தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • ஆவுடையார் கோவில்

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  மாணிக்கவாசகரால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் ஆவுடையார் கோவில் கட்டடக் கலைக்கு ஒரு மிகச் சிறந்த சான்றாக உள்ளது.

  அமைவிடம்

  இது அறந்தாங்கிக்கு தெற்கே 13 கி.மீ தொலைவில் உள்ளது.

  சிறப்பு

  இந்தக் கோயில் தெற்குப் பார்த்து அமைந்துள்ளது. இங்குள்ள கருவறையில் லிங்க வழிபாடு இல்லை. அருவ வழிபாடு தான் உள்ளது. இதிலுள்ள மண்டபங்களின் தாழ்வாரங்களை (மரங்களுக்குப் பதிலாக) கல்லிலே செதுக்கியுள்ளனர். பல கற்களை இணைத்து அமைக்கப்பட்ட கொடுங்கைக் கூரை, சிற்பக் கலைக்கு மாபெரும் சிறப்பைச் சேர்த்துள்ளது.

  இக்கோவிலில் ஆனந்த சபை, தேவசபை, கனக சபை, சிற்சபை, நடன சபை, பஞ்சாட்ரம் என அழைக்கப்படும் மண்டபங்கள் உள்ளன. இங்குள்ள சிற்பங்கள் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. வீரபத்திரர், அகோர வீரபத்திரர், உக்கிர நரசிம்மர், பிட்சாடனர், மலைக் குறத்தி போன்ற சிற்பங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

  பொ.ஆ. 17–18 ஆம் நூற்றாண்டுகளில் மண்டபச் சுவர்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. மூலக்கோயில் மாணிக்கவாசகரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகின்றது. பிற்காலப் பாண்டியர்கள், நாயக்கர்கள், தொண்டைமான் மன்னர்கள் மற்றும் இராமநாதபுரம் சேதுபதிகள் காலத்தில் பல கட்டடக் கூறுகள் இணைக்கப்பட்டு தற்போது பெரிய கோவிலாக உள்ளது.

  மேற்கோள் நூல்

  ஜெ.இராஜாமுகமது, 2004. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு சென்னை, அரசு அருங்காட்சியகம்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:08:25(இந்திய நேரம்)