தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேர மன்னன் மாக்கோதைக் காசு

  • மதுரை வைகைக்கரைக் கல்வெட்டு்

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    அமைவிடம்:வைகைக் கரையில் கிடைத்த துண்டு கல்வெட்டு

    மொழி :தமிழ், சமஸ்கிருதம்
    எழுத்து : வட்டெழுத்து, கிரந்தம்
    காலம் : 7ஆம் நூற்றாண்டு
    மன்னன் :சேந்தன் - 50ஆவது ஆட்சியாண்டு

    கல்வெட்டுப் பாடம்:

    1. பாண்ட்ய குலமணி ப்ரதிபனாய் ப்ரதூர் பாவஞ்செ
    2. ய்து விக்ரமங்கலாலரைசடக்கி மறங்
    3. கெடுத்தறம் பெருக்கி அக்ரஹாரம் பல
    4. செய்த பரிமித மாகிய ஹிரண்ய கர்ப்ப கோ
    5. ஸஹஸ்ர துலாபாரத்து மஹா தாநங்களாற்
    6. கலி கடிந்து மங்கலபுரந் நகரமாக்கி வீ
    7. ற்றிருந்து செங்கோனடாவி நின்ற கோச்சே
    8. ந்தன் மற்றம்பதாவது ராஜ்ய ஸம்வத்ஸர
    9. ஞ் செல்லா நிற்க வைகை சோன் மதகு ம
    10. டுத் தரிகேசரியானெனப் பியரிட்டு காரோட
    11. வித்துக் காஞத்தை ஓடை அடைத்து. . . . . .

    கல்வெட்டுச் செய்தி:

    கோச்சேந்தன் என்ற பாண்டிய மன்னன் தனது 50ஆவது ஆட்சியாண்டில் மங்கல புரம் என்ற நகரை உருவாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி அரிகேசரி என்ற தனது விருதைப் பெயரில் வைகைக் கரையில் மதகு ஒன்றை அமைத்துள்ளார். இச்செய்தியை கல்வெட்டுக் கூறுகிறது. மேலும், இம்மன்ன்ன் ஹிரண்ய கர்ப்பம், கோ ஸகஸ்ரம், துலாபாரம் போன்ற மஹாதானங்களை செய்துள்ளார். அக்ராஹாரம் பலவற்றை ஏற்படுத்தியுள்ளார். பாண்டிய குலத்திற்கு மணி போன்றவர். பல அறச்செயல்களைச் செய்துள்ளார் என மன்னனைப் புகழ்ந்துரைத்துள்ளனர்.

    சிறப்பு:

    இக்கல்வெட்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். கோயில்களில் உள்ள கல்வெட்டுக்கள் பெரும்பாலும் கோயிலுகுச் செய்த அறக்கொடைகளைப் பற்றியே பேசும். இக்கல்வெட்டின் மூலம் பாண்டிய மன்னர்கள் வைகைக் கரையில் மதகு அமைத்து நீர்ப்பாசனத்திற்கு உதவியுள்ளதை அறிய முடிகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:55:43(இந்திய நேரம்)