தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • கீழ்வாலை

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  கீழ்வாலை பெருங்கற்கால ஓவியங்களுள்ள ஒரு பழமையான ஊராகும்.

  அமைவிடம்

  கீழ்வாலை விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இது விழுப்புரத்திற்கு வடமேற்கே 38 கி.மீ தொலைவில் உள்ளது.

  சிறப்பு

  இங்கு ரத்தக்குடைக்கல் எனப்படும் பாறை மறைவிடத்தில் பழங்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. இங்கு மூன்று பாறைகளில் ஓவியங்கள் காணப்படுகின்றன. இங்கு பல வகையான உருவங்கள் வரையப்பட்டுள்ளன. மனிதர்கள் அருகருகே நிற்பது போலவும், குதிரை மீது ஒரு ஆண் அமர்ந்த நிலையிலும், சில உருவங்கள் கைகோர்த்த நிலையிலும் காணப்படுகின்றன.

  மேலும் இங்கு சில குறியீடுகள் காணப்படுகின்றன. ஒன்று வட்டமாகவும் குறுக்குக் கோடுகளுடனும், மற்றொன்று உடுக்கை போன்றும் அமைந்துள்ளது.

  இவை சிவப்பு நிறத்தில் மிக அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன. இவை இரும்புக்காலம் அல்லது பிந்தைய காலத்தைச் சேர்ந்திருக்கலாம்.

  மேற்கோள் நூல்

  இராசு.பவுன்துரை, 2001. தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:09:44(இந்திய நேரம்)