தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • சிதம்பரம்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    நடனத்தின் அரசனான “நடராஜன்” ஆனந்தத் தாண்டவம் ஆடும் இடம் தில்லைச் சிதம்பரமாகும். வரலாறு, சமய மற்றும் கல்வி மையமாகச் சிதம்பரம் திகழ்கிறது.

    அமைவிடம்

    இது பாண்டிச்சேரிக்கு 70 கி.மீ. தெற்கே அமைந்துள்ளது. காவிரிப்படுகையின் வட கிழக்கு மூலையில் அமைந்துள்ளது.

    சிறப்பு

    பாடல் பெற்ற தலமான சிதம்பரம் பல்லவர் காலத்திலிருந்து சிறப்புற்று விளங்கியது. சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில் காலத்தில் சோழர்களால் கட்டப்பட்ட நடராஜர் ஆலயம் (சிவன்கோவில்) குடில் வடிவத்தில் அமைந்துள்ளது. நான்கு பெரிய கோபுரங்களைக் கொண்ட இக்கோவிலின் கிழக்குக் கோபுரத்தில் 108 பரத நாட்டிய முத்திரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மூன்று திருச்சுற்று மாளிகைகளுக்கு இடையே, ராஜ சபை, தேவ சபை, நிருத்திய சபை, சித் சபை மற்றும் கனக சபை போன்ற ஐந்து சபைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிற்சபையில் சிதம்பர ரகசியம் என அழைக்கப்படும் பரவெளி உள்ளது. கனக சபை அல்லது பொற்சபையில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடும் சிற்பம் இடம்பெற்றுள்ளது.

    நடராஜர் கோவிலையடுத்து கோவிந்தராஜ சுவாமி கோயிலும், சிவகாம சுந்தரி ஆலயமும் அமைந்துள்ளன.

    தென்னிந்தியாவை ஆட்சி புரிந்த வம்சங்கள், சிதம்பரம் கோயிலைப் புனிதமான இடமாகக் கருதினர். எனவே அனைத்து அரச மரபினரும் இக்கோயிலுக்குத் திருப்பணிகளைச் செய்துள்ளனர். சோழ அரசர்கள் இக்கோயிலுக்குப் பொன்வேய்ந்த செய்தி கல்வெட்டுகளில் உள்ளன. முதலாம் இராசராசன், இக்கோவிலில் வழிபடுவது போன்ற ஓவியம் தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ளது. சிதம்பரத்திற்கு அருகே மாங்குரோப் எனப்படும் சதுப்பு நிலக்காடுகள் உள்ளன. இங்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:57:52(இந்திய நேரம்)