தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • தாராசுரம்

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  சோழர் காலக் கட்டடக்கலைக்குச் சிறப்பான சான்றாக விளங்கும் தாராசுரம், சிற்பங்களின் எழில்மிகு தோற்றங்களைப் பல வகைகளில் வெளிப்படுத்துகிறது.

  தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்

  இங்குள்ள கோயில் உலகப் புகழ்பெற்றதாகும். இது யுனோஸ்கோவால் ஐக்கிய நாட்டுகல்வி சமூகப் பண்பாட்டு நிறுவனத்தால் உலக மரபியல் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலின் விமானத்

  தோற்றம்

  அமைவிடம்

  தாராசுரம் கும்பகோணத்திற்கு மேற்கே தஞ்சாவூர் செல்லும் சாலையில் நான்கு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது அரசலாற்றின் தென் கரையில் உள்ளது.

  சிறப்பு

  திருச்சுற்றுமாளிகை அதிட்டானச் சிற்பங்கள்

  சோழ மன்னன் இரண்டாம் ராஜராஜனால் (1146-1173பொ.ஆ) கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயில். நான்கு தளங்களைக் கொண்ட இக்கோயில் மூன்று மண்டபங்களையும் ஒரு கருவறையையும் கொண்டுள்ளது. இதில், குதிரைகளால் இழுக்கப்படும் கல் தேராக, ராஜ கம்பீரன் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இது முன்மண்டபமாக, கோவிலின் தெற்குப் புறத்தில் அமைந்துள்ளது. இங்கு சோழர், பாண்டியர் கல்வெட்டுகள் உள்ளன.

  திருச்சுற்றுமாளிகை அதிட்டானச் சிற்பங்கள்

  சிற்பக் கலையின் மிக உன்னதமான படைப்புகள் கோவிலின் வெளிச்சுவர்களை அலங்கரிக்கின்றன. தமிழ் நூலான, 63 சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் பெரிய புராணத்தில் இடம் பெற்ற காட்சிகளும், நடனக்கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் கூட்டுச் சிற்பங்கள், கூத்தாடிகளின் வித்தைகள், காளை-யானை கூட்டுச் சிற்பம் ஆகியவை வெகு சிறப்பாக சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளன.

  திருச்சுற்றுமாளிகை அதிட்டானச் சிற்பங்கள்

  இக்கோயிலைத் தமிழகத்தின் சிற்பக்களஞ்சியம் எனலாம். மிகச் சிறிய அளவில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் பல, இங்குள்ள தூண்களில் உள்ளன. இங்கு அம்மன் கோவில் தனித் திருச்சுற்று மதிலுடன் கோயிலுக்கு வடக்கே உள்ளது. இக்கோயிலின் முன்பகுதியில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு செய்து பல கட்டடப் பகுதிகளை வெளிக்கொணர்ந்துள்ளது. இக்கோயிலில் பல வெண்கலப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு சிற்பக் காட்சியகம் உள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:05:26(இந்திய நேரம்)