தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • ஒடுகத்தூர்/மடையப்பட்டு

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  ஒடுகத்தூரை அடுத்த மடையப்பட்டு கல்வட்டங்களை உள்ளடக்கிய ஒரு பெருங்கற்கால ஊராகும்.

  அமைவிடம்

  மடையப்பட்டு என்னும் ஊர் ஒடுகத்தூருக்கு இரண்டு கி.மீ தெற்கே அமைந்துள்ளது. பழைய வட ஆற்காடு மாவட்டத்திலும், தற்போது வேலூர் மாவட்டத்திலும் உள்ளது.

  சிறப்பு

  1924-ஆம் ஆண்டில் ரிச்சர்ட்ஸ் என்ற தொல்பொருளியலரால் மடையப்பட்டில் உள்ள கல்வட்ட, ஈமச்சின்னங்கள் அகழாய்வு செய்யப்பட்டன. இங்கு நெடுங்கல் வகைச்சின்னம் உள்ளது.

  ஈமச்சின்னம்

  இரும்பு ஆயுதங்களான வாள்கள், குறுவாள், கோடாரி முனை, கத்தி, ஈட்டி முனைகள் போன்றவை அகழாய்வு மூலம் வெளிகொணரப்பட்டன. இரும்புத் தகடுகளோடு பொருத்தப்பட்ட வட்ட வடிவிலான செம்புத் தகடுகள் கிடைத்துள்ளன. பறவை வடிவிலான செம்பாலான பொருள் ஒன்றும் இங்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

  மேற்கோள் நூல்

  Leshni,L.S 1974, South Indian Megalithic Burials, The Pandukal Complex. Wesbaden.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:59:41(இந்திய நேரம்)