தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • அமிர்தமங்கலம்

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை  அமிர்தமங்கலம் ஒரு பெருங்கால இடமாகும். இங்கு இறந்தவர்களுக்காகப் புதைக்கப்பட்ட தாழிகள் காணப்படுகின்றன. இந்த இடத்தின் பெரும்பகுதி தற்போது அழிந்துவிட்டது.

  அமைவிடம்

  இவ்வூர் கும்மிடிப்பூண்டி வட்டத்தில், திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ளது.

  அகழாய்வுகள்

  இந்திய அரசுத் தொல்லியல் துறையால் இந்த இடம் 1954-55ல் அகழாய்வு செய்யப்பட்டது. இங்கு சுமார் 250 தாழிகள் காணப்பட்டன. இவற்றில் சில அகழாய்வு செய்யப்பட்டன. இவை செம்புராங்கற் பாறையில் குழி தோண்டப்பட்டு புதைக்கப்பட்டிருந்தன. சில தாழிகளில் இறப்பிற்குப் பின் சேகரித்து வைக்கப்பட்ட மனிதர்களின் மண்டை ஓடுகள், பிற உடல் எலும்புகள், விலா எலும்புகள் மற்றும் பற்கள் காணப்பட்டன. தாழிகளில் கருப்பு-சிவப்புப் பானைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தத் தாழிகள் சுடுமண் மூடிகளால் மூடப்பட்டிருந்தன.

  மேற்கோள் நூல்

  Indian Archaeology - A Review, (1954-55) PP. 21-22.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:56:44(இந்திய நேரம்)