தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தெலுங்குச் சோழர்கள் காசுகள்

 • தெலுங்குச் சோழர்கள் காசுகள்

  முனைவர் மா.பவானி
  உதவிப்பேராசிரியர்
  கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

  சோழர்களது ஆட்சி தமிழகத்தில் வலுவிழந்தபின் சோழர்களில் ஒரு பிரிவினர் ஆந்திரப் பகுதியில் ஆட்சி செய்தனர். அவர்கள் தெலுங்குச் சோழர்கள் என அழைக்கப் பெற்றனர். இவர்களும் காசுகளை வெளியிட்டுள்ளனர். அவற்றுள் கண்ட கோபாலன் என்ற எழுத்துப்பொறிப்புள்ள காசுகள் சுட்டத்தக்கன.

  சின்னங்கள்:

  இவ்வரசுகளின் காசுகளாக ஒரு சிலவே கிடைத்துள்ளன. அவற்றுள் ஒருபக்கம் செங்குத்தான சங்கு, சூரியன், சந்திரன் சின்னங்களும் மறுபக்கம் குழல் ஊதும் கோபாலனின் உருவமும் காணப்பெறுகின்றது.

  எழுத்துப்பொறிப்பு:

  “கண்ட” மற்றும் “புசபல” எனும் தமிழ் எழுத்துப்பொறிப்புகளும் ஸ்ரீ எனும் கன்னட எழுத்துப்பொறிப்பும் பொதுவாகக் காணப்படுகிறது.

  கிடைத்துள்ள இடங்கள்:

  திருச்சி, நெல்லூர் போன்ற இடங்களில் இக்காசுகள் கிடைக்கின்றன.

  உலோகம்:

  தங்கம், செம்பு உலோகத்தாலானது

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:45:55(இந்திய நேரம்)