தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மதுரை நாயக்கர் காசுகள்

 • மதுரை நாயக்கர் காசுகள்

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  மதுரை நாயக்கர் (பொ.ஆ. 1600 – பொ.ஆ. 1700):

  மதுரைப் பகுதியை ஆட்சி புரிந்த நாயக்கர்கள் மதுரை நாயக்கர்கள் எனப்பட்டனர். 1529இல் விசுவநாத நாயக்கர் மதுரை நாயக்கராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர், திருமலை நாயக்கர், இராணிமங்கம்மாள், இராணி மீனாட்சி போன்ற பல திறமையான அரசர்கள் மதுரையில் அரசாண்டு நாணயங்களையும் வெளியிட்டுள்ளனர்.

  சின்னங்கள்:

  மதுரை நாயக்கர்கள் எண்ணற்ற உருவங்களைச் காசுகளில் பொறித்துள்ளனர். இவர்களுக்கென்று தனி குலச்சின்னம் இல்லை. பெரும்பாலும் பாண்டியர்கள் பயன்படுத்திய இரு கயல்கள், செங்கோல் சின்னங்களையும் விஜயநகர அரசுகளைப் பின்பற்றி கடவுளர் மற்றும் விலங்குகளின் உருவங்களையும் காசின் ஒருபக்கம் பொறித்துள்ளனர். மறுபக்கம் வெளியிட்ட அரசர்களின் பெயர்களைப் பொறித்துள்ளனர்.

  மயில் மீது முருகன்
  விசயரகுநாதன்

  மீன் நிற்கும் உருவம், வலது பக்கம் நோக்கி நிற்கும் காளை, சூரிய சந்திரன், இரு மீன்களின் நடுவே செங்கோல், செங்குத்தான இரு மீன்கள் இவற்றின் நடுவில் செண்டு, அமர்ந்த நிலையில் பாலகிருஷ்ணன், அமர்ந்த நிலை உருவத்தின் இடப்பக்கம் மீன், பிறையின் கீழ் இரு மீன்கள், இடது பக்கம் நோக்கி நிற்கும் யானை, விஷ்ணு நின்ற நிலையில் சந்திரன், சூரியன், சங்கு நிற்கும் உருவம், மீன், செங்கோல், புள்ளியிட்ட வட்டத்திற்குள் பாய்மரக்கப்பல், மரத்தேர், அமர்ந்த நிலையில் மூன்று தலையுடன் பிரமன், பிரபையின் கீழ் மேடையின் கீழ் நான்கு கைகளுடன் நிற்கும் விஷ்ணு, புள்ளியிட்ட வட்டத்திற்குள் ஆமை, வராகமூர்த்தி, கையில் சங்கு சக்கரத்துடன் நரசிம்மர், கோடாலான வட்டத்திற்குள் வாமனன், வலதுகையில் குடை, இடது கையில் தண்ணீர் கமண்டலம், புள்ளியிட்ட வட்டத்திற்குள் வில் அம்புடன் ராமர், பிரபையின் கீழ் குதிரை முகத்துடன் கைகளில் சங்கு சக்கரத்துடன் கல்கியும் அவரது மனைவியும், அமர்ந்திருக்கும் புத்தர், புள்ளியிட்ட வட்டத்திற்குள் இடப்பக்கம் நோக்கி ஓடும் அனுமார் அஞ்சலி நிலையில் நிற்கும் மனித உருவ கருடன், புள்ளிட்ட வட்டத்திற்குள் அன்னம், இரு இறக்கைகளை விரித்த நிலையில் காமதேனு, பாம்மை காலால் பிடித்திருக்கும் மயில், புள்ளியிட்ட வட்டத்திற்குள் படுத்த நிலையில் நந்தி, மீன், தோரண வாயிலின் கீழ் கருடன், நின்ற நிலையில் வில் அம்புடன் ராமர், வலது நோக்கி நிற்கும் மயில், மயிலின் மேல் புறம் வேல், வாயில் பாம்புடன் மயில், இடது பக்கம் நோக்கி நின்ற நிலையில் ஒட்டகம், வட்டத்திற்குள் கணபதி, மயில் மேல் முருகன், கையில் வேலுடன் மயில் மேல் முருகன், வட்டத்திற்குள் நின்ற நிலையில் நரசிம்மர், அமர்ந்த நிலை நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், சிங்க உடலில் நரசிம்மர் தலை தனது இரணியனை மடியில் கிடத்தி அவனது வயிற்றைக் கிழிப்பது போன்று நின்ற நிலையில் இரண்டு கைகளிலும் சங்கு சக்கரத்துடன் நரசிம்மர், புள்ளியிட்ட வட்டத்திற்குள் வியாகபாதர், வட்டத்திற்குள் சங்கு சக்கரத்துடன் நிற்கும் விஷ்ணு, மச்ச அவதாரத்துடன் விஷ்ணு, கையில் பாம்புடன் கிருஷ்ணர், நர்த்தன கிருஷ்ணன், காலிங்க நர்த்தன கிருஷ்ண, புள்ளியிட்ட வட்டத்திற்குள் கால் மேல் காலிட்ட மனித உருவம், கருடன், அனுமார், நின்ற நிலை சரஸ்வதி, அமர்ந்த நிலை அன்னபூரணி, அலங்கரிக்கப் பெற்ற வட்டத்திற்குள் அமர்ந்த நிலை கஜலட்சுமி, கையில் கொடியுடன் பெண் உருவம், வட்டத்திற்குள் மயில் மேல் பெண் உருவம், நடனமங்கை, நின்ற நிலையில் நடன மங்கை, மனித பறவை கையில் வீணையுடன் மான், கோடாரி, புள்ளியிட்ட வட்டத்திற்குள் அன்னம், புள்ளியிட்ட வட்டத்திற்குள் இருமான்கள், சதுரத்திற்குள் வராகம், வட்டத்திற்குள் அன்னம், புள்ளியிட்ட வட்டத்தின் நடுவில் மீன், மரம், காமதேனு, அனுமன் மலையைச் சுமப்பது, இடது பக்கம் நோக்கி ஓடும் நிலையில் அனுமன், லட்சுமி நரசிம்மர், கையில் வீணையுடன் வாணி, அமர்ந்திருக்கும் காட்சி, மயிலின் பின்னால் சரஸ்வதி வீணையுடன் இருக்கும் காட்சி, வலது பக்கம் நோக்கி நின்ற நிலையில் கொக்கு, இடது பக்கம் நோக்கி நின்ற நிலையில் காளை, இரண்டு யானைகளுடன் லட்சுமி அமர்ந்த நிலை, இடது பக்க அமர்ந்திருக்கும் நந்தி, இடது பக்கம் காளையும், வலது பக்கம் யானையும் நின்ற நிலையில், நின்ற நிலையில் இராமர் கையில் வில் அம்புடன் உள்ளார், அமர்ந்த நிலையில் பிரம்மா, நாயக்க அரசியின் உருவம் (மங்கம்மா?) சிம்மாசனத்தில் அமர்ந்த நிலையில், பக்கம் நோக்கிய நிலையில் படுக்கை வாட்டில் மீன், புருஷா மிருகம், கிளைகளுடன் மரம் (தலவிருட்சம்), இரண்டு தலை உள்ள பறவை (கண்ட பேருண்ட பட்சி), இடது பக்கம் நின்ற நிலையில் சதுரத்திற்குள் பன்றி உருவம், அமர்ந்த நிலையில் ராமர் சீதை, இவர்களுடைய காலின் கீழே அமர்ந்த நிலையில் அனுமன், வலது பக்கம் நோக்கி நின்ற நிலையில் சிங்கம், அமர்ந்த நிலை கணபதி போன்ற பல சின்னங்கள் ஒருபுறமும் மறுபுறம் காசுகளை வெளியிட்ட அரசர்களின் பெயர்களும் இடம்பெறுகின்றன.

  எழுத்துப்பொறிப்புகள்:

  விஸ்வநாதன் (1529-1564), கிருஷ்ணப்பர் (1564-1572), வீரப்பர் (1595-1601), முத்துகிருஷ்ணப்பர் (1601-1609), முத்துவீரப்பர் (1609-1623), திருமலை (1623-1659), சொக்கநாதர் (1659-1682), ரங்க கிருஷ்ண முத்து வீரப்பர், மங்கம்மா (1689-1706), மீனாட்சி (1732-1736) போன்ற நாயக்க அரசர்கள் எழுத்துப்பொறிப்புள்ள காசுகளை வெளியிட்டுள்ளனர்.

  எழுத்தும் மொழியும்:

  மதுரை நாயக்க அரசர் ஆட்சியில் விஜயநகர அரசின் செல்வாக்கு அதிகம் இருந்ததால் தெலுங்கு, கன்னடம், நாகரி, கிரந்தம் ஆகிய எழுத்துக்களை அதிக அளவிலும் தமிழ் எழுத்துக்களை ஒரு சில காசுகளில் ஒரு சில அரசர்கள் மட்டுமே பயன்படுத்தி உள்ளனர். பாண்டிய அரசர்களைப் போல் முழுக்க முழுக்க தமிழ் எழுத்து, மொழியைக் காசுகளில் பொறிக்கவில்லை.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:43:45(இந்திய நேரம்)