தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆதிச்சநல்லூர்

  • சதுரகிரி

    முனைவர் வீ.செல்வகுமார்
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

    சதுரகிரி மலை தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மலைப் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு பளியர் இன மக்கள் வாழ்கின்றனர். பிந்தைய வரலாற்றுக் காலச் சிவன் கோவில் இங்கு அமைந்துள்ளது. மதுரைப் பகுதி மக்கள் இம்மலைக்கு அமாவாசை நாட்களில் நடந்து செல்வது வழக்கம்.

    அமைவிடம்

    விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பிலிருந்து சுமார் 10 கி.மீ வட மேற்கே இம்மலை அமைந்துள்ளது. இம்மலைக்குச் செல்வதற்கு வத்திராயிருப்பு சென்று, பின்னர் மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரத்திலுள்ள தாணிப்பாறை என்ற இடத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிற்கு நடந்து செல்லவேண்டும்.

    மேலும் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திலுள்ள சாப்டூரிலிருந்து இக்கோவிலை மலைப்பாதை வழியாகச் சென்றடையலாம். இப்பாதை ஏறுவதற்குச் சற்றுக் கடினமானது.

    சிறப்பு

    மூலிகை மற்றும் காடுகள் நிறைந்த இம்மலையானது, மக்கள் புனிதச் சுற்றுலா செல்லும் இடமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று மக்கள் இங்குள்ள சிவன் கோயிலில் வழிபடச் செல்கின்றனர். இங்கு சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது.

    இது ஆங்கிலேயர் காலத்தில் சாப்டூர் சமிந்தரின் பகுதியாக இருந்தது. இக்காலத்தில் இக்கோவில் கட்டப் பெற்றிருக்கலாம்.

    சதுரகிரி மலை குளிராட்டிக் குகை ஓவியங்கள்

    இங்கு சில நுண்கற் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள குளிராட்டிக் குகைப் பகுதியில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன . இங்கு பளியர் இனத்தவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த மலைப் பகுதியின் பழங்குடிகளாவர். இவர்கள் மூலிகை மருத்துவம் செய்தும், சிலர் உணவு சேகரித்தும் வாழ்ந்து வருகின்றனர்.

    மேற்கோள் நூல்

    V.Selvakumar, 2000. Mesolithic Settlement Patterns of the Upper Gundar Basin, Post Doctra Thesis, Deccan College, pune.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 13:12:52(இந்திய நேரம்)