தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அஸ்ட்ரலோபித்திகஸ்

 • அஸ்ட்ரலோபித்திகஸ்

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப் பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  அஸ்ட்ரலோபித்திகஸ் என்பது அழிந்த மனித மூதாதையர் இனத்துடன் ஒரு உயிரினப் பிரிவாகும். இந்த இனத்தின் புதைஉயிர்ப்படிவங்கள் ஆப்பிரிக்காவில் கிடைத்துள்ளன. மனிதப் பரிணாம வளச்சியில் இந்த இனம் மிகச் சிறப்பான பங்கு வகித்தது.

  லூசி என்ற அஸ்ட்ரலோபித்திக்கஸ்
  பெண்ணின் எலும்புகள்
  நன்றி: விக்கிபீடியா
  காமன்ஸ் 120

  அஸ்ட்ரலோபித்திகஸ் என்பதற்கு "தென் திசை மனிதக்குரங்கு" என்று பொருள். இது கிழக்கு ஆஃப்ரிக்காவில், சுமார் 40 லட்சம் வருடங்களுக்கு முன் தோன்றி 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்துவிட்டது என்று கருதப்படுகின்றது.

  அஸ்டரலோபித்திகஸ் ஆப்பிரிக்கானஸ், அஸ்ட்ரலோபித்திகஸ் அஃபாரென்ஸிஸ், அஸ்ட்ரலோபித்திகஸ் அனாமென்ஸிஸ் ஆகியவை குறிப்பிடத்தக்க அஸ்ட்ரலோபித்திகஸ் இனங்களாகும். அஸ்ட்ரலோபித்திகஸ் பேரினத்தில் ஒன்றுதான் மனிதப் பேரினமாக (Genus Homo) வளர்ச்சியடைந்துள்ளது என்று கருதப்படுகின்றது. இந்த மனிதப்பேபெரினத்தில் தோன்றியத்தான் நவீன மனித இனம்.

  அஸ்டரலோபித்திகஸ் இனம், மனிதர்கள் மற்றும் மனிதக் குரங்குகளின் நடத்தைக்கூறுகளைப் பெற்றுள்ளது. இவை மனிதர்களைப் போல் இரண்டு கால்களால் நடந்தன. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள லேட்டொலி என்ற இடத்தில் இந்த இனத்தின் கால் தடங்கள் எரிமலைப்படிவுகளில் காணப்படுகின்றன. இதன் மூளையின் அளவு மனிதர்களுடைய மூளையைவிடச் சிறியதாக இருந்தது.

  இந்த இனத்தின் சான்றுகள், தெற்கு ஆப்ரிக்காவில் டாங்க், தான்சானியாவில் ஒல்டுவாய் பள்ளத்தாக்கு என ஆப்பிரிக்காவில் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள்து.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:40:37(இந்திய நேரம்)