தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • கண்ணனூர்

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    எழில்மிகு பாலசுப்ரமணியர் கோவிலால் பெருமை பெற்றது கண்ணனூர் ஆகும்.

    அமைவிடம்

    இது புதுக்கோட்டையிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

    சிறப்பு

    இங்குள்ள பாலசுப்ரமணியர் ஆலயம் பொ.ஆ 9 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாகும். இங்குள்ள கோவிலின் ஒருதள விமானத்தின் நான்கு பக்கங்களிலும் முருகனின் வாகனமான யானைகள் காணப்படுகின்றன. மயிலுக்குப் பதிலாக யானை காணப்படுவது அரிதானதாகும்.

    இக்கோவிலுக்குப் பக்கத்தில் கரியமாணிக்கப் பெருமாள் என்றழைக்கப்படும் விஷ்ணு கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோவில் விருத பயங்கர விண்ணகரம் என்று கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றது.

    மேற்கோள் நூல்

    ஜெ.இராஜாமுகமது, 2004. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, சென்னை, அரசு அருங்காட்சியகம்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:09:34(இந்திய நேரம்)