தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • தேரிருவேலி

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  தேரிருவேலி இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு வரலாற்றுக் கால ஊராகும். இந்த ஊர் ஏர்வாடியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது.

  தமிழக அரசுத் தொல்லியல் துறை இங்குள்ள காலனி திடலில் அகழாய்வு செய்துள்ளது. இங்கு பிராமி எழுத்துப் பொறிப்புள்ள பானை ஓடுகள், கருப்பு-சிவப்புப் பானை வகைகள், வட இந்திய மெருகேற்றப்பட்ட கருப்பு நிறப் பானை வகைகள், இரசட் கலவை பூசப்பெற்று ஓவியம் தீட்டப்பட்ட பானை ஓடுகள் ஆகியவை கிடைத்துள்ளன. இங்கு மீன் உருவம், கோட்டுவமாக ஒரு பானை மீது கீரப்பட்டு காணப்படுகின்றது. சுடுமண் விளக்கு, சங்கு வளையல் துண்டுகள், உயர்வகைச் செங்கல் மணிகள் (Carnelian) ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  இது ஒரு வரலாற்றுக்கால இடமாகும். இங்கு நுண்கற்காலக் கருவிகள் அடியிலுள்ள மண்ணடுக்கில் கிடைக்கின்றன. மேலும் “நெடுங்கி(ளி)” என்ற பிராமி எழுத்துப்பொறிப்புள்ள பானை ஓடு இங்கு கிடைத்த ஒரு சிறப்பான கண்டுபிடிப்பாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:13:32(இந்திய நேரம்)