அஃகல் - சுருங்கல் 2208
அஃகலின் அற நெறி 2208
அஃறினைப்பொருளும் அரசனின்றி இராது 2252
அக்கரை 2359
அக்கரை அணைதல் 2036
அக்குரோணி 2307 2364
அகடு - வயிறு 2040
அகத்தியர் - தமிழ்த் தலைவன் 2287
அகத்தியர் - புவி நிலைநிறுத்தல் 2287
- மலை அழுத்தல் 2287
-புனல் குடித்த கடல்தானை,  
-திரு நீங்கிய அயோத்தி (உவ) 2288
அகதிக்குத் தெய்வம் துணை (கருத்து) 2095
அக நகர் 2137
அகம் (மனம்) நிறை அருள் (பா- ம்) 1984
அகம் - பூமி 2287
அகம் விம்மு அன்பு 2018
அகல் வான் 1691
அகலம் - மார்பு 1367
அகவுதல் - ஆடுதல் 1854
அகவு மயில் - மகளிர் (உவ) 1854
அகன் கான் 1612
அகன் புனல் ஆடல் நீத்த 2125
அகில் 2064
அகில் புனைகுழல் 2009
அகலிடு தூபம் - மயிற் பீலி (உவ) 2360
அகிற் புகை - மேகம் (உவ) 1799
அங்கணன் - இராமன் 1580 2046
அங்கணாயகன் 1935
அங்கீ - தீ, நெருப்பு 1571 1863 2239
அங்கி - கற்புடையாரைச் சுடாது  
(தீயும் கொல்லாத் தீவினை -  
மணி) நீரினும் குளிர்தல் 2239
அங்கி மேல் வேள்வி 1863
அங்கியி(ன்) வினை 1571
அங்குரம் - முளை 2098
அங்கை அணை 1855
அச்சம் கொண்டோர் வழி புதைப்பர் 2170
அச்சத்தால் துஞ்சல் 2170
அச்சு - தேர் அச்சு 2354
அசனி - இடி 1920 2168 2313
அசனிக்கார் 1920
அசனி ஏறு உற மறிந்த மராமரம் பரதன் (உவ) 2146  
அசனி ஏறு - வெவ்வுரை (உவ) 2160
அசனி மாமழை (யுகக்கடை) 2313
- நெடும்படை (உவ)  
அசுணமா - இசை அறி விலங்கு 2069
- பாடல் கேட்டு வரும்  
அசும்பு - நீர்க்கசிவு ஊற்று 2081
(அசும்பு பார்த்து -பட்டினத்தார்)  
அசைதல் -அசைவு - சோர்தல் -  
- மெய்ம் மறந்து துயிலல் 1853
அசோகு - அசோகம் - பிண்டி  
- சோகம் - தீக்கங்கு (உவ) 2006
- அசோசில் படிந்த செருத்தி  
- செருந்தி மொய்த்த வண்டு  
(பொற்கொல்லர் வீட்டுக் காட்சி) 2006
அஞ்சு அடுத்த அமளி - பஞ்ச சயனம்  
-‘அஞ்சடுக்கியே’ - பரணி  
- சிறு பூளை, செம்பஞ்சு,  
வெண்பஞ்சு, சேணம், சிறு தூவி 2385
அஞ்சம்பு - மன்மதன் மலர்  
அம்புகள்  
பஞ்சசாயகன் - மன்மதன் 1928
அஞ்சனக் குன்றம் அன்ன  
அழகன்  
பச்சை மாமலைபோல் மேனி 1890
அஞ்சன நா(ஞா) யிறன்ன ஐயன்  
கரு ஞாயிறு போல்பவர் 1977
அஞ்சனம் - மை 1493 1558 1564 1726 1789 1799 1977
அஞ்சனம் என நஞ்சினை இடுவார், 1558 1564
அஞ்சனம் துறந்த நாட்டம்  
- கறை அறக் கழுவிய கால  
வேல் (உவ) 2282
அஞ்சன வண்ணன் 2316
அஞ்சிய மகளிர் கண்  
- வெருவிப் பாயும் கயல் (உவ) 2357
அஞ்சும் (5) அஞ்சும் என்  
ஆருயிர் அஞ்சும் 1614
அஞ்சுதேர் - ஐம்புலன்கள்  
- பேய்த்தேர் 1331
அட்டில் - புகை இழத்தல் 1805
(புல் என் அட்டில் - சங்கம்)  
அடக்கும் ஐம்பொறி 1865
அடக்கும் காட்டும் அடையாளம்  
வாய்ப்புதைவு, தானைமடக்கு 1598
அடக - இலைக்குறி  
(இலைக்கறி விற்பாள்  
மருங்கு)  
-அருந்தும் மெல்லடது  
- அடகென்று கூறி அமிழ்  
தத்தை இட்டார்.  
அடங்கலர் - அடங்கார்  
- பகைவர் 2138
(அடங்கார் மிடல் சாய)  
அடர்தல் - நெருங்கல் 2097
அடல் - வெற்றி 1593
(அடு - அடல் - ஆடல்)  
ஆடல் கொண்டேன்  
அரிதால் ஆடே  
அடவி - காடு 2414
அடிச்சுவடுகள் -FOOD PRINTS 2065
அடித்தலம் - பாதுகை 2510
- முடித்தலம் சூடினான்  
அடிதாழா 1989
அடி தொட்டுவணங்கல் 2403
அடி தொழுது ஏத்தி 2032
அடி நாயேன் 1989
அடி புரை தளிர் 2015  
அடி மிசைத் தூளி தேவர்  
முடிமிசைப் படர்வது 2305
அடியன் அளியன் (பா-ம்) 1858
அடியன்ன கஞ்சம் 1945
அடியுறத்தழுவுதல் 1864
அடியைத் தீண்டி துயில் உணர்த்தல் 1450
அடுக்கும் - தகும் 1348
அடுத்தல் - நேர்தல் 1695
அடை - இலை மி. 213 2090
- பாசடை நிவந்த - சங்கம்  
அடைக்கலப் பொருளை  
வௌவல்(கொடிது) 2204
அடையலர் - பகைவர் 1760
அடையலர் நேயமாதர் கண்மை  
துடைத்தல் 1760
(உறை புகு வேல்)  
அடையாளம் - சுவடு 1857
அடைவரும் - பொருந்தும் 2259
(அடைவு அரும்) - பொருந்தத்தகாதத 2259
அடைவு - முறை 1400
அண்ட கோளம் 1725
அண்டர் - இடையர் 2008
அண்டர் தம் மனை 2008
(ஆவின் கன்றும், ஆனைக் கன்றும் ஆடும்)  
அண்டர் - தேவர் 1367
அண்டர் நாயகன் 1367
அண்ணல் 1362 1622
அண்ணல் வெங்கரி 2304
அண்முதல் - வந்து சேர்தல்  
அணங்கினும் இனியார் 2013
அணங்கு(வி) - துன்புறுத்து 1451
அணிகலன்கள் ஒளி - மின்னல்  
ஒளி (உவ) 2111
அணிகலன் களைந்த மாதல்  
- பூ உதிர் கொம்பர் 2277 ">1493, 2277
அணி சமைத்தல் 1430
அணியர் 1785
அணியன் 1898
அணியிழை - அணியத்தக்க ஆபரணம் 2009
அணியிழை மயில் - சீதை 1998
அணை - நீர்ப் பெருக்கைத்  
தடுப்பது 1365
படுக்கை 1448
அத்தம் -அஸ்தமன கிரி 1842
(அத்த வெற்பு இரண்டு விற்கிடை)  
அத்தமனம் - வருணனை 1842 1973 2017 2083 2468
அத்தன் -அச்சன் - தந்தை 1388
அத்திரம் -அஸ்திரம்  
- படைப்பொது 1589
அத்தையர் - மாமியர் 1878
அதர் - வழி 1826 2014
(கல் அதர் அத்தம் - சிலம்பு)  
அதிர் கடல் வையகம் 2278
அந்தண் புனல் 1684
அந்தணர் 1483 2296
அந்தணர்  
ஆதல், அழித்தல் காரணர் 1416
ஏவல் அரசர் கேட்பர் 1415
ஏவரினும் சிறந்தவர் 1413
முனிய, அருள வல்லவர் 1414
   
மெய்யினும் பெரியர் 1413
அந்தணர்க்கு அன்னம் ஆடை அளித்தல் மி. 206
(அந்தணர் ஆவொடு பொன் (பெற்றால்)  
அந்தணர் பெருமை 1413 - 1416
அந்தணரிடத்து விடை கேட்டல்  
அந்தணரும் முனிவரும் 1788
அந்தணர் உறையுளை அனலி  
ஊட்டல் (மா பாதகம்) 2205
அந்தணன் - பிரமன் 2020
அந்தணாளர் 1414
அந்தணாளரில் அறநெறி  
பிழைத்தல் (பாதகம்) 2201
அந்தணாளன் தாளிணை சென்னி புனை;  
புகழ்; ஏத்து ஏயின செய் 1415
அந்தப் புரத்தின் காப்பு மிகுதி 1782
அந்தம் 1356
அந்தமில் அறிவன் - வசிட்டன் 1325
அந்தமில் குணத்தான் - பரதன் 2143
அந்தமில் சோகம் 1694
அந்தமில் வேதனைக் கூனி 2299
அந்தமில் நலம் 2375
அந்தர் - குருடர் 2011 2388
அந்தர் - நறை உண் வண்டு (உவ) 2011
அந்தர் - தென்றல் (உவ ) 2388
அந்தர்க்கு மற்று ஒருவர் கை தருதல் 2388
அந்தரத்து அமரரும் அழல் 2199
அந்தரத்து அளவும் நின்று  
அளிக்கும் ஆணை 1316
அந்தரம் தீர்ந்து உலகு அளித்தல் 1466
அந்தரம் - ஆகாயம் 1316
தீமை 1518
வானுலகம் 2297
அந்தரத்து ஏற்றுதல் 2297
அந்தர முனிவர் 2245
அந்தரவான்  
அந்திப் போதில் கண்மூடி கை  
குவித்து, தியானம் 2087
அந்தி மாலை இயற்கை நிகழ்ச்சி 779 - 781
அந்தியில் சில பூக்கள் மலர்தல்  
சில குவிதல் 2087
அந்தியை நோக்குதல் 2086
அந்தோ 1515 1661 1681 1715 1893 2023 2434
அப்பாலேற்றுதல் 1978
அப்பு - நீர் 2024
அப்புதல் 2380
அப்புறு கடல் 2024
அம்பரத்தின் அரம்பையர் 2384
அம்பரத்து இன்னமும் தானவர்  
உளரோ 2154
அம்பரம் - திக்கு 1554
விண் 2154 2384
அம்பரத்து நீங்கா அரசு 2437
அம்பன கண்ணவள் 1510
அம்பனைய உண்கண் 1850
அம்பி - ஓடம் 1947 1975 2315 2361
அம்பியின் தலைவன் 1975
அம்பின் விளிம்பில் கரும்பொன்  
இழைத்தல் 2412
அம்பு தாக்குண்ட மான் - மகளிர்  
வருந்தல் (உல) 1803
அம்புகளிடை அஞ்சனம் என  
நஞ்சினை இடல் 1558
அம்புயம் - தாமரை - முகம்(உவ) 2239
அம்மா - வியப்பிடை 2181
அம்மை - வருபறப்பு - மறுமை 1773
அம்மை தீமை 2219
அமரர்க்கு இன்னமுது ஊற்றும் அக்கடவுள் 2495
அமரர் வையம் - விமானம் 2348
அமரேசன் - திருமால் 2020
அமலன் - இராமன் 1994
அமரை - ஆரவாரம் 1445
அமளி - படுக்கை 2381
அமிர்தின் தெளிவு 1927
அமிர்து என கிழங்கு  
காய்களை அயிலல் 2342
அமிழ்தனாள் 2087
அமிழ்து உணக்குழுமு  
அமரர் - அரசர் வெள்ளம் (உவ) 1337
அமுதம், யாழிசை, கட்டி  
போன்ற மதுரித்து எழு கிளவி 1930
அமுதளவிய சீதக் கார் 1999
அமுதினும் இனியாள் 2006
அமுது அன்பு 1939
அமுது - உணவு 1966
அமுதுகுதல் 2038
அமுது செய்தல் 1940
அமுதூட்டினவன் அடகுஉண்ணுதல் 1952
அமுதத்தையும் அமரர்க்கு ஊட்டியவன் 1952
அமை - மூங்கில் 2049
அமைச்சர் 1421
அமைச்சர் - அறுபதினாயிரவர் 1323
அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றல் 1421
அமைச்சர் - தசரதன் உணர்  
வோடு ஒத்தவர் 1318
நல்வினை என உதவுபவர் 1322
மருத்துவன் இயல்பின்  
எண்ணுவர் 1322
அமைத்தல் 2020
அமைதல் - உடன்படல் 1336
உதவுதல் 2314
அமைதி - ஏற்பாடு 2506
சமயம் 2443
தகுதி 2022
ஒடுங்கும் கடல் (உவ) 1922
அமை நின்று ஆடும் அரவுரி -  
அயோத்தி மாளிகைக் கொடி (உவ) 2049
அயங்கெழு வேள்வி 2155
அயம் - குதிரை 2155
அயர்வான் நிலை 1641
அயர்வுயிர்த்தல் - பெருமூச்சு விடல் 2433
அயர்வுறுதல் - தளர்ச்சி அடைதல் 2352
அயலவர் நாவில் நீர்வர, தாமே  
தமியர் உணர் 2213
அயலவர் பசிக்க, தான்மட்டும்  
உண்ணல் 2207 2213
அயலார் உறு பீழை கண்டும்  
தீரா மனத்தள் 1748
அயனுக்கும் அரும் பெறல்  
தீர்த்தும் 2029
(திரிவேணி சங்கமம் - முக்கூடல்)  
அயா உயிர்த்தல் -இளைப் பாறல் 2358
பெருமூச்சு எறிதல் 2429
அயா உயிர்ப்பு - துயர் நீக்கம் 2359
(அப்பாடா)  
அயில் - கூர்மை 1850 2038 2092
- வேல் 2396
அயிலம்பு - கண் (உவ) 1850
அயிலுதல் - உண்ணல் 2342
அயிற்படை 2396
அயோத்தி - ஊழிவாழ் திருநகர் 2139
(ஒடுக்கம் கூறார்)  
திரு நீங்கிய பாற்கடல் 2138
உயிர் நீத்தது ஒத்தல் 1817
தெய்வ மா நகர் 1840
அயோத்தி (உவமை )- கடல் 2288
கவுத்துவ மனணு 1434
பாற்கடல் 2138
விண் உலகம்  
அயோத்தி நகரம் - விண்  
உலகம் வேறுபாடு  
காணல் அரிது 1444
தயரதனை போலாற்று 1817
குறுமுனி பருகிய கடல்  
போல் ஆதல் 2288
அயோத்தி மா நகர் 2288
அயோத்தி மூதூர் - திருநகர் 1972
அயோத்தியர் ஆண்டகை 2035
அயோத்தியில் கொடிகள்-  
கதிரவன் தடுத்து ‘உண்டு போக’  
என அழைக்கும் போலும் 2131
அயோத்தியில் கொடை முரசு -  
இரவலர் அழைக்கும் 2132
அயோத்தியில் பிறந்த பின்பும்  
பிரிவிலள் ஆயினள் 1824
அயோத்தியில் திருமால்  
கோயில் 1404 1405 1428 1576
அயோத்தியின் காவல் தெய்வம்....  
அரக்கர் பொய்வினைக்கு உதவுபவர் 1887
அரக்கர் - மலை (உவ) 1826
அரக்கரின் மால்வரை (உவ) 1826
அரக்கின் உருக்கு அழல் 1826
அரக்கு - செம்பஞ்சு (அரக் குண்ட சேவடி) 1826
அரக்கு - கொம்பரக்கு 1826
அரக்கு(வி) - தை 1826
அரக்குதல் - உறுத்தல் 1826
அரக்குண்ட சேவடிப் போது 1826
அரங்கு 2125
அரங்கு ஆடல் நீத்த 2125
அரசச் செல்வம் நிச்சயம் அன்று 1338
(குடை நிழல் இருந்து)  
அரச மாளிகை மேரு 1383
அரசர் ஆனை ஊர்ந்து  
வெண்குடை நிழற்றச்  
செல்வர் (உவ) - கதிரவன்  
மேகம் ஊர்ந்து வெண்மதி  
மீதிருக்கச் செல்லல் 2274
அரசர் அவனி மாதை மணத்தல் 1341
அரசர் அறம் கடவாது  
மெய்யின் நிற்றல் 1424
அரசர் - உலகுக்குக் கண் 1348 2195
அரசர் - பார்மகள் கண்ணுறும்  
கவினர் 1464
அரசர் - போரில் இறத்தலேசிறப்பு 1904
அரசர் - யாவர்க்கும் உயி்ர் 2250 2265
அரசர் - திறைப்பொருளை  
மறையவர்க்கு ஈதல் 2155
அரசர்க்கு - ஆயுதம் அன்பு 1426
-ஈகையும், இன்சொலும் 1424
- உண்மை வேண்டும் 1423
- உரிய மாத்துயர்  
- காலமே கண் 1425
- சூரியன் (உவ) 2273
- வேள்வியினும் அருளே  
- வேண்டும் 1423
அரசர்க்கு அரசு 1636
அரசர்க்கு ஆற்றல் 1421
அரசரில் அழிவடையாதவர் 1424
   
அரசரில் பிறந்து அரசரில்  
வளர்ந்து அரசரில் புகுந்த  
பேரரசி - உரை செயக் கேளான் 1467
அரசரில்லாத நாடு எங்கும் இல்லை 2251
அரச வேலை 2227 2469
அரசவைக்கு உள்ளம்  
சொல்லுதல் 2256
அரச வேலை 2227 2469
அரசவைக்கு உள்ளம்  
சொல்லுதல் 2256
அரசரைக் காணச் செல்வோர்  
(ஆயுதமின்றி) தனியே செல்ல வேண்டும் 1962
அரசவையில் மகளிர் ஆடல் 1594
அரசன் இறந்தது கேட்ட பரதன்  
செயல்கள் 2149 - 2157
அரசன் உடல்; வையம் உயிர் 1423
அரசன் மூத்த மகனே உலகாள  
உரியன் 2259
அரசன் தன் ஆணை 1623
அரசன் தேவியர்  
அறுபதினாயிரர் 1779
அரசன் மெய்யில் திரிவான்  
என்னில் இம்மா உலகத்து  
உயிரோடு வாழ்வு உசுவேன் 1647
அரசன் மனம் அனையான் 1361
   
அரசன் இருக்க இராமன் முடி  
ஏன்றமை 2262 2491
அரசன் இல்லாத நாடு (உவ)  
- உயிரில்லா உடல் 220
- உடைகலம் 2253
- கதிரவன் இல்பகல் 2250
- மதி இல்லா இரவு 2250
அரசன் என்று தசரதன் கூறத்  
தகான் 1881
அரசாக்கி பின் அடுத்தது புரிசு 1359
   
அரசாட்சி விடம் 1337
அரசாளுதல் நல்லறம் புரக்க 1381
   
அரசியல் இடும்பை 1377
அரசியல் எய்தி ஆகும் என்று  
சிறு தொழில் இயற்றியவன் 2209
அரசிளங் கோளரி -சத்துருக் கன் 2139
அரசு அமைச்சர் வழிநிற்றல் வேண்டும் 1421
அரசு - இராமன் மக்கட்கும்  
தம்பிக்கும் அன்றி பிறர்க்கு ஆகாது 1482
அரசு குற்றம் பயக்கும் 1733
அரசு தம்தமக்கு உற்றது எனத் தழைத்தல் 1388
அரசு தாங்கு எனக் கேட்ட  
பரதன் நிலை 2255
அரசு - பாரம் (பரம்) 1381
அரசு புரியுமாறு தயரதன்  
கூறியபோது இராமன் காதல்  
உற்றிலன் 1382
அரசு துறத்தலில் மகிழ்  
இராமன் - வண்டி ஹபுட்டு  
அவிழ்த்து விடப்பெற்ற  
காளை (உவ) 1603
அரசு யானைப்பிடர் மீது  
பிச்சம், கவிகை நிழற்ற இருப்பது 1338
அரசைக் கைக் கொண்டது என் குற்றம் 1733
அரஞ்சுட அழல் நிமிர் வேல் 2415
அரத்த ஆம்பல் (அரக்காம்பல்  
வாய் நெகிழ) 1782
அரத்த வேல் -அராவு வேல் 1366
அரத்த வேல் - செவ்வரிபடர் கண் (உவ) 1366
அரத்தை - துன்பம் 1497 1845
(அரந்தை கெடுத்து வரம்  
தரு - சிலம்பு)  
அரம் - முட்கள் 1768
அரம் சுடுதல் -அரத்தால்  
அராவப்படுதல் 2415
அரம் பயில் சுரம்  
அரம்பையர் - வான் அர  
மகளிர் 2066 2382 2384
அரம் பொருத வேல் 1768
அரமியம் - நிலாமுற்றம் 1366
அரவு - அர - அரா - அரவம்  
பாம்பு 2312
இடிக்கு அஞ்சும் 1364 2233 2433
(இறுவரை மேல் பாம்பு சவட்டி)  
மணி இழப்பின் மாழ்கும்  
அரவு உரி -துகிற் கொடி (உவ) 2049
அரவின் சுடுஉண்டார்,  
அமிழ்தம் பெற்று உய்ந்தார் -  
இராமனைப் பிரிந்த துயர  
மாந்தர் நகர் சென்றான்  
என்று அறிந்து உய்ந்தார் 1921
அரவு - மதமா அடக்கு வயிற்றது 2049
அரவு - எயிற்றிணூடு அமுது உகல் 2038
அரவைப்போல் நோக்கல் 1959
அரற்றினான் 2148
அராகம் - வேட்கை - காம வேட்கை 1548
அரா அணுகும் போதும் ஒளி  
விரி திங்கள் - துன்பம்  
அணுகும்போதும் கண்  
உறங்கு கைகேயி (உவ) 1451
அரா இடிக்கு இடைதல் -  
பரதன் வசிட்டன் சொல்  
லுக்கு வருந்தல்(உவ) 2233
தன் நிலை குறித்து சுமித்திரன்  
வருந்தல் (உவ) 1864
அராவின் வேகம்தன்னால்  
செயல் அடங்கிய வேழம் -  
கைகேயியால் நிலை தளர்ந்த  
மன்னன் (உவ) 1505
(தலைக் கொண்ட ஏழாம் வேகம்)  
அராவுதல் - வருத்துதல் 1548
அரி - சிங்கம் 1678
- வண்டு 2283  
அரி (திருமால்) கேழலாய்  
(பன்றி) இளை (பூதேவியை)  
ஏந்தினான் 2493
அரிகுநர் - 2122
அரி சுமந்த பீடம் -அரியணை  
அரிய நூல் 1319
அரியினம் ஆர்க்கிலாக் கமலம் -  
பரிபுரம் ஆர்க்கிலாச் சீறடி (உவ) 2283
அருக்கனே அனைய அரசர்  
கோமகன் (பரதன்) 2164
அருகர் - பக்கல் 2190
அருகு -அணித்து 2092
அருங்கடை யுகம் 2313
அருங்கலம் 1699
அருடருவாரி - அருள் தரு வாரி 2340
அருத்தி - ஆசை 1378 2018 2374
அன்பு 1435
- மகிழ்ச்சி 2018  
அருந்ததி (கற்பிற் சிறந்தாள் -  
வசிட்டன் துணைவி) 2006 2061
அருந்ததி அனையாள் 2006
அருந்ததிக்குச் சீலம் காட்டியவள் 2061
அருந்தல் - பருகல் 1337
அருந்தவத்தவர் - அருந்துணை  
இழந்த அன்றில் பேடை -  
கணவனை இழந்த கோசலை 1901
அருந்துயர்ப் பெரும்பரம் - பூமி  
தாங்குவது 1381
அருந்தோரான் சம்பரன் 1906
அருநெஞ்சம் கூறாகி ஓடாததே குறை 1705
அருநெறி 2075
அருப்பம் - அல்பம் - அற்பம் 2141
அரும்பனைய கொஙகை 1850
தாமரை, கோங்கரும்புகள்  
அரும்பெருமூப்பு 1374
அரும் பெறலன்பு 2094
அரும்பொடி 2346
அருமை நோன்புகள் 1625
அருமையின் உயிர் வருதல் 2433
அருவி பாய்கண் 1892
அருவி சோர் குன்று - குகன் (உவ) 1975
அருவி மால்வரை (பா-ம்) 2048
அருவியில் அரம்பையர் நீராட  
அது பரிமளம் கமழ்தல் 2070
அருவியில்மணிகளோடு  
அரம்பையர் சூடிக்கழித்த  
கற்பகமலர்கள் கலந்து வருதல் 2066
அருவினை வென்றோர்  
அருள் தருவாரி அன்னசெவ்வழி  
உள்ளத்து அண்ணல் - பரதன் 2340
அருள் - தொடாப் புற்றாது  
வருவது (அளி - தொடர்பு  
பற்றி வரும்) 2148
அருளக் கருதுற்று 1636
அருளால் வரும் செல்வம்  
அருளிருக்கும் பெருந்  
தாமரைக் கண் கருமுகில் 1918
அருளிருப்பின் வேள்வி வேண்டுமோ? 1423
அருளில் நெஞ்சினான் 2199
அருளின்றி அன்பில்லை 1417
அருளுதல் - அருள் கொண்டு  
காட்டுதல் 2016
‘அருளுதிர்’ - விடை கேட்டல் 1985
‘அருளுவீர்’ - சொல்வீர் 2163
அருளைச் சூடல் 1324
அருளோடு அவனி ஆளல் 1589
அல் - இரவு 1886 1954 1957
அல்கல் - தேர்த்தட்டு, பாம்  
பின் படம் (உவ) 2076
அல செறி்ந்தன்ன நிறம் 1954
அல்லலின் அழுங்குதல் 2265
அல்லலின் உள இன்பம்  
அணுகலும் உள 2025
அல்லை ஆண்டு அமைந்த  
மேனி அழகன் 2344
அலக்கண் - பெருந்துன்பம் 1508
அலகம்பு 1928
அலகை - பேய் 2407
அலகைகள் நாடகம்  
நடிப்பன 2407
அலங்கல் - மனம்  
தவித்தல் 1499
மாலை 1361 1364 1367 1372 1410 2415
அலங்கல் மன்னன் 1361
அலங்கல் மாமுடி 2260
அலங்கு 2411 2412
அலங்குதல் - அசைநல் 2411
அலங்கு நீர் 2357
அலசுதல் - வருந்துதல் 1374
சோர்தல் 1854
அலதகப்பஞ்சு - செம்பஞ்சு  
அலந்தலை - கலக்கம் 1507
சஞ்சலம் 1507
மாறாட்டம் 1507
(இவள் பேச்சும் அலந்தலை - பெரியாழ்வார்)  
அலம்புதல் - அசைதல் 2077
அலைதல் 2077
ஒலித்தல் 1554
(அலம்பு வார் குழல்; புலம்பு  
வார் கழல்)  
அலமரல் 1491
அலர்கதிர் 2071
அலவுதல் - அசைதல் 2070
அலறுதல் - கதறுதல் 1679
அலைக்கு உத்தரீயம் (உவ) 2353
அலைபுனல் கிடந்தன அனைய  
பாம்பு 2040
அலையின் கடல் (பா-ம்) 1637
அவ்வை - அவ்வா - அம்மா - தாய் 1494
அவண் -அவ்விடம் 1497
அவந்தன் 1461
அவத்தன் - வீணாய்ப்  
போனவன் 1461
- அவதி 1923
அவம் - வீண், தீங்கு 1903
அவலம் 1644 1866 1874 1880 2423
அவலம் ஈது என எழுதிய  
படிவம் (பரதன்) 2423
அவலம் தரு நெஞ்சினன் மி.216
அவலித்தல் 1836 2452
அவனி காவலர் 1781
அவனி மாது எனும் மகள் 1341
அவனியில் கங்கை  
தந்தோன் 1586
அவித்த ஐம்புலத்தவர் 2266
அவிப்பரும் வெம்மை 2395
அவியமுது 1432
அவுணர் - இருள் (உவ) 2083
அவுணர் 1331 2083 2170 2251
அவுணர் தேர்பத்தும்  
வென்றவன் 1331
அழகன் - இராமன் 1789 1890 2021 2344
அழகன் 1890
அழகனைப் பொன் போர்த்  
தன்ன இளவல் (இலக்குவன் 1890
நம்பி - நாயகன் ஒப்பான் 2326
அயல் நின்றான் தம்பி ஒப்பான் 2326
இராமன், இலக்குவன், பரதன்,  
சத்ருக்கன் - ஒத்த தோற்றத்தர்  
அழகிது இவ்வன்வு 1791
அழகிது என் அடிமை 2345
அழகு - நறவு (உவ) 1362
அழகு, எழில் கெடுதல் 1817
அழகு - இயற்கை  
எழில் - புனைவு  
அழகோ இது 1637
அழல் - ஒளி 2415
அழல் உற்ற நெய் 1709
அழற் சிகை தீப்பிழம்பு 2126
அழிகறவுள் தும்பி 1955
அழிதர - நிலை அழிய 2357
அழிதல் - பெருகல் 2268
அழியா அழகு 1926
அழிவரும் அரசியல் 2209
அழுங்கல் 1800 1855 1864
அழுங்குதல் 2430
அழுத குரல் 1694
அழுதவோசை விண்உறல் அழுது  
அவலித்தல் -புலம்பல் வாயி  
லாய்ய வருத்தத்தை வெளிக்காட்டல் 1836
அழுவம் - பெருக்கு 1949 2353
பரப்பு 2353
அள்ளல் - சேறு 1666
அள்ளல் பள்ளப்புனல்  
கடல் 1666
அளக்கர் - அளக்க + அரு-  
கடல் 1458 1569
அளக்கர் இரும்பரப்பு -  
உலகம் 1910
அளக்கர் வாழ்(ய்) முத்தம் 1569
அளகம் - கூந்தல் 1929
முன் மயிர் 1492 2012
அளகம்தரு நுதலாள் 1929
அளகவல்லி 1774
அளகவல்லியில் கொழுந்து எரி  
உற்றது எனத் துயர் கூர்தல் 1774
அளக வாணுதல் 1492
அளம் - உப்பளம் 1910
அளவில் சுற்றம் 2296
அளவின் மூப்பு 2074
அளவுதல் - பொருந்துதல் 1643
தெளிதல் 1643
அளவை - பிரமாணம் 1390
அளவை சால் வாய்மை 1390
அளாவுதல் - கலத்தல் 2047
அளி - வண்டு 1927 1933
குழல் (உவ) 1927
அளிக்கும்நாயகன் 2056
அளிக்கும் 1316
அளிக்குலம் 2389
அளிக்குலம் மதம் உண்ணும் 2389
அளித்திரு - பாக்யலக்ஷ்மி 2143
அளைந்து தழுவுதல் 2117
அற்(ல்) காணில் கண்டனைய  
அழகமைந்தம மேனி - குகன் 2328
அற்கு ஆணி 2328
அற்புதன் - இராமன் 1567
அற்றம் - களங்கம் 1962
அற்றல் காத்தல் 1353
அற்றொடுத்த அன்ன குஞ்சி 1957
அறங்கள் போற்றுதல் 2263
அறக் குணித்தல் 1320
அறங்கெட நயத்திரோ 1792
அறங்கெட முயன்றவன் 2199
அறத்தின் சிறப்பு 1868
அறத்தின் மூர்த்தி அவதரித்தான் 1349
அறத்தை வாளிற் கொன்று  
தின்னல் 2475
அறத்தின் நின்றேகல் 2099
அறத்தினூஉங்கு கொடிது  
எனலாவது  
ஒன்றில்லை 1358
அறத்தைக் கைவிடாமை வீரர் குணம் 1868
அற(ம்) நிறுத்தத் தோன்றினான் 1769
அறநெறி அகற்றி பொருள்  
வெஃகு மன்னன் 2208
அறம் மறந்தவன் 2203
அறம், அருள், மெய் அரசர்க்கு  
இன்றியமையாதன 1423
அறம் இராமனைத் தொடர்ந்து  
ஏகல் 1606
அறம்கொடிது எனல் 1358
அறம் துறவாதவரே சூரர் 1868
அறம் நிரம்பிய அருளுடை  
அருந்தவர் 1476
அறம் பாலித்தல் 1916
அறமாற்றலர் வாழ்வு - பாறி  
வீந்த செல்வம் (உவ) 2393
அறமும் அருளும் 2149 2426
அறமும் துறவும்துணை 1323 1417 2444
அறமெனக்கு இலையோ 1618
அறல் - குழல் (உவ) 1927
அறல் புரை குழல் 2066
அறிஞர் தத்துவ ஞானத்தைச்  
சோகத்தால் மறத்தல் அறிவன் 1324
அறிவு - இராமனிடத்து ஈடுபாடு 1365
அறிவெனும் பெரும்புனல் 1365
அறிவை நோக்கினான் 2006
அறுபதினாயிரம் - அமைச்சர்  
அறுபதினாயிரம் -ஆன்டு  
ஆண்டவன் 1326
அறுபதினாயிரம் - மாதர் 1912
அறுபதினாயிரம் -அக்குரோணி  
சேனை 2364
அறைகழல் குன்றவர் 2067
அறைதல் 1677
அன்பத்துக்கு எல்லை உண்டோ 2345
அன்பன் 2326
அன்பான் மெலியின் உலகம் கொள்ளாது  
அன்பில்லாவிடின் ஐம்பொறி  
அடக்கமும் பயனில்லை  
அன்பின் இல்லதோர் ஆக்கம்  
உண்டாகுமோ 1422
அன்பின் தறுகண் பிறிது இல்லை 1909
அன்பின் இறைஞ்சுதல் 1963
அன்பினாரைப் போக்குவது அரிது 1857
அன்பினால் அமைந்த காதல் 1967
அன்பினால் அழுதல் 2218
அன்பினால் ஆரமு ஊட்டுதல் 1939
அன்பினால் கொணர்ந்த உணவு  
அமிர்தினும் சீர்த்தது 1967
அன்பினால் முலைப்பால்  
உகுதல் 2219
அன்பினால் பகை  
வெல்லல் 1426
அன்பினோடு அறிவித்தல் 1388
அன்பு உடையார் போல்  
அழுகின்றேன் 2183
அன்பு கொடிது எனல் 1909
அன்புடையோரின் பெயர் கேட்க  
உணர்வு வருதல் 1643
அன்பும் அறனும்  
அன்பெறும் அளக்கர் 1458
அன்பெனும் ஆரமுது 1939
அன்பே வலிமையைத்  
தரும் 1892
அன்றில் துணைபிரிதல் 1807 1901
அன்றுதல் - பகைத்தல் 2008
அன்னக்கதி - நாவாய் (உவ) 1986
அன்னந் துயில் வதி தண்டலை 1932
அன்னப்பேடு - சிறையிலதாய்  
கரை துன்னல் - ஓடம் கரை  
சேரல் 2372
அன்னம் -சோறு மி.206
-பறவை 1933 2348
அன்னம்மம -சீதையின்நடைக்கு  
அஞ்சி ஒதுங்கல் 1945
அன்ன மென்னடை 2012
அன்னர் - அத்தகையர் 1345
அன்னாய் - தாயே - வசிட்டன்  
விளி 1641
(ஏம்மா என்ன நடந்தது - வழக்கு)  
அன்னை 1624 2258
அன்னை முதலியோர் இடர்  
உறாவகை உன்னை  
உதவு 1755
அன்னையார் எனக்கு அழகு  
(நன்மை ) செய்தவா(று) 2236
அன்னையின் வரத்தின் வந்த  
அரசு 2254
அனகன் - குற்றம் இலி 2046
அனங்கன் - ந+அங்கன் -  
உருவலி 2294 1365 1579
அனந்தர் துயில் 1450 1551
மந்த ஒலி 1551
மனச்சோர்வு 1551
அனந்தல் - அனந்தர்  
அனந்தல் - ஆதிசேடன் 1328
பூமி சுமப்பவன், இரும்பியலான்  
அனல் செவியில் தொடர்தல் 1613
அனலி - தீ 2205
அனிகம் - சேனை -அனிகராசி 2270 2394
அனிக வேலை 2415
அனுக்கம் -அனுங்கு(வி) - துயரம் 1546
அனைவரும் ஒன்றாகி இராமன்  
உருக்கொண்டு தேரில் செல்லுதல் 1577
அனைய - அத்தகைய, அந்த 1829 2082

 
அகரவரிசை