தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

 • முத்திரைப்பாளையம்

  முனைவர் வீ.செல்வகுமார்
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

  முத்திரைப்பாளையம் ஒரு பெருங்கற்கால இடமாகும். இங்கு பல ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன.

  அமைவிடம்

  இவ்வூர் பாண்டிச்சேரி அருகில் உள்ளது. இது முத்திராபாளையம் என்றும் அழைக்கப்படுகின்றது. இது செஞ்சி ஆற்றுக்கு வடக்கேயும், பாண்டிச்சேரிக்கு மேற்கேயும் அமைந்துள்ளது.

  சிறப்பு

  முத்திரைப்பாளையத்தில் ஜே.எம்.கசால் என்ற பிரான்சு நாட்டு அறிஞர் அகழாய்வு செய்துள்ளார். இங்கு ஈமத்தாழிகள் காணப்படுகின்றன. கருப்பு-சிவப்புப் பானைகள், சிவப்பு நிற மற்றும் கருப்பு நிற மட்கலன்கள் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு, கிண்ணங்கள், பானைகள், குடுவைகள், தாங்கிகள் போன்ற மட்கல வகைகள் கிடைக்கின்றன. பெருங்கற்காலப் பானைகளில் காணப்படும் கீரல் குறியீடுகள் இங்கு கிடைக்கின்றன. இங்கு மூன்று வகையான தாழிகள் காணப்பட்டன. தாழிகளின் கழுத்தின் மேற்புறம் சங்கிலி போன்ற வேலைப்பாடு, ஒட்டுக் களிமண்ணால் பானைகளைச் சுடுவதற்கு முன் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சில எலும்புகள் மட்டுமே கிடைத்துள்ளன. எனவே இவை இரண்டாம் நிலை (secondary bonial) ஈமச்சின்னங்களாகும். ஈமத்தாழிகளில் 2 முதல் 40 வரையான பானைகள், இரும்பு வாள் மற்றும் ஈட்டியும் வைக்கப்பட்டிருந்தன.

  மேற்கோள் நூல்

  Leshnik.L.S, 1974. South Indian ‘megalithic’ Burials – The Pandukal Complex. Wiesbaden.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:11:13(இந்திய நேரம்)