தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • நன்னிலம்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    நன்னிலம் ஓர் இரும்புக்கால, வரலாற்றுக்கால ஊராகும்.

    அமைவிடம்

    நன்னிலம், திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூருக்கு வடக்கே 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது முடிகொண்டான் ஆற்றின் வட கரையில் உள்ளது.

    தொல்லியல் சான்றுகள்

    இவ்வூரில் இரும்புக்கால-வரலாற்றுத் துவக்ககால வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு கருப்பு-சிவப்பு, மற்றும் சிவப்பு வகைப் பானை ஓடுகள் காணப்படுகின்றன. இடைக்கால வாழ்விடச் சான்றுகளும் இங்கு கிடைத்துள்ளன.

    கோவில்

    இங்கு சைவ சமய நாயன்மார்களால் பாடல் பெற்ற கோவில் உள்ளது. இச்சிவன் கோவில், மாடக் கோவிலாகும். இது மதுவனேஸ்வரர் கோவில் எனப்படுகின்றது. இது நன்னிலத்துப் பெருங்கோவில் எனப் பாடப்பெற்றுள்ளது.

    இவ்வூருக்கு அருகில் திருவாஞ்சியம், திருக்கண்டீச்சுரம் ஆகிய சிறப்பு பெற்ற கோவில்கள் உள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:02:18(இந்திய நேரம்)