தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • திருநெல்வேலி

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருநெல்வேலி, தமிழ்நாட்டில் பாண்டியர் காலக் கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ள கோவிலைப் பெற்றுள்ளது. இங்கு பாண்டியர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

    அமைவிடம்

    இந்த ஊர் மதுரைக்குத் தென்மேற்கே 154கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

    சிறப்பு

    தாமிரசபை என்றழைக்கப்படும் சிவன் தாண்டவம் ஆடிய இடமாகும் என்பது நம்பிக்கை. நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மனுக்காக எழுப்பப்பட்ட ஆலயம் நெல்லையில் சிறப்பு மிக்க கோயிலாகும். சிவனின் ஆலயம் வடக்கேயும், அம்மனின் ஆலயம் தெற்கேயும் அமைந்துள்ளன. சோமவார மண்டபமும் ரிஷப மண்டபமும், அழகான சிற்பங்களோடு அமைந்துள்ளன. மன்மதன், ரதி சிற்பங்கள் எழில் பாங்கோடு வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலின் தேரோட்டம் சிறப்பு வாய்ந்ததாகும்.

    திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவிலில் அழகுறச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வரலாறு

    திருநெல்வேலிப் பகுதியிலுள்ள ஆதிச்சநல்லூர் புகழ்பெற்ற இரும்புக்கால ஊராகும். இது பாண்டியர், சோழர் ஆட்சிகளுக்கு உட்பட்டு இருந்தது. விஜயநகர நாயக்கர் ஆட்சியிலும் ஆற்காடு நவாப் ஆட்சியிலும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழும் இருந்தது. பாளையம் கோட்டை ஆங்கிலேய ஆட்சியில் சிறந்த கோட்டையாகச் செயல்பட்டது. இது ஒரு கிருத்துவ மையமாகவும் விளங்கியது. இராபர்ட் கால்டுவெல் திருநெல்வேலியின் வரலாற்றை ஆராய்ந்து நூலாக எழுதியுள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:06:06(இந்திய நேரம்)