தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேர மன்னன் மாக்கோதைக் காசு

  • அசோகர் கல்வெட்டுக்கள்

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    காலம்: கி.மு. 272-232

    குறிப்பு:

    மௌரிய மன்னர் அசோகர் கல்வெட்டுக்கள், அவரது 8ஆம் ஆட்சியாண்டு முதற்கொண்டு 87ஆம் ஆண்டு வரை பொறிக்கப்பெற்றவையாகும். இவரது கல்வெட்டுக்கள் இந்தியா முழுவதும் ( தமிழ்நாடு நீங்கலாக) கிடைக்கின்றன. இவை அசோகரது நேரடி ஆணகைள் ஆகும். ஒரே மாதிரியான செய்திகள் கொண்டவை.

    அசோகரது கல்வெட்டுகள்

    அசோகரது கல்வெட்டுக்கள் பெரும்பாலும் அவரது ஆணையினைத் தாங்கி நிற்பதால் இக்கல்வெட்டுக்கள் அசோகரது ஆணைகள் (Asokan Edicts) என்றே அழைக்கப்பெறுகின்றன. இவற்றைப் பாறைக் கல்வெட்டுக்கள், தூண் கல்வெட்டுக்கள், குகைக் கல்வெட்டு என்று அவை வெட்டப்பெற்றிருக்கும் இடத்தைக் கொண்டு மூன்றாகப் பிரிக்கலாம். பாறைக் கல்வெட்டுக்களிலும், பெரும்பாறைக் கல்வெட்டு, சிறுபாறைக் கல்வெட்டு என்று அதன் அளவைப் பொறுத்து மேலும் பிரிக்கப்பெறுகின்றன. பராபர் மட்டுமே குகைக் கல்வெட்டாகும்.

    அசோகர் என்ற பெயர்

    அசோகரது கல்வெட்டுக்கள் அனைத்திலும் இவரது பெயர் “தேவநாம்பியஸ பியதசி” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் மஸ்கி சிறுபாறைக் கல்வெட்டில் “தேவாநாம் பிய பியதசி அசோக” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது உடேகொளத்திலும் கல்வெட்டின் துவக்கத்தில “தேவாநம்பியஸ” என்றும், இறுதியில் அசோக என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (CII: I 174-175) குமாரதேவியின் சாரநாத் கல்வெட்டில் “தர்ம அசோக்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அசோகர் உருவம் பொறித்த சிற்பம்

    கர்நாடக மாநிலத்தில் குல்பர்கா மாவட்டம் - சன்னதி என்ற தொல்லியல் இடத்தில் கிடைத்த அசோகரது பெயர் பொறித்த புடைப்புச் சிற்பம்.

    “ராயோ அசோகோ அசோக்” என்ற எழுத்துப் பொறிப்பு.

    வரிவடிவம்

    அராமிக் - தசசீலம்

    கிரேக்கம் - சகர் - இ-குண

    கரோஷ்டி - சபாஷ்கார்கி

    பிராமி

    போன்ற வரிவடிவங்கள் பயன்படுத்தப்பெற்றுள்ளன.

    பெரும்பாறைக் கல்வெட்டுக்கள் உள்ள இடங்கள்

    1.ஷாபாஜ்கார்கி (பெஷாவர் மாவட்டம், பாகிஸ்தான்)

    2. மான்சேர (ஹசாரா மாவட்டம், பாகிஸ்தான்)

    3. கால்சி (டேராடூன், உத்திரபிரதேசம்)

    4. கிர்னார் (ஜீனாகாத், குஜராத்)

    5. பாம்பே - சோபரா (தானா , மஹாராஸ்டிரம்)

    6. எர்ரகுடி (கர்நூல் - அந்திரா)

    அசோகரது 14 ஆணைகள் (பெரும்பாறைக் கல்வெட்டுக்கள்) குறித்தக் கல்வெட்டுக்களின் செய்திகள்

    1. அரண்மனைகளில் வெட்டப்படும் விலங்கினங்களைக் குறைத்து அதன் மூலம் விலங்கினங்களைக் காப்பாற்றுதல்.

    2. மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு மருத்துவச் சிகிச்சை செய்ய வேண்டும் என்பதையும், எங்கெல்லாம் நலந்தரும் மூலிகைகளும், பழங்களும் இல்லையோ அவை இருக்கும் இடங்களிலிருந்து கொண்டுவரப்பெற்று நடப்பெற வேண்டும் என்றும் கூறுகின்றார். பசுக்களும் மனிதர்களும் நீர் அருந்த நீர் நிலைகளையும் நிழல் தரும் மரங்களையும் நடுமாறு கூறுகின்றார். (அண்டை நாட்டு அரசர்களின் பெயர்களும் குலங்களும் இடம் பெற்றுள்ள கல்வெட்டு).

    3. அரசு அதிகாரிகள் 5 ஆண்டுக்கு ஒரு முறை பயணம் மேற்கொண்டு தர்மத்தை போதித்தல்.

    4. பொதுமக்களிடையே நன்னெறிகளைப் போற்றிப் பாதுகாத்தல்.

    5. தர்ம மஹா மாத்திரர்களை நியமித்தல்.

    6. சுயகட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தல்.

    7. அசோகரின் பயணம் குறித்த செய்திகள்.

    8. அசோகரின் பயணம் குறித்த செய்திகள்.

    9. உண்மையான பரிசு அல்லது உண்மையான சடங்கு பற்றிய செய்தி.

    10. அரசர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அனைவருக்கும் மக்களின் நன்மைக்காகப் பாடுபடுதல்.

    11. உயர் நன்னெறி என்பது தர்மம் என்றும் அறநெறி என்றும் போதித்தல்.

    12. சமயப்பொறை.

    13. கலிங்கப் போர் மற்றும் அசோகர் தர்ம நெறிக்கு மாறுதல் (அண்டை நாட்டு அரசர்களின் பெயர்களும் குலங்களும் இடம் பெற்றுள்ள கல்வெட்டு).

    14. மக்களை நன்னெறிக்குக் கொண்டுச் செல்லல்.

    சிறுபாறைக் கல்வெட்டுக்கள் உள்ள இடங்கள்:

    1. புது டெல்லி

    2. பைராட் (Jaipur, Rajasthan)

    3. ஆரௌரா (UP)

    4. சகஸ்ராம் (Bihar)

    5. குஜ்ஜரா (MP)

    6. ரூப்நாத் (MP)

    7. பாங்குராரியா (MP)

    8. ராஜீல மண்டகிரி (AP)

    9. மாஸ்கி (Karnataka)

    10. கவிமத் (Karnataka)

    11. பால்கி குண்டு (Karnataka)

    12. நிட்டூர் (Karnataka)

    13. உடேகொளம் (Karnataka)

    14. எர்ரகுடி (Karnataka)

    15. பிரம்மகிரி (Karnataka)

    16. சித்தபுரம் (Karnataka)

    17. ஜடிங்க - ராமேஸ்வரம் (Karnataka)

    மேற்குறிப்பிட்ட 17 கல்வெடுக்களில் முதல் 10 கல்வெட்டுக்கள் மக்கள் புத்த சமயத்தைப் பின்பற்றி நன்மை அடைய வேண்டியதையும், பிற 7 கல்வெட்டுக்களும் பெற்றோர் , பெரியோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மதிப்பு அளித்து மரியாதை செய்யவேண்டும் என்பதையும் கூறுகின்றன.

    பெரிய தூண் கல்வெட்டுக்கள் உள்ள இடங்கள்

    1. தில்லி - தோப்ரா

    2. தில்லி - மீரட்

    3. லௌரியா - ஆரராஜ்

    4. லௌரியா - நந்தன்கர்

    5. ராம்பூர்வா

    6. அலகாபாத் - கோசம்

    சிறிய தூண் கல்வெட்டுக்கள் உள்ள இடங்கள்

    1. சாஞ்சி (MP)

    2. சாரநாத் (UP)

    3. நிகாலி சாகர் (Nepal)

    4. ரும்மின்தேய் (Nepal)

    5. அமராவதி (AP)

    பராபர் குகைக்கல்வெட்டு

    பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தில் அமைந்துள்ள பராபர் குன்றுகளில் காணப்படுகின்ற மூன்று குகைகளில் பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டுக்களே அசோகரது குகைக் கல்வெட்டுக்களாகும். இக்கல்வெட்டுக்கள். மன்னன் பிரயதசி ஆசீவர்களுக்கு அளித்த கொடையைப் பற்றிப் பேசுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:56:54(இந்திய நேரம்)