தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • இந்தளூர் கோழிச் சண்டைக் கல்வெட்டு

   

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  அமைவிடம்:காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு வட்டம் கீழச்சேரி கிராமத்திலுள்ள பிள்ளையார்
  மொழி : தமிழ்
  எழுத்து : வட்டெழுத்து
  காலம் : பொ.ஆ. 6ஆம் நூ.


  கல்வெட்டுப் பாடம்:

  கீழச்சேரிக் கோழி (பொ)ற்கொற்றி

  செய்தி :

  கீழச்சேரி கோழியின் பெயர் பொற்கொற்றி என்பது. கோழிக்கும் பொற்கொற்றி எனப் பெயரிட்டிருப்பது ஒரு சுவையான செய்தியாகும். அதுமட்டுமின்றி இந்தக் கோழி தன்னுடைய ஊருக்காக இன்னொரு கோழியுடன் போரிட்டு இறந்திருக்கவேண்டும் என ஊகிக்கவேண்டியுள்ளது. அதன் பொருட்டு அதற்கு நினைவாக அதன் படம் கல்லில் வடிக்கப்பெற்றுள்ளது.

  சிறப்பு :

  தொன்மைத் தமிழகத்தில் காளைச் சண்டையைப் போல் சேவல் சண்டையும் நிகழ்ந்துள்ளதை விளக்கும் கல்வெட்டு. தமிழரின் நன்றியுணர்கவினையும் பறவைகள் இடத்தில் அவன் கொண்ட பாசத்தையும் வெளிப்படுத்தும் கல்வெட்டாகும். படத்தில் காட்டப்பட்டிருப்பது சேவலின் உருவம். சேவலையும் கோழி என்றே கூறியுள்ளனர்.

   

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:52:33(இந்திய நேரம்)