தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • வேலூர்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    வேலூர் ஒரு வரலாற்றுச் சிறப்பு பெற்ற ஊராகும். ஆழமான அகழியால் சூழப்பட்ட கோட்டையைத் தன்னகத்தே கொண்டதாக வேலூர் உள்ளது.

    அமைவிடம்

    இது சென்னைக்கு மேற்கே சுமார் 145 கி.மீ தொலைவில் பெங்களூர் சாலையில் அமைந்துள்ளது. வேலூர் பாலாற்றங்கரையில் உள்ளது. இது வேலூர் மாவட்டத்தின் தலைநகரமாகும்.

    சிறப்பு

    வேலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொல்பழங்கால, பெருங்கற்கால மற்றும் வரலாற்றுக்கால இடங்கள் உள்ளன. 16-ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட அகழியோடு கூடிய வேலூர் கோட்டை 1806-ஆம் ஆண்டு ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிரான புரட்சிக்கு ஒரு சிறப்பான மையமாகத் திகழ்ந்தது. இது வேலூர் புரட்சி எனப்படுகின்றது. இது 1857இல் இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்க் கலகத்திற்கு, 50 ஆண்டுகள் முன்பே நடைபெற்றது.

    கோட்டையின் உள்ளே, வடக்குப் பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயம் சுமார் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இது விஜயநகரக் கலைப் பாணியில் உள்ளது. இருபதாம் நூற்றாண்டில், இந்த ஆலயம் படைகளுக்கான முகாமாகச் செயல்பட்டு, வழிபாட்டில் இருந்த சிவலிங்கம் அகற்றப்பட்டது. பின்னர் 1981-ஆம் ஆண்டிலிருந்து வழிபாடு தொடங்கப்பட்டது. குதிரை வீரர்கள் மற்றும் யாளி வீரர்களின் சிற்பங்களை உள்ளடக்கிய கல்யாண மண்டபம் விஜயநகர நாயக்கர் காலக் கட்டட மற்றும் சிற்பக் கலைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    வேலூர் மத்திய சிறை 1830இல் தொடங்கப்பட்டது. வேலூரில் தமிழக அரசு அருங்காட்சியகம் உள்ளது. வேலூர் செயின் ஜான்ஸ் தேவாலயம் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. வேலூர் கோட்டையின் உள்ளே ஒரு பழைய மசூதி உள்ளது.

    வேலூர் பகுதியிலுள்ள மேல்பாடி சோமநாதர் கோவில், சோமேஸ்வரர் கோவில், வள்ளிமலை சமணச் சிற்பங்கள், ஆர்க்காடு மசூதி, ஆர்க்காட்டு டெல்லி நுழைவாயில் ஆகியவை சிறப்பு மிக்கச் சின்னங்களாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:08:06(இந்திய நேரம்)