவிடம்

    பெருங்களூர், தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் சுமார் 37 கி.மீ. தொலைவில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதி செம்மண் நிலப்பரப்பாகும். இவ்வூருக்குத் தெற்கே அக்னியாறு ஓடுகிறது.

    சிறப்பு

    இங்கு நுண்கற்கருவிகள் கிடைக்கின்றன. தொல் பழங்கால மக்கள் இங்கு வேட்டையாடி உணவு சேகரித்து வாழ்ந்து வந்துள்ளனர். இரும்புக்கால, பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் இவ்வூருக்கு அருகிலுள்ள வெள்ளைவிட்டான் விடுதி என்ற ஊரில் காணப்படுகின்றன. இங்கு ஈமத்தாழிகள் உள்ளன. இவை கற்பலகைகளால் மூடப்பட்டுள்ளன.

    வரலாற்றுக் காலத்திலும் இவ்வூர் சிறந்து விளங்கியுள்ளது. கல்வெட்டுகள் இந்த ஊரை “பெருங்கோழியூர்” என அழைக்கின்றன. இங்குள்ள கோவிலின் பெயர் விஜயாலச்சோழீச்சவரம் ஆகும். சோழர் காலக் கோவிலான இதில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள் உள்ளன. இப்பகுதியில் லேட்டரைப் பாறைகள் கிடைப்பதால் இரும்பு உருக்கும் தொழில் இங்கு சிறந்து விளங்கியுள்ளது. இதற்கான சான்றுகள் இப்பகுதியில் கிடைக்கின்றன.

    மேற்கோள் நூல்

    ஜெ.இராசா முகம்மது, 2004, புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, அரசு அருங்காட்சியகம், எழும்பூர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:12:32(இந்திய நேரம்)