தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஜம்பை கல்வெட்டு

  • ஜம்பை கல்வெட்டு்

    முனைவர் மா.பவானி
    உதவிப் பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை

    அமைவிடம் : விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் ஜம்பை உள்ளது. இக்கல்வெட்டு உள்ள இடத்திற்குத் தாசிமடம் என்று பெயர். இது 1981 ல் தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

    காலம்: பொ.ஆ.1 ஆம் நூற்றாண்டு ( தோராயமானது )

    மொழி: தமிழ்

    எழுத்து: தமிழி (சங்க காலத்தமிழ் எழுத்து)

    கல்வெட்டுப் பாடம்

    ஸதிய புதோ அதியன் நெடுமான் அஞ்சி ஈத்த பாளி

    செய்தி

    ஸத்திய புத்திரன் அதியன் நெடுமான் அஞ்சி என்பவர் தானமாகக் கொடுத்தே பாளி (சமணர் படுக்கை)

    சிறப்புகள்

    தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சங்க காலச் சிற்றரசர் அதியமானின் கல்வெட்டு.
    கடையெழு வள்ளல்களுள் ஒருவர்
    அவ்வரசனே பாளியைக் கொடுத்துள்ளான்
    இவர் மலையமான் திருமுடிக்காரியுடன் போரிட்டு வெற்றி பெற்றதாக இலக்கியம் கூறுகிறது.
    இலக்கியச் செய்தியை மெய்பிப்பது போன்று திருமுடிக்காரியின் தலைநகரான திருக்கோயிலூர் பகுதியில் உள்ள ஜம்பையில் கிடைத்துள்ளது.
    இக்கல்வெட்டு அவனது வெற்றியின் நினைவாகப் பொறிக்கப் பெற்றிருக்கலாம்.
    அசோகரது கல்வெட்டுக்களில் மூவேந்தருக்கு இணையான அண்டை அரசுகளுள் ஒருவராகக் குறிப்பிடப்பெற்றுள்ளார்.

    இக்கல்வெட்டு கண்டுபிடிக்கும் வரை இதிலுள்ள "ஸதிய புதோ " என்பதற்கு வாய் மொழி கோசர், சாதவாகனர் எனப் பல வம்சங்களை ஊகித்துள்ளனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:47:45(இந்திய நேரம்)