தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • பாண்டிச்சேரி்

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  1674-ல் பிரான்ஷ்வா மார்ட்டின் என்ற பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநரால் பாண்டிச்சேரி நகரம் நிறுவப்பட்டது. இது புதுச்சேரி என்றும் அழைக்கப்படுகின்றது.

  அமைவிடம்

  பாண்டிச்சேரி இது 145 கி.மீ சென்னைக்குத் தெற்கே, கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது.

  சிறப்பு

  பாண்டிச்சேரிக்கு அருகில் தொல்பழங்கால, பெருங்கற்கால ஊர்கள் உள்ளன. நன்றாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட நகரமான பாண்டிச்சேரி, பிரெஞ்சு ஆட்சியில் தலைநகரமாகத் திகழ்ந்தது. கடற்கரைச் சாலையை ஒட்டி, பிரெஞ்சு மக்கள் வாழ்ந்த பெரிய வீடுகள், மாளிகைகள் இன்றும் கடந்த கால வரலாற்றுக்குச் சான்றாக உள்ளன. பிரெஞ்சு கவர்னர் ஜோசப் ப்ரான்ஷ்வா தூப்ளேயின், துபாஷியாகப் (இரு மொழி வல்லுநர்) பணியாற்றிய அனந்தரங்கம் பிள்ளையின் இல்லம், அரவிந்தரின் ஆசிரமம், அன்னையால் ஆரம்பிக்கப்பட்ட ஆரோவில் (பிரெஞ்சு மொழியில் இது புலரியின் நகரம் எனப்படும்) போன்று வரலாறும் ஆன்மீகமும் இணைந்த இடங்கள் பாண்டிச்சேரியில் உள்ளன.

  வரலாறு

  இங்கு பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி 1674இல் துவங்கப்பட்டது. பின்னர், 1693 டச்சுக்காரர்களும், 1793இல் இங்கிலீஷ்காரர்களும் இதைக் கைப்பற்றினர். பின்னர் இப்பகுதி பிரெஞ்சு ஆட்சியில் இருந்தது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிரானவர்கள், இங்கு தஞ்சம் புகுந்தனர். 1963இல் இப்பகுதி இந்தியாவுடன் இணைந்தது.

  பாண்டிச்சேரியில் ஓர் அருங்காட்சியகம் உள்ளது. அரிக்கமேடு இங்குள்ள புகழ்பெற்ற ரோமானிய தொடர்புள்ள சங்ககாலத் துறைமுகமாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:03:37(இந்திய நேரம்)